நீலவால் பஞ்சுருட்டான்
நீலவால் பஞ்சுருட்டான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மீரோப்பிடே
|
பேரினம்: | |
இனம்: | மீ. பிலிப்பீனசு
|
இருசொற் பெயரீடு | |
மீரோப்சு பிலிப்பீனசு லின்னேயஸ், 1766 |
நீலவால் பஞ்சுருட்டான் ( blue-tailed bee-eater (மீரோப்சு பிலிப்பீனசு) என்பது பஞ்சுருட்டான் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகைப் ஈப்பிடிப்பான் பறவையாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் பரவலாக பரவியுள்ளது. இது பெரும்பாலும் குளம் குட்டை போன் நீரிநிலைகளின் கரைகளில் காணப்படும்.
விளக்கம்
[தொகு]இப்பறவை கொண்டைக்குருவியை விடச் சற்றுப் பெரியதாக சுமார் 23–26 செ. மீ நீளம் இருக்கும். அலகு கறுப்பாகவும், விழிப்படலம் நல்ல நிவப்பாகவும், கால்கள் கறுப்பு நிறத்திலும் இருக்கும். தலை, கழுத்து, மேல் முதுகு ஆகியன பழுப்புத் தோய்ந்த தெளிவற்ற பச்சை நிறத்தில் இருக்கும். வால் மேல் இறகுகள், வால் இறக்கைகளின் வெளி வெளி விளிம்பு ஆகியன நீல நிறத்தில் இருக்கும். இதன் அலகடியில் இருந்து கண்கள் வழியே காதுகள் வரை கருப்புப்பட்டைக் கோடுகள் ஓடும். இக்கோடுகளின் மேலும் கீழும் சிறு நீலக் கோடுகள் விளிம்பு போல இருக்கும். மோவாய் மஞ்சள் தோய்ந்த வெண்மையாகவும், தொண்டை துருச் செதில் நிறத்திலும், மேல் மார்பு பசுமை தோய்ந்த பொன் நிறத்தில் இருக்கும். கீழ் மார்பும், வயிறும் பசுமை கலந்த நீலநிறம் கொண்டிருக்கும்.[2]
நடத்தை
[தொகு]இப்பறவைகள் பச்சைப் பஞ்சிட்டானைப் போன்ற பழக்க வழக்கங்களைக் கொண்டவை என்றாலும் அதனைப் போல வறண்ட காடுகளை இது விரும்புவதில்லை. நீர் வளம் மிகுந்த பகுதிகளிலேயே கூட்டமாக திரியக்காணலாம். இவை கூட்டமாக ஆற்றங்கரைத் திட்டுகளில் நீண்ட வங்கு குடைந்து அதில் நான்கு அல்லது ஏழு வரையிலான வெள்ளை முட்டைகளை இடும். இவை உருவாக்கும் வாங்கு இரண்டு மீட்டர் வரையும் நீளக்கூடும். ஆண் பெண் என இருபறவைகளும் முட்டைகளை பராமரிக்கின்றன.
காட்சியகம்
[தொகு]-
நீலவால் பஞ்சுருட்டானின் இடப்பெயர்வு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Merops philippinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22683750A92998513. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683750A92998513.en. https://www.iucnredlist.org/species/22683750/92998513. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 302–303.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Merops philippinus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Merops philippinus பற்றிய தரவுகள்