அரித்துவார் கும்பமேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கும்பமேளா - ஹாித்துவார்

அரித்துவார் கும்பமேளா (Kumbh Mela at Haridwar) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள பண்டையநகரமான அரித்துவாரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இவ் விழாவிற்கான சரியான தேதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக வைத்து தீ்ர்மானிக்கப்படுகிறது. அதாவது குருபகவான் கும்ப ராசியிலும், சூரியபகவான் மேச ராசியிலும் பிரவேசிக்கின்ற நாளில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கமாகும்[1]. "அர்த் கும்ப்" என்று அழைக்கப்படும் அரை கும்பமேளா ஆறு வருடத்திற்கு ஒரு முறை அதாவது கும்பமேளா முடிந்து ஆறுவருடத்திற்குப் பின்னர் கொண்டாடப்படுகிறது.

இவ்விழா இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்விழா மற்ற மதத்தினரையும் கவர்ந்திழுப்பதாகவே அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நிகழ்வு ஆகும். உள்நாட்டு வணிகர்கள் மட்டுமின்றி அரேபிய வணிகர்களும் இதில் பங்கு பெறுகின்றனர்[2].

கடைசியாக 2010-ல் கும்பமேளா நடைபெற்றது. அடுத்த கும்பமேளா 2021 அல்லது 2022-ல் நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. அரைக் கும்பமேளா 2016-ல் நடைபெற்றது.

முந்தைய பதிவுகள்[தொகு]

கும்பமேளா நடைபெறும் நான்கு இடங்களில் ஒன்று ஹாித்துவார் ஆகும். மற்ற மூன்று இடங்கள் அலகாபாத்தில் உள்ள பிரயாக், நாசிக்கில் உள்ள திாிம்பக் மற்றும் உஜ்ஜயினி ஆகும். சோதிட சாஸ்திரத்தின்படி நடப்பதால், ஹாித்துவாாில் நடக்கும் கும்பமேளாதான் உண்மையானதாக கருதப்படுகிறது. கி.பி.1600-லிருந்து கும்பமேளா நடைபெறுவதாக நம்பப்படுகிறது. பழமையான நூல்களான குலாசாத் - உட் - தவாாிக் மற்றும் சாகா் குல்சன் ஆகிய இரு நூல்களிலும் ஹாித்துவாில் நடைபெறும் கும்பமேளா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அலகாபாத்தில் நடைபெறுவதை (தி ஆனுவல் மெக் மேளா) மற்றும் நாசி்க்கில் நடைபெறுவதை (சிம்ஹஸ்தா) எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற மூன்று இடங்களில் நடைபெறும் கும்பமேளா ஹாித்துவார் கும்பமேளாவைத் தழுவிய ஒரு உள்ளுர் திருவிழாவாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. பக். 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8239-3179-8. https://books.google.com/books?id=5kl0DYIjUPgC&pg=PA380. 
  2. Robert Montgomery Martin (1858). The Indian Empire. 3. The London Printing and Publishing Company. பக். 4–5. https://archive.org/stream/indianempirehist03martuoft#page/4/mode/2up.