நெல்வயல் நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெல்வயல் நெட்டைக்காலி
Paddyfield Pipit I4-Kolkata IMG 2109.jpg
இந்தியா, மேற்கு வங்காளம், கொல்கத்தாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: வாலாட்டிக் குருவி
பேரினம்: நெட்டைக்காலி
இனம்: A. rufulus
இருசொற் பெயரீடு
Anthus rufulus
(Vieillot, 1818)
வேறு பெயர்கள்

Corydalla rufula

நெல்வயல் நெட்டைக்காலி (paddyfield pipit, அல்லது Oriental pipit,[2] (Anthus rufulus) என்பது ஒரு சிறிய பாசரிபாரம்சு பறவை ஆகும். இது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை ஒரு பகுதியிலேயே வாழக்கூடியன (வலசை போகாதவை) இவை திறந்த வெளிகளிலும், புல்வெளிகளிலும் வாழக்கூடியன, தெற்கு ஆசியா, கிழக்குப் பிலிப்பீன்சு போன்ற பகுதிகளில் உள்ளன. பிற மற்ற இனங்கள் ஆசியாவின் பிற பகுதியில் காணப்படுகின்றன. ஆசிய பிராந்தியத்தில் குளிர்காலத்தில் இவ்வகைப் பறவைகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். இனங்களின் வகைப்பாட்டில் சிக்கலான மற்றும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விளக்கம்[தொகு]

குஞ்சுகளுக்கு உணவு எடுகத்தல் (கல்கத்தா, மேற்கு வங்கம்)

இந்த நெட்டைக்காலிகள் 15 செ.மீ உள்ளவை. இவை முதன்மையாக சாம்பல் பழுப்பு நிறத்தோடும், மார்புப் பகுதி வெளிறி இருக்கும். இதன் வால் நீண்டும், கால்கள் நீண்டும் இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும்நீலகிரி நெட்டைக்காலிகள் தோற்றத்தில் இவற்றோடு ஒத்துக் காணப்படும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anthus rufulus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Paddyfield pipit on Avibase
  3. Rasmussen PC & JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 318. 
  4. Baker, ECS (1926). Fauna of British India. Birds. Volume 3 (2 ). Taylor and Francis, London. பக். 290–291. https://archive.org/stream/BakerFbiBirds3/BakerFBI3#page/n315/mode/1up.