நாமத்தலை வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாமத்தலை வாத்து
Eurasian wigeon
Calls recorded in Dorset
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
முதுகெலும்பி
வகுப்பு:
பறவைகள்
வரிசை:
அன்செரிபார்மிசு
குடும்பம்:
அனாடிடே
பேரினம்:
மாரிகா
இனம்:
மா. பென்னிலோபி
இருசொற் பெயரீடு
மா. பென்னிலோபி
லின்னேயசு, 1758
வேறு பெயர்கள்

அனாசு பென்னிலோபி லின்னேயசு, 1758

நாமத்தலை வாத்து [2] எனப்படும் மகுடித் தாரா[3] (Eurasian wigeon - Anas penelope) தமிழ்நாட்டிற்கு வலசை வரக்கூடிய ஆனசு என்ற பேரின வகையைச் சேர்ந்த ஒரு நீர்ப்பரப்பில் மேயும் டாப்ளிங் வாத்து ஆகும்.

கள இயல்புகள்[தொகு]

  • ஆண் (இனப்பெருக்க காலத்தில்) : சாம்பல் நிறம் உடையது; தலை மற்றும் கழுத்து செம்பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • முன் நெற்றியில் உள்ள இளமஞ்சள் நிறத் திட்டு இதன் பெயருக்கு காரணமாக அமைகின்றது.

பரவல் மற்றும் வாழ்விடம்[தொகு]

பொதுவாக ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளுக்கு (வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு) மகுடித் தாராக்கள் பெருமளவில் வலசை வருகின்றன; கிழக்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் இவற்றை அதிகம் காண இயலாது. ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் அதிகம் காணப்படும் -- இருப்பினும் சில சமயங்களில் அலையாத்தி காடுகளிலும் உவர் நீர் நிலங்களிலும் இவற்றைக் காணலாம்.[4]

இனப்பெருக்கம்[தொகு]

இவை ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே (அதாவது, ஐசுலாந்து, ஸ்காட்லாந்து முதல் காம்சட்கா வரை உள்ள பகுதிகள்) இனப்பெருக்கம் செய்கின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mareca penelope". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 54:2 - BNHS (2005)
  3. Vernacular Names of Birds of the Indian Subcontinent – BNHS – பக். 65:103
  4. 4.0 4.1 Handbook of the Birds of India and Pakistan – Salim Ali & Dillon Ripley – Vol. I (p. 167 ff : 103) – OUP (1968)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமத்தலை_வாத்து&oldid=3762452" இலிருந்து மீள்விக்கப்பட்டது