பிமல் இரத்நாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிமல் ரத்நாயக்க
Bimal Rathnayaka
இலங்கை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
செப்டம்பர் 2015
முன்னையவர்சரத்சந்திர மாயாதுன்ன
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2010
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி

பிமல் நிரோசன் இரத்நாயக்க வீரக்கூன் (Bimal Nirsohan Rathnayake Weerakoon) இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

இவர் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர்.[1] 2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தெசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[1]

இரத்நாயக்க முதன் முதலாக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளராக 2001 நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 4,240 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் 2004 தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 116,736 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

2010, 2015 தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்ன தனது பதவியைத் துறந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக பிமல் இரத்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "JVP bypasses Lalkantha, appoints Bimal NL MP". தி ஐலண்டு. 5 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Bimal had discussions with Korean Labour Party. lankatruth.com 2011. Retrieved 7 July 2011.
  3. "General Election 2001 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
  4. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமல்_இரத்நாயக்க&oldid=3563387" இலிருந்து மீள்விக்கப்பட்டது