சிவஞானம் சிறீதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவஞானம் சிறீதரன் 
நாடாளுமன்ற உறுப்பினர்

பதவியில்
பதவியில் அமர்வு
2010
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி

பிறப்பு 8 திசம்பர் 1968 (1968-12-08) (அகவை 46)
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
இருப்பிடம் 882 ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, இலங்கை
துறை ஆசிரியர்
சமயம் இந்து
இணையதளம் www.shritharan.com

சிவஞானம் சிறீதரன் (பிறப்பு: டிசம்பர் 8, 1968) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவஞானம் பின்னர் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிக்கு இடம் பெயர்ந்தார். ஆசிரியரான இவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார்.[1] இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் என்ற வேலாயுதபிள்ளை பகீரதகுமாரின் சகோதரியைத் திருமணம் செய்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SLA soldiers obstruct ITAK candidate from campaigning in Ki'linochchi". தமிழ்நெட். 12 March 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31349. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010. 
  2. "preferences/Jaffna pref GE2010.pdf Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞானம்_சிறீதரன்&oldid=1529765" இருந்து மீள்விக்கப்பட்டது