ஜனவரி 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செய்தித் தொகுப்பு
19 ஜனவரி 2007
இலங்கை இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பிபிசி
15 ஜனவரி 2007
ஈராக் முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர். பிபிசி
6 ஜனவரி 2007
இலங்கை காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. புலிகள் இதனை மறுத்துள்ளனர். பிபிசி
5 ஜனவரி 2007
இலங்கை கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. புதினம்
2 ஜனவரி 2007
இலங்கை மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். புதினம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜனவரி_2007&oldid=1345606" இருந்து மீள்விக்கப்பட்டது