செம்பிட்டத் தில்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பிட்டத் தில்லான்
Golondrina dáurica Cecropis daurica 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கிருடினிடே
பேரினம்: செக்ரோபிசு
இனம்: செ. தவுரிகா
இருசொற் பெயரீடு
செக்ரோபிசு தவுரிகா
(இலக்சுமான், 1769)
வேறு பெயர்கள்

கிருண்டோ தவுரிகா

செம்பிட்டத் தில்லான் அல்லது செம்பிட்டத் தகைவிலான்(red-rumped swallow ) என்பது தில்லான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை தெற்கு ஐரோப்பா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஜப்பான், இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றின் முதன்மை உணவு பூச்சிகளாகும்.

விளக்கம்[தொகு]

இப்பறவை சிட்டுக்குருவி பருமன் உள்ளது. பிளவுபட்ட வாலும், மின்னும் தீய்நுதலும் கருநீல முதுகும், செம்மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடைய வயிறும், பின் கழுத்திலும், பிட்டத்திலும் செந்தவிட்டு நிறமும் கொண்டது. இப்பறவைகளின் பெரும்பகுதி வலசைவருபவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Red-rumped Swallow Hirundo daurica BirdLife species factsheet". BirdLife International. Retrieved 3 January 2010