பைசர் முஸ்தபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கண்டி |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
|---|---|
|
|
|
| பிறப்பு | சூலை 2, 1969 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| துறை | சட்டத்தரணி |
| சமயம் | இசுலாம் |
பைசர் முஸ்தபா ( Faiszer Musthapha, பிறப்பு: சூலை 2 1969), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்றம் (2004), பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
ராஜமல்வத்தை, பத்ரமுல்லையில் வசிக்கும் இவர் இசுலாம்மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட.