ஆடல் கணிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கத்தாவில் ஒரு ஆடல் கணிகை, கி.பி. 1900
ஆடல் கணிகை நடனக் கலைஞர்களின் வருகைக்காக காத்திருக்கும் ஒரு அரசர்
ஒரு ஆடல் கணிகையின் நடன நிகழ்ச்சி, 1862

ஆடல் கணிகை (Nautch, /N ɔː tʃ / ( இந்தி: नाच nāc ; உருது: ناچ‎ nāc ; Prakrit ṇacca ; சமக்கிருதம்: नृत्य nṛtya, नृत्त nṛttá ; இந்த அனைத்து சொற்களும் "நடனம்" அல்லது "நடனமாடுகிறவர்" என்பதாகும்.) [1] என அழைக்கப்பட்டவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் அரசவை போன்ற பிரபல இடங்களில் நடனமாடிய பெண்களைக் குறிப்பது ஆகும். முகலாயப் பேரரசின் பிற்காலத்திலும், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் ஆடல் கணிகைகளின் கலை நிகழ்ச்சிகளானது கலாச்சார முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. [2] காலப்போக்கில், ஆடல் கணிகையர் முகலாயர்களின் அரசவைகள், நவாப்கள் மற்றும் சுதேச சமஸ்தானங்களின் அரண்மனைகள் மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் உயர் அதிகாரிகளின் இருப்பிடங்கள், சிறிய ஜமீந்தார்கள் மற்றும் பிற இடங்களுக்கு வெளியே பயணம் செய்தனர்.

இந்தியாவின் இந்து கோவில்களில் சடங்கு மற்றும் சமய நடனங்களை நிகழ்த்திய தேவதாசிகளை விவரிக்கும் சில குறிப்புகள் ஆடல் கணிகையர் ( நாட்ச் மற்றும் நாட்ச் பெண்கள் ) என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், தேவதாசிகளுக்கும் ஆடல் கணிகையருக்கும் பெருமளவில் ஒற்றுமை இல்லை. கோவில் தெய்வங்களை மகிழ்விப்பதற்காக இந்து கோவில்களில் தேவதாசிகளால் நிகழ்த்தப்பட்ட சடங்கு நடனங்கள் என்பவை பெரும்பாலும் இந்திய பாரம்பரிய நடனங்கள் ஆகும். அதே சமயம் ஆடல் கணிகையர் ஆண்களின் மகிழ்ச்சிக்காக ஆடல்களை நிகழ்த்தினர். 1917 ஆம் ஆண்டில், இந்திய ஆடல் கணிகையர் கவர்ச்சியான ஆடை, கவர்ச்சியான நடன பாணி, ஆகியவற்றோடு ஆண்களை முழுமையாக மயக்கும் திறன் கொண்டவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். [3]

வரலாறு[தொகு]

பழங்காலத்தில், கோவில்களில் ஆன்மீக காரணங்களுக்காக மட்டுமே தேவதாசிகளால் பக்தி நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. [4] முகலாய காலத்தில், பொழுதுபோக்குக்கான நடனம் பிரபலமானது. மேலும் பல ஆட்சியாளர்கள் தங்கள் போர் முகாம்களில் கூட நடனப் பெண்களை தங்கள் பரிவாரங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்தியாவில் ஆரம்பகால பிரித்தானிய குடியேறிகளுக்கு வரவேற்பு பரிசுகள் அல்லது வெகுமதிகளாக தாவீஃப்கள் ( ஆடல், பாடல், உருது இலக்கியம் போன்றவற்றில் சிறந்த அதிநவீன வேசிகள்) எனப்படும் பெண்கள் வழங்கப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டில், இளம் இளவரசர்கள் தெஹ்ஸீப் (நேர்த்தி மற்றும் அரசவை பழக்கவழக்கங்கள்) மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள அவர்களிடம் ஆடல் கணிகையர் அனுப்பப்பட்டனர்.

முகலாய சகாப்தத்திலும், பிரித்தானிய அரசு காலத்திலும், ஆடல் கணிகையர் ஆட்டம் தர்பார்களில் தவறாமல் இடம்பெற்றன. [5] இந்திய பணக்காரர்கள் போன்றோர் மண்டபங்கள் போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யும் சிறப்பு விழா போன்றவற்றில் கலந்துகொள்ள ஆடல் கணிகையர் அழைக்கப்பட்டனர். இதில் இசைக்கலைஞர்கள், உதவியளர்கள் மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆடல் கணிகையர் இருப்பர். இந்த எண்ணிக்கை புரவலரின் அந்தஸ்தைப் பொறுத்து மாறுபடும். [6]

நாட்ச்[தொகு]

நாட்ச் வகைகள்[தொகு]

இளம் பெண்கலால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட நாட்ச் நடனம், பல பாணிகளாக பரிணமித்தது, அவற்றில் மூன்று மிகவும் முக்கியமானவை, மோர் நாச் ( ஈர்க்கும் மயில் நடனம்), படாங் நாச் ( காத்தாடி நடனம் என்ற இது காத்தாடி மற்றும் காத்தாடி சரசம் ஆகிய இரண்டையும் போல ஆடுவதாகும் ), குஹார் கா நாச் ( பல்லக்கு தூக்கி நடனம், சிற்றின்பத்தைத் தூண்டும் நடனம் ) என்ற நடனம் மக்கள் வகைகள் இருந்தன. [7]


குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடல்_கணிகை&oldid=3343851" இருந்து மீள்விக்கப்பட்டது