கண்ணூர்க் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கண்ணூர்க் கோட்டை என்றறியப்படும் செயிண்ட். ஆஞ்செலோக் கோட்டை கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு அருகே இருக்கிறது. கண்ணூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலோரத்தில் கடலை நோக்கி அமைந்துள்ளது. இக்கோட்டை 1505-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய வைசிராயால் கட்டப்பட்டது. இக்கோட்டை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆட்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. 1663-இல் இக்கோட்டை டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் இதனைக் கைப்பற்றி மலபார்ப் பகுதியின் ராணுவ மையமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்க்_கோட்டை&oldid=1358389" இருந்து மீள்விக்கப்பட்டது