உள்ளடக்கத்துக்குச் செல்

47ஏ பெசன்ட் நகர் வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
47ஏ பெசன்ட் நகர் வரை
இயக்கம்கே. கௌதம் கிருஷ்ணா
தயாரிப்புஎஸ். இராஜன்
எஸ். நேருராஜ்
கதைகே. கௌதம் கிருஷ்ணா
இசைதேவா
நடிப்புஅப்பாஸ்
சங்கீதா
ரவளி
ஒளிப்பதிவுஏ. கே. நடராசன்
படத்தொகுப்புவி. எம். உதய சங்கரன
கலையகம்இராஜா அண்ட் இராஜு அசோசியேசன்ஸ்
வெளியீடுசூலை 21, 2006 (2006-07-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

47ஏ பெசன்ட் நகர் வரை (47A Besant Nagar Varai) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கௌதம் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் அப்பாஸ், சங்கீதா, ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சனகராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். 1997 ஆம் ஆண்டில் படத் தயாரிப்புத் தொடங்கிய பின்னர், தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தினால் 2006 ஆம் ஆண்டில் கலவையான விமர்சனத்துடன் படம் வெளியானது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படமானது மனசுக்குள் வரலாமா என்ற பெயரில் 1997 அப்பாஸ், சங்கீதா, ரவளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தயாரிப்புப் பணி தொடங்கியது. படத்தின் பெயரானது ஆரம்பத்தில் அஜித் குமார் நடிக்க வசந்த் இயக்குவதாக இருந்த மற்றொரு படத்துடன் தொடர்புடையது. ஆனால் அந்தப் படம் பின்னர் கைவிடப்பட்ட பிறகு, கௌதம் கிருஷ்ணா இந்த தலைப்பைத் தேர்ந்து எடுத்தார்.[3] இருப்பினும், படத்தின் தயாரிப்பு பணிகளானது சிக்கல்களை சந்தித்து, பணிகள் நிறுதப்பட்டன. 2005 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர்கள் எண்ணியல் ஜோசியத்தின் அடிப்படையில் இப்படத்தின் பெயரை 47A பெசன்ட் நகர் வரை என்று மாற்றி படத் தயாரிப்புப் பணிகளைப் புதுப்பித்து, படத்தை வெளியீட்டிற்கு தயார் செய்தனர்.[4]

இசை

[தொகு]

படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார். 1998 மார்சில் வெளியிடப்பட்ட படத்தின் பாடல்களில் "அனார்கலி" பாடலானது விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றது.[5][6]

வெளியீடு

[தொகு]

இந்த படம் 2006 இல் வெளியிடபட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. https://www.youtube.com/watch?v=exEShI_hr68
  2. http://www.indiaglitz.com/47-a-besant-nagar-varai-tamil-movie-review-7589.html
  3. "Archived copy". Archived from the original on 31 March 2009. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Archived copy". Archived from the original on 17 February 2017. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. http://www.geocities.ws/CollegePark/Den/3400/sivaSELECTIONS98.html
  6. https://www.jiosaavn.com/album/manasukkul-varalama/Drc2Kb5qSzk_[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=47ஏ_பெசன்ட்_நகர்_வரை&oldid=3941438" இலிருந்து மீள்விக்கப்பட்டது