அகத்தியமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அகத்தியமலை | |
|---|---|
| உயரம் | 1,868 மீட்டர்கள்s (6 அடி) |
| இட அமைவு | |
| இட அமைவு | திருவனந்தபுரம் மாவட்டம், இந்தியா |
| மலைத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
| ஆயக்கூறுகள் | |
அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது.
படங்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Agastya Mala தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |