உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்
இந்தியாவின் திருநெல்வேலி அருகில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. melanocephalus
இருசொற் பெயரீடு
Threskiornis melanocephalus
(Latham, 1790)

இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் அல்லது கருந்தலை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis) இப்பறவை அரிவாள் மூக்கன் என்ற இனத்தைச் சார்ந்த ஒரு பறவையாகும். இதன் குடும்பப்பெயர் திரிச்கொனிதிடெ (Threskiornithidae) என்பதாகும். இந்தியாவில் தமிழ் நாட்டுப்பகுதியைச் சார்ந்த பறவையான இது இந்திய துணைக் கண்டப்பகுதி, தென் மேற்கு ஆசியப் பகுதி, வடக்கு இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மேலும் ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளில் பரவியுள்ளது. பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகிறது. நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்துள்ள புல்வெளிகளில் காணப்படும் பூச்சிகள், சிறிய தவளைகளைப் பிடித்து உட்கொள்கிறது. மென்மையான தனது பாதங்களைக் கொண்டு குறைவான நீர் நிலைகளின் தனது வளைந்த அலகால் உணவுகளைப் பிடிக்கிறது. தனது உணவைத் தேடும்போது சன்னமாக ஒலி எழுப்புகிறது.இவற்றில் ஆண் பறவை 75 செமீ உயரம் வரை வளருகிறது. உடல் முழுவதிலும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் இதன் அலகு மட்டும் கருமையான நிறம் கொண்டு காணப்படுகிறது.

படக்காட்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Threskiornis melanocephalus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேலும் படிக்க

[தொகு]