உள்ளடக்கத்துக்குச் செல்

நம்புதாளை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்புதாளை
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர் சத்தியசீலன்
மக்களவைத் தொகுதி ராமநாதபுரம்
மக்களவை உறுப்பினர்

நவாஸ் கனி

சட்டமன்றத் தொகுதி திருவாடனை
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். எம். கருமாணிக்கம் (இ.தே.கா)

மக்கள் தொகை 9,221
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.nambuthalai.com


நம்புதாளை ஊராட்சி (Nambuthalai Gram Panchayat), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின், திருவாடானை வட்டத்தில் உள்ள திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்த நம்புதாளை கிராமம், வங்காள விரிகுடா கடற்கரையைக் கொண்டது[7]

இதன் அஞ்சல் சுட்டு எண் 623403 ஆகும். 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 8064 ஆகும். இவ்வூரின் மக்கள்தொகையில் 655 (8.1%) ஒடுக்கப்பட்டோர் ஆவார்.

தொண்டியிலிருந்து 2 கிமீ தொலைவிலும், வட்டத் தலைமையிடமான திருவாடானையிலிருந்து 17 கிமீ தொலைவிலும் நம்புதாளை சிற்றூர் உள்ளது.

நம்புதாளை கிராமப் பஞ்சாயத்து, திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

இக்கிராமத்தின் வேளாண் நிலங்களுக்கு, ஊரணிகள் நீர் பாசானத்திற்கு உதவுகிறது. மீன் பிடி தொழிலும் நடைபெறுகிறது. அருகமைந்த கிராமங்கள் திருவெற்றியூர் மற்றும் தொண்டி ஆகும். இச்சிற்றூரில் அரசு துவக்கப் பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் உள்ளது. மேலும் மூன்று மருத்துவர்கள் கொண்ட துணை ஆரம்பச் சுகாதார மையம் செயல்படுகிறது. இக்கிராமத்தில் ஒரு துணை அஞ்சலகம் செயல்படுகிறது. யுனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கிளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், பொது நூலகமும், பணம் எடுக்கும் இயந்திரமும் (ATM) உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]
  • காந்தாரி அம்மன் கோயில்
  • முருகன் கோயில்
  • முனீஸ்வரர் கோயில்
  • பள்ளிவாசல்

அடிப்படை வசதிகள்

[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 130
சிறு மின்விசைக் குழாய்கள்
கைக்குழாய்கள்
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 7
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1
ஊரணிகள் அல்லது குளங்கள் 16
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 1
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 110
ஊராட்சிச் சாலைகள் 2
பேருந்து நிலையங்கள் 1
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:

  1. நம்புதாளை

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "திருவாடானை வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. நம்புதாளை கிராமத்தின் வரைபடம்
  8. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்புதாளை_ஊராட்சி&oldid=3560042" இலிருந்து மீள்விக்கப்பட்டது