பச்சைக்காலி
பச்சைக்காலி | |
---|---|
![]() | |
Summer plumage, Standlake, Oxfordshire | |
![]() | |
Winter plumage, Laem Phak Bia, Thailand Song and calls, recorded in west Sutherland, Scotland | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | Scolopacidae |
பேரினம்: | Tringa |
இனம்: | T. nebularia |
இருசொற் பெயரீடு | |
Tringa nebularia (Gunnerus, 1767) |
பச்சைக்காலி (Common Green Shank) என்பது ஒரு வகை உள்ளான் ஆகும். இது உள்ளான்களிலேயே உருவில் பெரியது. இந்த உள்ளான் கரையோரப் பறவை வகையினைச் சார்ந்தது.
பெயர்கள்[தொகு]
தமிழில் :பச்சைக்காலி ஆங்கிலப்பெயர் :Common Greenshank அறிவியல் பெயர் :Tringa nebularia [2]
உடலமைப்பு[தொகு]
இதனுடைய உடல் நீளம் 36 செ.மீ. வரை இருக்கும். இது பச்சை நிற அலகினையும் கால்களையும் கொண்டது. உள்ளான்களிலே உருவில் பெரியது. சாம்பல் தோய்ந்த பழுப்பு நிற உடலைக் கொண்ட இதன் தலை, பின் முதுகு, பிட்டம், வால் மார்பு, வயிறு ஆகியன வெண்மை நிறம் கொண்டவை.
காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]
இவை குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதத்தில் வலசை போகத் தொடங்கும். இதனைத் தமிழகம் எங்கும் ஏரி, ஆறு இவற்றின் படுகைகளிலும் கடற்கரைகளிலும் காணலாம். தனித்தும் மூன்று முதல் ஐந்து வரையான சிறு குழுவாகவும் நீரில் இறங்கி, நத்தை, நண்டு புழு பூச்சிகள், தவளைக் குஞ்சு ஆகியவற்றை இரையாகத் தேடி உண்ணும். ட்டீவி, ட்டீவி, ட்டீவி எனக்குரல் கொடுத்தப்படி எழுந்து பறக்கும்[3]
இனப்பெருக்கம்[தொகு]
மார்ச் மத்தியில் இனப்பெருக்கம் துவங்கும். இனப்பெருக்க பருவத்திற்குரிய காலத்திற்கான வண்ண நிறங்கள் உடலில் தோன்றத் தொடங்கும். ஏப்ரல் மத்தியில் தொலைதூரம் பறப்பதற்கு தேவையான சக்தியைத்தரும் கொழுப்பு உடலில் சேமிக்கத் தொடங்க, உடல் பருமனாகத் தோன்றும். அப்போது இவை பெருங்கூட்டமாக ஒன்று திரண்டு பறக்கும். இது அமெரிக்க பாடும் பறவை (தர்டசு பிலாரிசு) போன்ற மற்றொரு சிற்றினத்தின் பழைய மரக் கூட்டில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகிறது. இந்த முட்டைகள் பொரிக்க சுமார் மூன்று வாரங்கள் ஆகும்.
நிலை[தொகு]
பரவலாக பச்சைக்காலி காணப்படுகிறது. உலகளாவிய அளவில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பச்சைக்காலி அச்சுறுத்தப்பட்ட இனமாக கருதப்படவில்லை.[4] ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஒப்பந்தம் பொருந்தும் இனங்களில் இதுவும் ஒன்றாகும்.[5]
படங்கள்[தொகு]
மேன்லி மரியா, எஸ் இ, குயின்சுலாந்து, ஆஸ்திரேலியா
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- (Common) greenshank species text in The Atlas of Southern African Birds
- Ageing and sexing பரணிடப்பட்டது 2016-11-08 at the வந்தவழி இயந்திரம் (PDF; 1.2 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze
- BirdLife species factsheet for Tringa nebularia
- {{{2}}} on Avibase
- பச்சைக்காலி videos, photos, and sounds at the Internet Bird Collection
- பச்சைக்காலி photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Tringa nebularia at IUCN Red List maps
- Audio recordings of Common greenshank on Xeno-canto.
- ↑ "Tringa nebularia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பச்சைக்காலிCommon_greenshank". 31 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:48
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;iucn status 12 November 2021
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Species". Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA). 14 November 2021 அன்று பார்க்கப்பட்டது.