விஜயப்பூர், பெங்களூர் ஊரகம்

ஆள்கூறுகள்: 13°17′N 77°48′E / 13.29°N 77.8°E / 13.29; 77.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயப்பூர்
நகரம்
விஜயப்பூர் is located in கருநாடகம்
விஜயப்பூர்
விஜயப்பூர்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விஜயப்பூரின் அமைவிடம்
விஜயப்பூர் is located in இந்தியா
விஜயப்பூர்
விஜயப்பூர்
விஜயப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°17′N 77°48′E / 13.29°N 77.8°E / 13.29; 77.8
நாடு India
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்பெங்களூரு ஊரகம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்விஜயப்புரா நகராட்சி
ஏற்றம்883 m (2,897 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்34,866
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்562110
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்vijayapuratown.mrc.gov.in

விஜயப்பூர் அல்லது விஜயப்புரா (Vijayapur), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி தாலுக்காவில் அமைந்த சிறு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது பெங்களூருக்கு வடகிழக்கே 48.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 883 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 23 வார்டுகளும், 8,086 வீடுகளும் கொண்ட விஜயப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 34,866 ஆகும். அதில் ஆண்கள் 17,737 மற்றும் பெண்கள் 17,129 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 966 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,625 மற்றும் 1,665 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 69.22%, இசுலாமியர் 29.88 மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India: Search Details". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
  2. Vijayapura Population, Religion, Caste, Working Data Bangalore Rural, Karnataka - Census 2011