கார்பாக்சிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காபொட்சிலிக் அமிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காபொட்சிலிக் அமிலத்தின் கட்டமைப்பு
காபொட்சலேற்று அயன்
காபொட்சில் கூட்டத்தின் முப்பரிமாணக் கட்டமைப்பு

கார்பாக்சிலிக் அமிலம் அல்லது காபொட்சிலிக் அமிலம் (carboxylic acid) குறைந்தது ஒரு கார்பாக்சைல் கூட்டத்தையாவது கொண்ட சேதன அமிலங்களாகும்.[1] இதன் பொது வாய்பாடு R-COOH ஆகும். இங்கு R என்பது ஏதாவதொரு அல்கைல் அல்லது ஏரைல் கூட்டத்தைக் குறிக்கும். கார்பாக்சைல் கூட்டம் (அல்லது காபொட்சி) என்பது, கார்பனைல் கூட்டத்தையும் (RR'C=O), ஐதரொட்சில் கூட்டத்தையும் (R-O-H) கொண்டிருக்கும். இதன் சூத்திரம் -C(=O)OH. எனினும், வழமையாக -COOH அல்லது -CO2H என எழுதப்படும்.[2] இவற்றுள் அமினோ அமிலங்கள் (உயிரினங்களில் மிக அத்தியாவசியமான புரதத் தொகுப்பில் பங்களீப்பவை), மற்றும் அசிட்டிக் காடி என்பவையும் உள்ளடங்குகின்றன.

காபொட்சிலிக் அமிலங்கள் புரோன்செட்-லோரி அமிலங்களாகும். ஏனெனில் இவை புரோத்தன் (H+) வழங்கிகளாகும். இவை சேதன அமிலங்களில் குறிப்பிடத்தக்க பொதுவான அமிலங்களில் ஒன்றாகும். இவற்றுள் எளிய அமிலங்கள், ஃபோமிக் அமிலம் H-COOH, மற்றும் அசெற்றிக் அமிலம் CH3-COOH ஆகியவையாகும். ஃபோமிக் அமிலம் எறும்புகளில் காணப்படுவதோடு, அசெற்றிக் அமிலம் வினாகிரியின் புளிப்புத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காபொட்சில் கூட்டங்களைக் கொண்ட அமிலங்கள் இருகாபொட்சிலிக், முக்காபொட்சிலிக் என்றவாறு அழைக்கப்படுகின்றன. எளிய இருகாபொட்சிலிக் அமிலம் ஒட்சாலிக் அமிலம் (COOH)2, ஆகும். இது இரு காபொட்சில் கூட்டங்களால் மட்டும் உருவானதாகும். மெல்லிற்றிக் அமிலம் அறுகாபொட்சிலிக் அமிலத்துக்கு உதாரணமாகும். இயற்கையில் காணப்படும் ஏனைய முக்கிய உதாரணங்களாக சித்திரிக் அமிலத்தையும் (எலுமிச்சையில்), தாத்தாரிக் அமிலத்தையும் (புளியில்) குறிப்பிடலாம்.

காபொட்சிலிக் அமிலங்களின் உப்புக்களும் எசுத்தர்களும் காபொட்சிலேற்றுக்கள் எனப்படும். காபொட்சில் கூட்டம் புரோத்தன் அகற்றப்படும் போது, அதன் இணைமூலம், ஒரு காபொட்சிலேற்று மறை அயனை உருவாக்கும். காபொட்சிலேற்று அயன்கள் பரிவால் உறுதியடையக் கூடியன. இவ்வாறு உறுதித் தன்மை அதிகரிப்பதால், காபொட்சிலிக் அமிலங்கள் அல்ககோல்களிலும் அமிலத்தன்மை கூடியனவாக உள்ளன. காபொட்சிலிக் அமிலங்களை, லூயி அமிலமான காபனீரொட்சைட்டின் தாழ்த்தப்பட்ட அல்லது அல்கைலேற்றப்பட்ட வடிவமாகக் கருதலாம். சில சந்தர்ப்பங்களில், இவற்றை காபொட்சிலேற்று அகற்றுவதன் மூலம் காபனீரொட்சைட்டைப் பெறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "carboxylic acids". Compendium of Chemical Terminology Internet edition.
  2. வார்ப்புரு:March4th