சாம்பல் தலை வானம்பாடி
Jump to navigation
Jump to search
வானம்பாடி | |
---|---|
![]() | |
ஆண் வானம்பாடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | வானம் பாடி |
பேரினம்: | Eremopterix |
இனம்: | E. grisea |
இருசொற் பெயரீடு | |
Eremopterix grisea (Scopoli, 1786) |
வானம்பாடி (ashy-crowned sparrow-lark , Eremopterix grisea) சுமார் 12 செ.மீ அளவுடைய ஒரு குருவியாகும். இதற்கு மண்ணாம் வானம்பாடி என்றும் நெல் குருவி என்றும் பெயர்களுண்டு.
கள இயல்புகள்[தொகு]
- இது தடித்த அலகுடன் கொண்டையற்று காணப்படும்.
- ஆண் குருவி மணல்-பழுப்பு நிற உடலும் கரிய அடிப்பகுதியும் கொண்டு வெண் நிற கன்னங்களும் உடையது. பெண் குருவி ஊர்க்குருவியைப் போலவே இருக்கும்.
- இணையாகவோ சிறு கூட்டமாகவோ திறந்த வயல்வெளிகளில் காணப்படும்.
- தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே இமயம் மற்றும் கிழக்கே கோல்கத்தா வரையிலாக இந்தியா முழுவதும் காணப்படுகிறது; இருப்பினும், இக்குருவிகள் பெரும்பாலும் இடம் விட்டு இடம் பெயர்வதில்லை.
குணநலன்கள்[தொகு]
- தரிசு நிலங்களில் கோணல்மாணலாக வெவ்வேறு திசைகளில் நடந்து செல்லும் இவை மண்ணின் நிறத்திலேயே இருப்பதால் கண்டுபிடிப்பது சற்று கடினம்.
ஆண் குருவியின் குறிப்பிடத்தக்க செயல்பாடு[தொகு]
- ஆண் வானம்பாடி அருமையானதொரு கலிநடத்தை (aerobatic) அரங்கேற்றுகிறது.
- இறக்கைகளை ஒருவித நடுங்கும் இயக்கத்துடன் அடித்தபடி சட்டென விண்ணை நோக்கி எழும்பும். சுமார் 30 மீ உயரம் சென்ற பிறகு இறக்கைகளைப் பக்கவாட்டில் குறுக்கிக்கொண்டு திடுமென கீழ் நோக்கி வீழும். வீழ்ந்த வேகத்திலேயே மீண்டும் மேல் நோக்கி எழும்பும். இவ்வாறு சில முறை செய்த பின்பு, ஏதாவது ஒரு கல்லில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளும். சிறிது நேரங்கழித்து மீண்டும் கலிநடம் தான்!!
- இவ்வாறு தன் கலிநடத்தை அரங்கேற்றும்போது ஒரு ரம்மியமான ஒலியை எழுப்பும். ஆண் வானம்பாடியின் இந்த வேடிக்கையான, ஆனால் ரசிக்கத்தகுந்த செயல்பாடு பெண் குருவியை இனச்சேர்க்கை பொருட்டு கவர்தலுக்காகவே என்று அறியப்படுகிறது.
தென்னிந்தியாவில் காணப்படும் பிற வானம்பாடிகள்[தொகு]
- புதர் வானம்பாடி (Mirafa assamica)
- சிகப்புவால் வானம்பாடி (Ammomanes phoenicurus)
- கிழக்கத்திய வானம்பாடி (Alanda gulgula)
- கொண்டை வானம்பாடி (Galerida cristata)
படத்தொகுப்பு[தொகு]
Male at Narendrapur near கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
Close up of Female at கேவலாதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், இராசத்தான், இந்தியா.
Close up of Female at கேவலாதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், இராசத்தான், இந்தியா.
Close up of Female at கேவலாதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், இராசத்தான், இந்தியா.
Females at கேவலாதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், இராசத்தான், இந்தியா.
Male in ஐதராபாத், இந்தியா.
Male in ஐதராபாத், இந்தியா.
Male in ஐதராபாத், இந்தியா.