தோல்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோல்குருவி
மத்திய தாய்லாந்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Glareolidae
பேரினம்: Glareola
இனம்: G. maldivarum
இருசொற் பெயரீடு
Glareola maldivarum
Forster, 1795

தோல்குருவி (Oriental pratincole, Glareola maldivarum) என்பது கிளாரியோலிடீ எனப்படும் தோல்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கரைப்பறவை[2]. கரைப்பறவை என வகைப்படுத்தப்பட்டு இருப்பினும் நீண்ட கூறிய இறக்கைகள், பிளவுபட்ட வால், பறக்கும்போதே உணவைப் பிடிக்கும் இயல்பு ஆகிய பண்புகள் இதைத் தகைவிலான் எனத் தோன்ற வைக்கும்.

உடல் தோற்ற அமைப்பு[தொகு]

அனைத்து விதங்களிலும் கருவளையத் தோல்குருவியைப் போன்று இருக்கும் இதன் வால் பிளவு மட்டும் சற்று குறைவாக இருக்கும்; கையில் (அல்லது தெளிவான புகைப்படத்தை) வைத்துப் பார்த்தால் தான் இரண்டிற்குமான வேறுபாடு தெரியும்[3]. 23 முதல் 25 செ.மீ. வரை வளரும்; 60 – 100 கிராம் எடை இருக்கும் இக்குருவியின் ஆண் பெண் இரு பாலுமே ஒரே தோற்றமுடையவை.

மேற்பாகம். கருப்பு அலகு -- அதன் அடிப்பாகம் அடர் சிவப்பு நிறம். தலை, கழுத்தின் பின்பகுதி முதல் பிட்டத்தின் மேற்பகுதி வரை கரும்பழுப்பு நிறம் கொண்டது. வாலின் மேலிறகுகள் வெள்ளை.[2].

அடிப்பாகம். பழுப்பு கலந்த மஞ்சள் நிறத் தொண்டை; அதைச் சுற்றியவாறு, கண் அலகிடைப் பகுதியிலிருந்து தொடங்கும் கருப்புப் பட்டை. மார்பின் மேற்பகுதி பழுப்பு; கீழே செல்லச்செல்ல காவி நிறத்திற்கு மாற்றம் அடையும். வயிறும் வாலின் கீழிறகுகளும் வெள்ளையாக இருக்கும்[3].

பரவலும் வாழ்விடமும்[தொகு]

பரவல்[தொகு]

இந்தியா, இலங்கை தொடங்கி மயன்மார், வியட்நாம், மலேசியா, தாய்வான், ஜப்பான் உள்ளிட்ட பல ஆசியப் பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதிகளிலும் ஐரோப்பாவின் ஸ்காண்டிநேவியா உள்ளிட்ட சில பகுதிகளிலும் தோல்குருவிகள் காணப்படுகின்றன[4].

திரளுதல்[தொகு]

வடமேற்கு ஆஸ்திரேலியாவின் எண்பது மைல் கடற்கரைப் பகுதியில் கிட்டத்தட்ட 3 மில்லியன் தோல்குருவிகள் ஒன்று திரண்ட நிகழ்வு 2004ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது[5]. 2010ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட 5 லட்சம் தோல்குருவிகள் அதே இடத்தில் ஒன்று திரண்ட நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது[6].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்குருவி&oldid=3480021" இருந்து மீள்விக்கப்பட்டது