பட்டாணி உப்புக்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாணி உப்புக்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. dubius
இருசொற் பெயரீடு
Charadrius dubius
சுகோபோலி, 1786

பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover - Charadrius dubius) என்பது ஒரு சிறிய உப்புக்கொத்தி பறவை. கண்ணைச்சுற்றி காணப்படும் மஞ்சள் வளையம் இப்பறவையின் ஓர் முக்கிய அடையாளம் ஆகும்.

உடலமைப்பு[தொகு]

  • சாம்பல்-பழுப்பு கலந்த நிறத்தில் பின்புறமும் இறக்கைத் தொகுதியும் கொண்டது; வெண்ணிற மார்பும் கழுத்தைச் சுற்றி ஒரு கரும்பட்டையும் உண்டு. இரண்டாகப் பிரியும் கரும்பட்டைகள் நெற்றியில் காணப்படும்.
  • இது காடையைவிடச் சிறிய பறவை. இதன் அலகு சிறியதாகவும் தடிமனாகவும் இருக்கும்.[2]
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை.

பரவல்[தொகு]

curonicus

இந்தியத் துணைக்கண்டம் *முழுவதும் காணப்படும்; இமயமலையிலும் 4000 அடி உயரம் வரை இவை பரவுகின்றன. பட்டாணி உப்புக்கொத்தியின் ஒரு இனமான C. d. curonicus ஐரோப்பாவிலிருந்து பனிக்காலத்தில் வலசையாக வருகின்றது எனவும் இன்னொரு இனமான

C. d. jerdoni இந்தியாவிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது எனவும் சலீம் அலி கருதுகிறார். [3]

  • குளக்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் இவற்றைக் காணலாம்.

கள இயல்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Charadrius dubius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. கலைக்களஞ்சியம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் - பக். 265
  3. Birds of India - Salim Ali - p. 326
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_உப்புக்கொத்தி&oldid=3766232" இலிருந்து மீள்விக்கப்பட்டது