உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுதாவூர் ஏரி

ஆள்கூறுகள்: 12°41′00″N 80°08′47″E / 12.6832°N 80.1465°E / 12.6832; 80.1465
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுதாவூர் ஏரி
பாறைமேல் ஆள்காட்டிகள் சனவரி, 21
சிறுதாவூர் ஏரி is located in தமிழ் நாடு
சிறுதாவூர் ஏரி
சிறுதாவூர் ஏரி
அமைவிடம்காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்12°41′00″N 80°08′47″E / 12.6832°N 80.1465°E / 12.6832; 80.1465
வடிநில நாடுகள்India

சிறுதாவூர் ஏரி (Sirudavoor Lake) என்பது தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்த்தடங்களைக் கொண்ட ஒரு ஏரியாகும். இந்த ஏரி வங்காள விரிகுடாவிற்கு அருகில் சோழ மண்டலக் கடற்கரைக்கு அருகில் உள்ளது. இது சென்னை நகருக்கு தெற்கே தோராயமாக 51 கிலோமீட்டர்கள் (32 mi) தொலைவில் உள்ளது. இந்த ஏரி பல பறவை இனங்களின் வசிப்பிடமாக உள்ளது. குளிர்காலத்தில், புலம்பெயர்ந்து பல பறவை இனங்கள் இங்கு வருகின்றன.

தெற்கே பார்க்கும் போது ஏரியின் தோற்றம், சனவரி 21

சூழலியல்

[தொகு]

சிறுதாவூர் ஏரியானது பாசனத்திற்கும், மீன்பிடித்தலுக்கும் பயன்படுத்தப்படும் ஏரியாகும். இந்த ஏரிக்கான நீர்வரத்து மழைநீரை நம்பியுள்ளது. இந்த நன்னீர் ஏரியானது, திறந்த புல்வெளி, அரிதான உலர் புதர்கள், நாணல் படுக்கைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஏரியானது நாமத்தலை வாத்து, குள்ளத்தாரா போன்ற நன்னீர் வாத்துகளுக்கு பெயர் பெற்றது. 110 க்கும் மேற்பட்ட உள் நாட்டு மற்றும் புலம்பெயர் பறவை இனங்கள் இதுவரை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 சனவரியில் நடந்த ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் 84 பறவை இனங்கள் இங்கு கணக்கிடப்பட்டன [1] சிவப்பு மூக்கு ஆள்காட்டி மற்றும் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி ஆகிய இரண்டு பறவைகளும் அருகிலேயே காணப்பட்டன.

இங்கு வசிக்கும் பறவை இனங்களில் பச்சைப் பஞ்சுருட்டான், கல்லுக்குருவி, சாம்பல் தலை வானம்பாடி, நெல்வயல் நெட்டைக்காலி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, குளத்துக் கொக்கு, கொக்கு, கல் குருவி, சிரல், கார்வெண் மீன்கொத்தி , வெண்தொண்டை மீன்கொத்தி, பட்டாணி உப்புக்கொத்தி, செம்பிட்டத் தில்லான், வைரி, வெள்ளைக்கண் வைரி, செங்கழுத்து வல்லூறு, ஓணான் கொத்திக் கழுகு, தூக்கணாங்குருவி, கருங்கொட்டு கதிர்க்குருவி, கதிர்க்குருவி, பனங்காடை, சாம்பல் கதிர்க்குருவி ஆகியவையும் அடங்கும்.

குளிர்கால மாதங்களில் நீலவால் பஞ்சுருட்டான், சிற்றெழால், மஞ்சள் வாக்டெயில், தகைவிலான், அன்றில், இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் தோல்குருவி, அகலவாயன் பூஞ்சைப் பருந்து, சாதா உள்ளான் பொரி உள்ளான், பச்சைக்காலி போன்ற பறவைகள் காணப்படுகின்றன.

செங்கழுத்து வல்லூறு, ஆகஸ்ட் 11

சிறப்பம்சங்கள்: கல் குருவி இங்கு இனப்பெருக்கம் செய்வது பதிவு செய்யப்பட்டுள்ளனது. செங்கழுத்து வல்லூறு, ஓணான் கொத்திக் கழுகு போன்ற அசாதாரண கொன்றுண்ணிகளையும் இங்கு காணலாம்.

அமைவிடம்

[தொகு]

ஏரியின் வடகிழக்கு எல்லையில் சிறுதாவூர் கிராமம் அமைந்துள்ளது. 2011 இல், கிராமத்தின் மக்கள் தொகை 2,309 என்று இருந்தது. கிராமத்தில் பெண் விகிதம் 983.7/1,000 என்று இருந்தது. இது சென்னை நகருக்கு தெற்கே தோராயமாக 51 கிலோமீட்டர்கள் (32 mi) தொலைவில் உள்ளது.

காட்சியகம்

[தொகு]

ஏரியும் சுற்றுப்புறங்களும்

[தொகு]

உள்நாட்டுப் பறவைகள்

[தொகு]

குளிர்காலத்தில் வலசைவரும் பறவைகள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prince, Frederick (25 Jan 2020). "The answer, my friend, is flapping in the wind". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/the-answer-my-friend-is-flapping-in-the-wind/article30652107.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுதாவூர்_ஏரி&oldid=3876388" இலிருந்து மீள்விக்கப்பட்டது