ஆகஸ்ட் 2008
| << | ஆகஸ்ட் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMVIII | ||||||
ஆகஸ்ட் 2008, 2008 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செப்டம்பர் 16 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது.
பொருளடக்கம் |
சிறப்பு நாட்கள் [தொகு]
- ஆகஸ்ட் 1 - ஆடி அமாவாசை
- ஆகஸ்ட் 2 - ஆடிப்பெருக்கு
- ஆகஸ்ட் 4 - ஆடிப்பூசம்
- ஆகஸ்ட் 15 - இந்திய விடுதலை நாள்
- ஆகஸ்ட் 16 - ஆவணி அவிட்டம்
- ஆகஸ்ட் 16 - புதுச்சேரி விடுதலை நாள்
- ஆகஸ்ட் 16 - பராத் இரவு (இஸ்லாம்)
- ஆகஸ்ட் 23/24 - கிருஷ்ண ஜெயந்தி
நிகழ்வுகள் [தொகு]
| செய்திகள் | மேலதிகச் செய்திகளை |
- ஆகஸ்ட் 30:
- சூறாவளி குஸ்டாவ்:
- மேற்கு கியூபாவை சூறாவளி அண்மிப்பதாகவும் கிட்டத்தட்ட 200,000 பேர் இடம்பெயருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏஎஃப்பி)
- ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் நகரத்தை சூறாவளி தாக்கும் அபாயம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. (பிபிசி)
- சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- பீகாரில் வெள்ள மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைப் படகு மூழ்கியதில் அதில் பயணம் செய்த 25 பொதுமக்கள் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- சூறாவளி குஸ்டாவ்:
- ஆகஸ்ட் 29:
- தாய்லாந்தில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் நாட்டின் மூன்று விமான நிலையங்களை முற்றுகையிட்டு அவற்றை மூடினர். (தி ஏஜ்)
- ஜோர்ஜியா ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. (ஏஎஃப்பி)
- அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அலாஸ்கா ஆளுனர் சேரா பேலினை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். (அலைகள்) (சிஎன்என்)
- ஆகஸ்ட் 27:
- ஐக்கிய அமெரிக்காவின் 2008 அதிபர் தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிட பராக் ஒபாமாவை மக்களாட்சிக் கட்சி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுத்தது. (பிபிசி)
- தாய்லாந்தில் பிரதமர் சமாக் சுந்தரவேஜ் பதவியில் இருந்து விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 26:
- தெற்கு ஒசேத்தியா, அப்காசியா ஆகியவற்றை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது. (நியூயோர்க் டைம்ஸ்)
- மலேசியாவில் "பெர்மாத்தாங் பாவ்" என்ற நகரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் பெரும் வெற்றி பெற்றார். (ஏபி)
- பீகார் மாநிலத்தில் கோஷி ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- ஆகஸ்ட் 25:
- நல்லெண்ன நடவடிக்கையாக 199 பாலஸ்தீன அரசியல் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியிலிருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறியது. (நியூஸ்வீக்)
- ஆகஸ்ட் 24:
- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றன. (சின்ஹுவா)
- கிர்கிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 23: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் பராக் ஒபாமா டெலவெயர் மேலவை உறுப்பினர் ஜோ பைடனை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். (வெப்துனியா)
- ஆகஸ்ட் 22: சோமாலியாவில் இடம்பெற்ற கலவரங்களில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 21: பாகிஸ்தானில் நிகழ்ந்த இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்த்து 76 பேர் கொல்லப்பட்டனர். (சின்ஹுவா)
- ஆகஸ்ட் 20: ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் நகரின் பராஹாஸ் விமான நிலையத்தில் ஒரு ஸ்பானேர் வானூர்த்தி ஓடுபாதையை விட்டு விலகி தீ பிடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- ஆகஸ்ட் 19:
- லிம்கா சாதனைப் புத்தகத்தில் மிகவும் வயதான மனிதர் என இடம்பெற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 139 அகவை முதியவர் ஹபீப் மியான் உடல் நலக்குறைவால் இறந்தார். (வெப்துனியா)
- அல்ஜீரியாவில் காவற்துறை பயிற்சி முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 18:
- நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (பிபிசி)
- ஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யா தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 17: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது எட்டாவது தங்கப்பதக்கத்தை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வென்று உலக சாதனை படைத்தார். (புளூம்பேர்க்)
- ஆகஸ்ட் 16: ஜமெய்க்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக் 100 மீ விரைவோட்டத்தை 9.69 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். (நியூயோர்க் டைம்ஸ்)
- ஆகஸ்ட் 15:
- நேபாளப் பிரதமராக மாவோயிஸ்ட்கட்சித் தலைவர் பிரசண்டா வெற்றி பெற்றார்.(பிபிசி)
- பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் 6வது தங்கப் பதக்கத்தைப் பெற்றார். (டைம்ஸ்)
- ஆகஸ்ட் 14:
- இலங்கை, திருகோணமலையில் பெரும் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. (டெய்லிமிரர்)
- போலந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு, மற்றும் ஏவுகணைத் தளம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. (ஏபி)
- ஆகஸ்ட் 12: தெற்கு ஒசேத்தியாவில் தமது படை நடவடிக்கை முடிவடைந்ததாக ரஷ்யா அறிவித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 11: 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: ஆண்களுக்கான 10 மீ கைத்துப்பாக்கி குறி பார்த்துச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தனி நபர் ஒலிம்பிக் விளையாட்டில் முதன் முறையாக ஒரு இந்தியர் தங்கப் பதக்கத்தை பெற்றார். தட்ஸ்தமிழ்
- ஆகஸ்ட் 10:
- கனடா, டொரண்டோவில் டவுன்ஸ்வியூ என்ற இடத்தில் புரொப்பேன் எரிவாயுத் தொழிற்சாலைப் பகுதியில் அதிகால 4:00 மணிக்கு இடம்பெற்ற பெரும் வெடிப்பின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். (சிபி)
- ரஷ்யர்களின் பலத்த எறிகணைகளுக்கு நடுவில் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் இருந்து ஜோர்ஜியப் படைகள் வெளியேறியுள்ளனர். (ஏபி)
- சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் மேற்கில் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 9: புர்கினா பாசோவில் தங்கச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 31 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஆகஸ்ட் 8:
- 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. (சிஆர்ஐ)
- ஜோர்ஜியா பிரிந்துபோன தெற்கு ஒசேத்தியாவினுள் நுழைந்து முழு அளவிலாத தாக்குதல்களை ஆரம்பித்தது. (ஜோர்ஜிய வெளிநாட்டமைச்சு)(ரியான்). ஜோர்ஜியப் படைகள் தலைநகர் த்ஸ்கின்வாலியை அண்மித்தன. (பிபிசி)(ராய்ட்டர்ஸ்). ஜோர்ஜியப் படைகள் ரஷ்ய அமைதிப்படையினரைத் தாக்கியதில் பல ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டனர். (ரியான்)
- டெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றின் மேலாக ஆற்றில் வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். (எம்எஸ்என்)
- ஆகஸ்ட் 6:
- மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். (ஏபிசி ஆஸ்திரேலியா)
- குவாண்டானமோ குடாவில் உள்ள அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒசாமா பின்லாடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான "சலீம் ஹம்டன்" பயங்கரவாதத்துக்கு பொருளுதவி வழங்கியதற்காக குற்றவாளியாகக் கண்டு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது. (புளூம்பேர்க்)
- ஆகஸ்ட் 5:
- தூத்துக்குடி தமிழ்நாட்டின் 10ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. (சிஃபி)
- சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் 6.0 அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (சிஎன்என்)
- ஆகஸ்ட் 4:
- தமிழறிஞர் முனைவர் ச. அகத்தியலிங்கம் புதுச்சேரியில் இடம்பெற்ற சாலைவிபத்தில் கொல்லப்பட்டார். (தட்ஸ்தமிழ்)
- இமயமலையின் கே-2 கொடுமுடியில் ஆகஸ்ட் 3 இல் பனிவீழ்ச்சியில் சிக்கிக் காணாமல் போன பன்னாட்டு மலையேறிகளில் 11 பேர் இறந்துவிட்டதாகவும் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- சீனாவின் காஷ்கார் என்ற இடத்தில் காவல்துறையினரின் நிலை ஒன்றைத் தீவிரவாதிகள் தாக்கியதில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் 16 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் நைனா தேவி என்ற மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். (யாஹூ!)
- ஆகஸ்ட் 2:
- இமயமலையின் கே-2 கொடுமுடியில் ஏற முயன்ற இரண்டு பன்னாட்டு மலையேறிகள் பனிவீழ்ச்சியில் சிக்கி இறந்தனர். மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். (பிபிசி)
- சார்க் நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 1:
- இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த கடுகதி தொடருந்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். (யாஹூ!)
- சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவென சார்க் நாட்டுத் தலைவர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பை வந்தடைந்தனர். (பிபிசி)
| ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஆகஸ்ட் 30:
- கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)
- துணுக்காய் ஆலங்குளத்தில் படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் 20 படையினர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். (புதினம்)
- இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள புறக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் 46 பேர் காயமடைந்தனர். (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)
- ஆகஸ்ட் 28: வவுனியா, பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகளில் ஏழு படையினர் கொல்லப்பட்டு 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். பாலமோட்டை நகரைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)
- ஆகஸ்ட் 27: கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. (தினக்குரல்)
- ஆகஸ்ட் 26: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியதில் இலங்கைக் கடற்படையினர் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். (புதினம்), (சண்டே டைம்ஸ்)
- ஆகஸ்ட் 22: முல்லைத்தீவில் துணுக்காய், உயிலங்குளம் ஆகிய பகுதிகளைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (டெய்லி மிரர்)
- ஆகஸ்ட் 21:
- மட்டக்களப்பு, வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அடுத்து ப்பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. (தமிழ்நெட்), (தமிழ்நெட்)
- வவுனியா, பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் ஐந்து படையினர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 16: வவுனியா, வடமேற்கு பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வினை விடுதலைப் புலிகள் முறியடித்ததில் 11 படையினர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 15 - மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஏழு விடுதலைப் புலிகளின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வன்னிக்கு அனுப்பப்பட்டது. (தினக்குரல்)
- ஆகஸ்ட் 12: வவுனியா, குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் இலங்கைப் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டு 18 படையினர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 11: அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 9: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 8:
- முல்லைத்தீவு மருத்துவமனையினுள் இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் மடு அன்னை உற்சவம் இம்முறை இடம்பெறாது என்று மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு யோசப்பு அறிவித்தார். (புதினம்)
- ஆகஸ்ட் 7: முல்லைத்தீவு, மணலாறு பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடல்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. (புதினம்)
- ஆகஸ்ட் 6: வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் ஜூலை 2008 இல் மாத்திரம் 106 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டு, 662 பேர் காயமடைந்தனர் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். (புதினம்)
- ஆகஸ்ட் 4: வவுனியாவில் பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 3: ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (புதினம்)
- ஆகஸ்ட் 2: அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஆகஸ்ட் 1:
- முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 25 படைகள் இறந்து அல்லது காணாமல் போயுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. (புதினம்), (புதினம்)
- தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக ஆனந்த விகடன் வார இதழ் தெரிவித்துள்ளது. (புதினம்)
இறப்புகள் [தொகு]
- ஆகஸ்ட் 1 - ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)
- ஆகஸ்ட் 3 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பி. 1918)
- ஆகஸ்ட் 4 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)
- ஆகஸ்ட் 9 - மஹ்மூட் தர்வீஷ், பாலஸ்தீன எழுத்தாளர் (பி. 1941)
- ஆகஸ்ட் 19 - லெவி முவனவாசா, சாம்பியாவின் சனாதிபதி (பி. 1948)
- ஆகஸ்ட் 30 - கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி.. 1918)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்