காமன்கோட்டை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமன்கோட்டை
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ராமநாதபுரம்
மக்கள் தொகை 2,118
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காமன்கோட்டை ஊராட்சி (Kamankottai Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2118 ஆகும். இவர்களில் பெண்கள் 1069 பேரும் ஆண்கள் 1049 பேரும் உள்ளனர்.

சிறப்புகள்[தொகு]

இராமாநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கால கட்டங்களில் சுதந்திரப்போபோராட்டம் நடைபெற்ற சமயங்களில் சுதந்திரப்போபோராட்டத்தில் ஈடுபட்ட திரு. K.கண்ணாயிரம்பிள்ளை, ரெட்டையன் மற்றும் K. S. இராமன் ஆகியோர் வாழ்ந்த கிராமம். இவர்கள் வாழ்ந்த வீடு இக்கிராமத்தில் உள்ளது. மேலும் திரு. K. கண்ணாயிரம் பிள்ளை, ரெட்டையன், K. S. இராமன் மற்றும் கோட்டுராக்கி இவர்களின் காலகட்டங்களில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துக்கள் காமன்கோட்டையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காமங்கோட்டை கிராம பஞ்சாயத்தில் முறையிட்டால் தீர்வு உண்டு என்று இவர்களது காலத்தில் காமன்கோட்டை பஞ்சாயத்து சுற்றுவட்டார பகுதிகளில் பெயர்பெற்று விளங்கியது.

1940 ஆம் வருடம் காளியப்ப பிள்ளை என்பவரது பெயரில் காமன்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. இந்த காளியப்பபிள்ளை அரசு உயர்நிலை பள்ளிக்கு காமன்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் கல்வி கற்க வருகை தந்தனர். இந்த பள்ளி துவங்கப்பட்டது 75 வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசினால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வாகை சூடியுள்ளனர்.

விழாக்கள்[தொகு]

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஓவ்வொரு வருடம் பங்குனி மாதம் காமன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களால் இங்கு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு நடைபெறும் இத்திதிருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாள் காப்புகட்டுதலோடு துவங்கி ஒவ்வொரு நாளும் அன்றைய மண்டகப்படி அன்று ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த குடிமக்களால் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

8ஆம் நாள் தேவேந்திர குல வேளாளர் மண்டகப்படி அன்று தேவேந்திர குல மக்களால் அம்மனுக்கு வேல் போடுதல், ஆயிரம் கண் பானை, தீச்சட்டி எடுத்தல், கரும்பாளை தொட்டி, அங்காப்பிரதசனம், பால்குடம் எடுத்தல், பூக்குளி இறங்குதல் மற்றும் பரவைக்காவடி எடுத்தல் என பல வேண்டுதல்கள் மேள தாளங்களோடு நடைபெறும்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 92
சிறு மின்விசைக் குழாய்கள் 8
கைக்குழாய்கள் 2
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2
உள்ளாட்சிக் கட்டடங்கள் 11
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2
ஊரணிகள் அல்லது குளங்கள் 13
விளையாட்டு மையங்கள்
சந்தைகள் 2
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 19
ஊராட்சிச் சாலைகள் 9
பேருந்து நிலையங்கள் 2
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

  1. காமன்கோட்டை
  2. காக்கனேந்தல்

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "போகலூர் வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  5. 5.0 5.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  6. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமன்கோட்டை_ஊராட்சி&oldid=2240704" இருந்து மீள்விக்கப்பட்டது