இடுக்கி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இடுக்கி அணை
இடுக்கி அணை
பெரியாற்றின் குறுக்கே இடுக்கி அணை
உருவாக்கும் ஆறு பெரியாறு
உருவாக்குவது இடுக்கி நீர்த்தேக்கம்
அமைவிடம் கேரளம், இந்தியா
பராமரிப்பு கேரளஅரசு
உயரம் 169.16
கட்டத் தொடங்கியது 30 ஏப்ரல் 1969
திறப்பு நாள் பெப்ரவரி 1973
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 2000 மி m3
நீர்ப்பிடிப்பு பகுதி 60 சகீ2
புவியியல் தரவு
அமைவிடம் 9°51′01″N 26°58′01″W / 9.85028°N 26.96694°W / 9.85028; -26.96694

இடுக்கி அணை கேரள மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை 839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட அணையாகும். ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணையாகும்[1]. இதன் உயரம் 167.68 மீட்டர்கள். இந்த அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியுடையது.

சுற்றுலா வசதி[தொகு]

இந்த அணையைச் சுற்றிப் பார்க்கப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓணம், புத்தாண்டு தினம் என்று ஆண்டுக்கு இரு நாட்கள் மட்டும் அணையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.இந்த நாட்களில் அணையைப் பார்ப்பதற்குப் பெரியவர்களுக்கு ரூ. 10, சிறியவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இங்கு ஐந்து நபர்கள் அமர்ந்து கொள்ளும் வசதியுடைய விரைவுப் படகுச் சவாரி செய்வதற்கு ரூ. 300 கட்டணமாகப் பெறப்படுகிறது.

குறத்தி மலையில் சிறிய குகை ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. குறவன் மலையிலும் ஒரு குகை வெட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பயன்பாட்டில் இல்லை. குறவன் மலையின் மறுபுறம் செறுதோணி அணை உள்ளது. இவை இரண்டும் தடுப்பதால் உருவாகும் நீர்த்தேக்கம் இடுக்கி நீர்த்தேக்கம் எனப்படுகிறது.

மின் உற்பத்தி[தொகு]

கேரள அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு 1975-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாள் முதல் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. [2]. இந்த நீர் மின் உற்பத்தி நிலையம் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

புவியியல்[தொகு]

இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணையின் மின்னுற்பத்தி நிலையம் மூலமட்டம் என்னும் இடத்தில் உள்ளது. இது அணையில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இடுக்கி அணையின் முன்தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி09 September 2013
  2. http://idukki.nic.in/dam-hist.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_அணை&oldid=1494016" இருந்து மீள்விக்கப்பட்டது