உள்ளடக்கத்துக்குச் செல்

அமில ஆலைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசைல் ஆலைடு
அசிட்டைல் குளோரைடு ஒரு அசைல் ஆலைடு ஆகும்.

அமில ஏலைடு அல்லது ஏசைல் ஏலைடு, அசைல் ஆலைடு (Acyl Halide) என்பது ஒட்சிஅமிலமொன்றின்[1] -OH கூட்டத்தை எதாவதொரு அலசன் அணுவினால் பிரதியீடு செய்வதன் மூலம் உருவாக்கப்படும் சேதனச் சேர்வையாகும்.[2]

அவ்வமிலம் ஒரு காபொட்சிலிக் அமிலமாயின், அச்சேர்வை ஒரு –COX தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டிருக்கும். இத்தொழிற்பாட்டுக் கூட்டம் ஒரு காபனைல் கூட்டத்தில் ஒற்றைப் பிணைப்பால் இணைக்கப்பட்ட அலசன் அணுவைக் கொண்டிருக்கும். அவ்வாறானதொரு அமில ஏலைட்டின் பொதுச் சூத்திரம் RCOX என எழுதப்படலாம். இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமாகவும், CO என்பது காபனைல் கூட்டமாகவும், X என்பது குளோரைட் போன்ற ஒரு ஏலைட்டாகவும் இருக்கலாம். அமில ஏலைட்டுக்களில் பெரும்பாலும் உருவாக்கப்படுபவை அமில குளோரைட்டுக்களாகும். எனினும், அசற்றைல் அயடைட்டே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அசெற்றிக் அமில உற்பத்திக்காக, இது வருடாந்தம் பல பில்லியன் கிலோகிராம்கள் உருவாக்கப்படுகின்றன.[3]

இதேபோல், சல்போனிக் அமிலத்தின் ஐதரொட்சில் கூட்டத்தை ஒரு அலசன் அணுவால் பிரதியிடுவதன் மூலம் உரிய சல்போனைல் ஏலைட்டை உருவாக்கலாம். பெரும்பாலும் இதில் குளோரைட் பயன்படுவதால் இவை சல்போனைல் குளோரைட்டு எனவே அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acyl groups". Compendium of Chemical Terminology Internet edition.
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acyl halides". Compendium of Chemical Terminology Internet edition.
  3. Hosea Cheung, Robin S. Tanke, G. Paul Torrence “Acetic Acid” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a01_045

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_ஆலைடு&oldid=3963768" இலிருந்து மீள்விக்கப்பட்டது