குண்டு எறிதல் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டெறிதல் படம்

குண்டெறிதல் ஓர் இரும்புப் பந்தை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். நான்கு வகையான எறியும் போட்டி விளையாட்டுக்களில் குண்டு எறிதல் (shot-put) விளையாட்டும் ஒன்று.

விளையாட்டு முறைகள்[தொகு]

இந்தக் குண்டு எறிதல் விளையாட்டில் இரண்டு முறைகள் உள்ளன. அவை டிஸ்கோபெட் முறை, ஓப்ரியன் முறை. இந்த போட்டியில் பிடித்தல், நிற்கும் நிலை, சறுக்குதல் மற்றும் எறிதல் என்பன முக்கியத் திறன்களாக உள்ளன.

குண்டின் எடை[தொகு]

இந்த விளையாட்டுப் போட்டியில் வயதுக்கேற்ப 4, 6, 7.26 கிலோ கிராம் எடை அளவுடைய குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆண்களுக்கு 7.26 கிலோ கிராம் எடையுள்ள குண்டும், பெண்களுக்கு 4 கிலோ கிராம் எடையுள்ள குண்டும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.

குண்டெறியும் முறை[தொகு]

குண்டு எறிபவர் 7 அடி வட்டத்துக்குள் நின்று எறிவார். வட்டத்தை மீறினால் அது தவறு. ஒரு குறிப்பிட்ட எறி பரப்புக்குள் எறிய வேண்டும். பந்து அந்த பரப்பை விலக்கி வீழ்ந்தால் அது தவறு. எறியும் பொழுது கழுத்தடிக்கு அருகில் பந்தை வைத்து எறிய வேண்டும். எறியும் பொழுது கையை கழுத்துக்கு நேர் வெளியே வீசி எறிய வேண்டும்.