ஐக்கிய நாடுகள் கடவுச் சீட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐநா அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஐக்கிய நாடுகள் கடவுச்சீட்டு (லைசே-பாசே).

ஐக்கிய நாடுகள் கடவுச் சீட்டு அல்லது ஐக்கிய நாடுகள் லைசே பாசே (United Nations Laissez-Passer, UNLP அல்லது LP) ஐக்கிய நாடுகள் தனது உரிமைகள் மற்றும் ஏமங்கள் மரபொழுங்கின் ஏழாவது பிரிவின்படி வழங்கும் பயண ஆவணமாகும்.[1] இது நியூ யார்க், ஜெனீவா நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் பன்னாட்டு தொழில் அமைப்பாலும் (ILO)[2] வழங்கப்படுகிறது. இந்தக் கடவுச் சீட்டு ஐநா மற்றும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு அலுவலர்களுக்கு மட்டுமன்றி பிற பன்னாட்டு அமைப்புகளான உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், உலக வங்கி போன்றவற்றின் அலுவலர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆவணம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் எழுதப்படுகிறது.

ஐநா கடவுச்சீட்டு செல்லத்தக்க ஓர் பயண ஆவணமாகும். ஐநா திட்டங்களுக்கானப் பணியில் செல்வோர் இதனை தங்கள் தேசியக் கடவுச்சீட்டினைப் போலவே பயன்படுத்தலாம். தேசியக் கடவுச்சீட்டுக்களைப் போலவே சில நாடுகள்/மண்டலங்கள் (காட்டாக, கென்யா, ஐக்கிய இராச்சியம், செஞ்சென் பகுதி, லெபனான் போன்றன) இந்தக் கடவுச் சீட்டு வைத்திருப்போருக்கு நுழைவிசைவு (விசா) தேவையை விலக்கியுள்ளன. பெரும்பாலான நாடுகளில் நுழைவிசைவைப் பெற வேண்டும். இந்தத் தேவை கடவுச்சீட்டு வைத்துள்ளவர் எந்த நாட்டினராக இருப்பினும் வலியுறுத்தப்படுகிறது.

பெரும்பாலான ஐநா கடவுச்சீட்டுக்கள் நீல வண்ணத்தில் உள்ளன. இவை சேவை கடவுச்சீட்டுகளாகும். இவற்றில் தூதுப்பணி நுழைவிசைவு இடப்பட்டாலே தூதக ஏமங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுக்கு சிவப்பு நிற கடவுச்சீட்டு வழங்கப்படுகின்றன. இவை தூதக கடவுச்சீட்டுகளுக்கு இணையானவை. இவர்களுக்கு முழு தூதக உரிமைகள் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "Convention on the privileges and immunities of the United Nations" (PDF). United Nations. 1946. பார்க்கப்பட்ட நாள் 17 May 2010.
  2. W. Münch, G. Tang and MD. Wynes (2005). "Review of the Management of the United Nations Laissez-passer" (PDF). Joint Inspection Unit, UN. பார்க்கப்பட்ட நாள் 17 May 2010.