உள்ளடக்கத்துக்குச் செல்

அரச மலேசிய காவல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச மலேசிய காவல் துறை
Royal Malaysia Police
Polis Diraja Malaysia
மலேசிய காவல் துறையின் சின்னம்
மலேசிய காவல் துறையின் சின்னம்
மலேசிய காவல் துறையின் கொடி
மலேசிய காவல் துறையின் கொடி
குறிக்கோள்காவல்துறையும் சமூகமும் பிரிக்கப்படாது
(Police and The Community, Will Not Separate)
(Polis dan Masyarakat, Berpisah Tiada)
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்25 மார்ச்சு 1807; 217 ஆண்டுகள் முன்னர் (1807-03-25)
முந்தைய துறைகள்
 • அரச மலாயா கூட்டமைப்பு காவல் துறை
  (Royal Federation of Malaya Police)
 • மலாயா கூட்டமைப்பு காவல் துறை
  (Federation of Malaya Police)
 • மலாயா ஒன்றிய காவல் துறை
  (Malayan Union Police Force)
 • குடிசார் விவகார காவல் படை
  (Civil Affairs Police Force)
தன்னார்வலர்கள்அரச மலேசிய தன்னார்வலர் காவல் துறை
(Sukarelawan Simpanan Polis Diraja Malaysia)
(Sukarelawan Siswa Polis Diraja Malaysia)
சட்ட ஆளுமைகாவல்துறை
அதிகார வரம்பு அமைப்பு
தேசிய நிலை
(செயல்பாட்டு எல்லை)
மலேசியா
செயல்பாட்டு அதிகார வரம்புமலேசியா
அளவு330,803 km2 (127,724 sq mi)
(மக்கள் தொகை: 32767900)
சட்ட அதிகார வரம்புதேசிய நிலை
ஆட்சிக் குழுமலேசிய அரசாங்கம்
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்புக்கிட் அமான், கோலாலம்பூர், மலேசியா
சேவையாளர்கள்137,574
அமைச்சர்
துறை நிருவாகி
 • அக்ரில் சானி அப்துல்லா சானி
  (Acryl Sani Abdullah Sani), காவல்துறையின் தலைமை இயக்குநர்
அமைச்சுமலேசிய உள்துறை அமைச்சு
வசதிகள்
காவல் நிலையங்கள்s1,000
காவல் துறை வாகனங்கள்sபுரோட்டோன் பிரிவி, புரோட்டோன் இன்சுபிரா, புரோட்டோன் வாஜா, மிட்சுபிசி லான்சர், மிட்சுபிசி அவுட்லேண்டர், தொயோத்தா அய்லக்சு, ஹோண்டா சிவிக், புரோட்டோன் X70.
இணையத்தளம்
www.rmp.gov.my

மலேசிய காவல் துறை அல்லது அரச மலேசிய காவல் துறை (மலாய்: Polis Diraja Malaysia (PDRM); ஆங்கிலம்: Royal Malaysia Police; (RMP); சீனம்: 马来西亚皇家警察) என்பது மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஓர் அரசு சார்ந்த அமைப்பாகும். இதன் தலைமையகம் கோலாலம்பூர் மாநகரில் புக்கிட் அமான் எனும் இடத்தில் அமைந்துள்ளது.[1]

அரச மலேசிய காவல் துறையின் சேவைகளில் சட்ட அமலாக்கம்; பொதுப் பாதுகாப்பு; போக்குவரத்து கட்டுப்பாடு; குற்ற விசாரணைகள்; கலவரக் கட்டுப்பாடுகள் போன்றவை அடங்கும்.[2]

2023 மே 27-ஆம் தேதி நிலவரப்படி, காவல்துறை தலைமை இயக்குநர் (Inspector-General of Police) (IGP) டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி (Tan Sri Acryl Sani Hj. Abdullah Sani) என்பவரின் தலைமையில் இப்போதைய மலேசிய காவல்துறை இயங்கி வருகிறது.[3]

பொது[தொகு]

அரச மலேசிய காவல் துறை, வழக்கமான ரோந்துப் பணிகளைச் செய்ய சொந்த பொது நடவடிக்கைப் படையைக் கொண்டுள்ளது. அத்துடன் அத்துறையின் கீழ் தன்னார்வ காவலர் படை (Volunteer Guard Corps), தன்னார்வ காவல்துறை (Volunteer Police), துணை காவல்துறை (Volunteer Police), மாணவர் காவல் படை (Student Police Corps) மற்றும் காவல்துறையின் நண்பர்கள் (Friends of the Police) எனும் துணைத் துறைகளும் உள்ளன.[4]

பன்னாட்டு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, அரச மலேசிய காவல் துறை பன்னாட்டுக் காவலகம் எனும் இன்டர்போல் (The International Criminal Police Organization) (INTERPOL) காவல்துறை அமைப்புடன் அணுக்கமான உறவுகளைப் பேணி வருகிறது.

நீண்டகால ஒத்துழைப்பு[தொகு]

மலேசியாவின் நான்கு அண்டை நாடுகளின் காவல் துறைகளான இந்தோனேசிய தேசிய காவல்துறை (Indonesian National Police); அரச புரூணை காவல்துறை (Royal Brunei Police Force); அரச தாய்லந்து காவல்துறை (Royal Thai Police); மற்றும் சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force); ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்களைக் கொண்டுள்ளது:

அத்துடன் மலேசியாவில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள வியட்நாம் நாட்டின் வியட்நாம் மக்கள் பொது பாதுகாப்பு அமைப்புடன் (Vietnam People's Public Security) பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

மலேசியாவில், மலாக்கா சுல்தானகத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்தே காவல் துறை இருந்து வந்துள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டில், மலாக்காவில் நியதிச் சட்டம் (Malacca's Canonical Law) எனும் ஒரு சட்டம் இருந்தது. அதன் மூலம் அரசப் போர்வீரர்களாக (Royal Warriors) காவல் துறையினர் இருந்ததாக அறியப் படுகிறது.

1511 ஆகத்து 10-ஆம் தேதி, அபோன்சோ டி அல்புகெர்க்கே (Afonso de Albuquerque) தலைமையிலான போர்த்துகீசிய கடற்படை (Portuguese Fleet) மலாக்காவைக் கைப்பற்றிய பின்னர் மலாக்கா காவல் அமைப்புகள் முடிவுக்கு வந்தன. அதன் பின்னர் காவல் துறைக் கடமைகள் பெரும்பாலும் போர்த்துகீசிய வீரர்களால் மேற்கொள்ளப்பட்டன.

பினாங்கு மாநிலத்தில் முதல் காவல் துறை[தொகு]

பேராக் மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகள் குழு அண். 1880–1890.
பேராக் காவல் துறையில் பயிற்சி பெற்ற சீக்கியர்கள் மல்யுத்த திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் அண். 1880–1890.

1795-இல் மலாக்கா அரசு பிரித்தானியப் பேரரசின் (British Empire) ஆளுமைக்குள் வந்தது. அதன் பின்னர்தான் மலேசியாவில் ஒரு நவீன காவல்துறை அமைப்பு உருவாக்கப்பட்டது.

25 மார்ச் 1807-இல், பினாங்கு மாநிலம் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியது. அந்த மார்ச் 25 -ஆம் தேதிதான் மலேசியாவில் காவல் துறை தினமாக (Police Day in Malaysia) கொண்டாடப்படுகிறது.

தன்னிச்சையான காவல் துறைகள்[தொகு]

அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள் பிரித்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர், இந்தக் காவல் துறை அமைப்பு, நீரிணை குடியேற்றங்கள் (Straits Settlements); மலாய் மாநிலங்கள் (Malay States); மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) ஆகிய மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அந்த நேரத்தில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னிச்சையான காவல் துறைகளும் (Independent Police Forces) நிறுவப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு பிறகுதான், மத்திய காவல் துறை அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு சிவில் விவகார காவல் படை (Civil Affairs Police Force) என்று அழைக்கப்பட்டது.

மலாயாவில் மத்திய காவல் துறை அமைப்பு உருவாக்கப்பட்ட போது பிரித்தானிய காலனி அதிகாரியான எச்.பி. லோங்வொர்த்தி (H.B. Longworthy) என்பவர் முதல் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். மேலும் மலாயாவைச் சப்பானியர்கள் ஆக்கிரமித்த பிறகு (Japanese Occupation), காவல் துறையில் ஒரு நிலையான தனமையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தோனேசியா - மலேசியா மோதல்[தொகு]

இந்த நேரத்தில் காவல்துறை எதிர்கொண்ட உடனடி பிரச்சனைகளில் ஒன்று மலாயா கம்யூனிச கட்சியின் (Communist Party of Malaya) கிளர்ச்சி ஆகும். மேலும் 1963 முதல் 1965 வரை நீடித்த இந்தோனேசியா - மலேசியா மோதலின் போது (Indonesia–Malaysia confrontation), ஜொகூர் மற்றும் சபா மாநிலங்களுக்குள் இந்தோனேசியப் படைகளின் ஊடுருவலுக்கு (Infiltration of Indonesian Forces) எதிராக, மலேசிய இராணுவப் படைகளுடன் காவல் துறையும் இணைந்து போராடியது.

24 ஜூலை 1958 அன்று, மலேசியாவின் மன்னர், துவாங்கு அப்துல் ரகுமான் இப்னி அல்மர்கும் துவாங்கு முகமது (Tuanku Abdul Rahman Ibni Almarhum Tuanku Muhamad) அவர்கள், மலாயா காவல் துறை கூட்டமைப்புக்கு ராயல் (Royal) எனும் அரசத் தகுதிப் பட்டத்தை வழங்கினார்.

மலாயா கூட்டமைப்பின் அரச காவல் துறை[தொகு]

1963-ஆம் ஆண்டில், மலாயா கூட்டமைப்பின் அரச காவல் துறை (Royal Federation of Malayan Police) (RFMP), வடக்கு போர்னியோ ஆயுதக் காவல் துறை (North Borneo Armed Constabulary) மற்றும் சரவாக் காவல் துறை (Sarawak Constabulary) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு அரச மலேசிய காவல்துறை உருவாக்கப்பட்டது. 1965-இல் சிங்கப்பூர் விடுதலை பெறும் வரையில் சிங்கப்பூர் காவல் துறை (Singapore Police Force); அரச மலேசிய காவல் துறையில் (Royal Malaysia Police) (RMP) ஓர் அங்கமாக இருந்தது.

காவல்துறை உறுதிமொழி[தொகு]

கோலாலம்பூரில் மலேசிய காவல் துறையின் தலைமையகம்.

மலேசிய காவல் துறை சட்டம் 1967; பிரிவு 20 (3) (Section 20 (3) Police (Malaysia) Act 1967)-இன் கீழ் அரச மலேசிய காவல்துறை பணியாளர்களின் கடமைகள் பின்வருமாறு:

 1. சட்டப்படி கைது செய்ய அதிகாரம் பெற்ற அனைத்து நபர்களையும் கைது செய்தல்;
 1. பாதுகாப்பு நுண்ணறிவு செயலாக்கம்
 1. வழக்குகளை நடத்துதல்
 1. வருவாய், கலால், சுகாதாரம், தனிமைப் படுத்தல், குடிவரவு மற்றும் பதிவு தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் செயல் படுத்துவதில் உதவி வழங்குதல்
 1. மலேசியாவின் துறைமுகங்கள், மற்றும் விமான நிலையங்களில் ஒழுங்கைப் பாதுகாத்தல்; கடல்சார் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்துவதில் உதவி வழங்குதல்;
 1. சட்டப்பூர்வமாக எந்தவொரு தகுதி வாய்ந்த அதிகாரியாலும் வழங்கப்பட்ட பிற செயல்முறைகளை நிறைவேற்றுதல்
 1. தகவல்களை காட்சிப்படுத்துதல்
 1. உரிமை கோரப்படாத சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் அதன் உரிமையாளர்களைக் கண்டறிதல்
 1. உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதில் உதவி வழங்குதல்
 1. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதில் இருந்து பாதுகாத்தல்
 1. குற்றவியல் நீதிமன்றங்களில் கலந்து கொள்வது; மற்றும் ஒழுங்கைக் கடைப்பிடித்தல்
 1. காவல்துறையின் காவலில் உள்ள கைதிகள் மற்றும் பிற நபர்களைப் பாதுகாத்தல்

காவல் துறை பதவிச் சின்னம்[தொகு]

பதவி அடையாளம்
மூத்த அதிகாரி
Senior Police Officer
ஆணையர்
Commissioner
காவல்துறைத் தலைவர்
Inspector-General of Police (IGP)
தலையணி:வெள்ளை இரட்டை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
ஒற்றை முனை கொண்ட வளைந்த வாள்
காவல்துறைத் துணைத்தலைவர்
Deputy Inspector-General of Police (DIGP)
தலையணி: வெள்ளை இரட்டை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
ஒற்றை முனை கொண்ட வளைந்த வாள்
காவல்துறை ஆணையர்
Commisioner of Police (CP)
தலையணி: வெள்ளை இரட்டை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
ஒற்றை முனை கொண்ட வளைந்த வாள்
காவல்துறை துணை ஆணையர்
Deputy Commissioner of Police (DCP)
தலையணி: (ஆண்) வெள்ளை இரட்டை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
ஒற்றை முனை கொண்ட வளைந்த வாள்
காவல்துறை மூத்த உதவி ஆணையர்
Senior Assistant Commissioner of Police (SAC)
தலையணி: (ஆண்) வெள்ளை இரட்டை அரிசி காது அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி காது அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
ஒற்றை முனை கொண்ட வளைந்த வாள்
காவல்துறை உதவி ஆணையர்
Assistant Commissioner of Police (ACP)
தலையணி:(ஆண்) வெள்ளை இரட்டை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: சடங்கு வாள்
காவல்துறைக் கண்காணிப்பாளர்
Superintendent of Police
கண்காணிப்பாளர்
Superintendent of Police (SUPT)
தலையணி:(ஆண்) வெள்ளை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: சடங்கு வாள்
துணைக் கண்காணிப்பாளர்
Deputy Superintendent of Police (DSP)
தலையணி: (ஆண்) வெள்ளை அரிசி அலங்காரம் (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: சடங்கு வாள்
உதவி கண்காணிப்பாளர்
Assistant Superintendent of Police (ASP)
தலையணி: (ஆண்) வெள்ளை அரிசி அலங்காரம் (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: சடங்கு வாள்
ஆய்வாளர்
Inspector
ஆய்வாளர்
Inspector of Police (INSP)
தலையணி: (ஆண்) வெள்ளை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: சடங்கு வாள்
தகுதிகாண் ஆய்வாளர்
Probationary Inspector of Police (P/I)
தலையணி: (ஆண்) வெள்ளை அரிசி அலங்காரம்; (பெண்) வெள்ளை அரிசி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: சடங்கு வாள்
இளநிலை அதிகாரி
Junior Officer
துணை அதிகாரி
Deputy Officer
துணை ஆய்வாளர்
Sub-Inspector (SI)
தலையணி: வெள்ளை புறணி அலங்காரம்
கழுத்துப் பட்டை:
தோள் பட்டையணி:
கைப்பிடி: செங்கோல்
சார்ஜென்ட் மேஜர்
Sergeant Major (SM)
தலையணி: அலங்காரம் இல்லை
கழுத்துப் பட்டை:
கைப்பட்டை:
கைப்பிடி: செங்கோல்
சார்ஜென்ட்
Sergeant (Sgt)
தலையணி: அலங்காரம் இல்லை
கழுத்துப் பட்டை:
கைப்பட்டை:
கார்ப்பரல்
Corporal (Cpl)
தலையணி: அலங்காரம் இல்லை
கழுத்துப் பட்டை:
கைப்பட்டை:
லான்சு கார்ப்பரல்
Lance Corporal (L/Cpl)
தலையணி: அலங்காரம் இல்லை
கழுத்துப் பட்டை:
கைப்பட்டை:
காவலர்
Constable (PC)
தலையணி: அலங்காரம் இல்லை
கழுத்துப் பட்டை:
கைப்பட்டை:

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Royal Malaysian Police (Abbreviation: RMP; Malay: Polis Diraja Malaysia, PDRM;) is a part of the security forces structure in Malaysia. The force is a centralized organization with responsibilities ranging from traffic control to intelligence gathering". www.aseanapol.org. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.
 2. "Royal Malaysian Police (RMP) - Malaysia Government Directory". www.hrdnet.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.
 3. "On 3 May 2021, Tan Sri Acryl Sani bin Hj. Abdullah Sani was appointed as the 13th Chief of Police. He has served for 35 years in the PDRM, starting on February 2, 1986". www.rmp.gov.my. பார்க்கப்பட்ட நாள் 27 May 2023.
 4. "The Royal Malaysian Police comprises 137,574 senior police officers, subordinate police officers and civil servants. This membership reflects the variety of assignments carried out by the PDRM, from the General Task Force to the traditional task of policing and always side by side with the people". www.devex.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_மலேசிய_காவல்_துறை&oldid=3938869" இலிருந்து மீள்விக்கப்பட்டது