கருவளையத் தோல்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவளையத் தோல்குருவி
Collared pratincole (Glareola pratincola).jpg
Glareola pratincola03.jpg
G. pratincola on the ground and in flight
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Glareolidae
பேரினம்: Glareola
இனம்: G. pratincola
இருசொற் பெயரீடு
Glareola pratincola
(Linnaeus, 1766)

கருவளையத் தோல்குருவி (Glareola pratincola) சிவப்பு இறக்கை தோல்குருவி என அழைக்கப்படுகிறது. இது ஒரு கரையோரப் பறவையாகும்.

உடலமைப்பு[தொகு]

23 செ.மீ. - குறுகலான காலும், நீண்ட கூர்மையான இறகுகளும் பிளவுபட்ட நீண்டவாலும் கொண்ட இதன் தலையும் உடம்பும் மணல்பழுப்பாக இருக்கும்.[2] வெளிர் செம்பழுப்புத் தொண்டையும் கழுத்தைச் சுற்றிச் சங்கிலிபோல வளையக் கோடும் கொண்டது. மார்பு பழுப்பாகவும் வயிறு வெண்மையாகவும் இருக்கும். [3] [4]

உணவு[தொகு]

குளிர்காலத்தில் வலசை வந்து ஆற்று மணல் படுகைகளில் பறந்தபடி உள்ளானைப் போல ஓடியாடி அலைந்து புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

கருவளையத் தோல்குருவி திறந்தவெளிப் பறவையாகும். இது பெரும்பாலும் மாலையில் தண்ணீர் உள்ளப் பகுதிகளுக்கு அருகில் காணப்படும், பூச்சிகளை தேடி அலைகிறது. இது ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகிறது. இது வெப்பமண்டல ஆப்பிரிக்காவிற்கு குளிர்காலத்தில் வலசைப் போகின்றது. இனப்பெருக்க வரம்பிற்கு வடக்கே அரிதாகவே காணப்படும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Glareola pratincola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Glareola_pratincola". 29 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 174, 315–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. 
  4. 'தமிழ்நாட்டுப் பறவைகள்' முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:57
  5. "Collared Pratincole - eBird". ebird.org (ஆங்கிலம்). 2022-08-31 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]