உள்ளடக்கத்துக்குச் செல்

மெதிலீன் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெதிலீன் பாலம்  (மீத்தேன்டையைல் தொகுதி).

கரிம வேதியியலில் மெதிலீன் பாலம் (Methylene bridge), மெதிலீன் வெளியமைவுருவாக்கி அல்லது மீத்தேன் டையைல் தொகுதி என்பது ஏதாவது  ஒரு மூலக்கூறின் பகுதியாக, -CH2- என்ற வாய்ப்பாட்டைக் கொண்டதாக, அதாவது ஒரு கார்பன் அணுவானது இரண்டு ஐதரசன் அணுக்கள் மற்றும் வேறு இரு தொகுதிகள் அல்லது அணுக்களுடன் இரு ஒற்றைப் பிணைப்புகளுடன் இணைந்ததாக உள்ளது. இது பக்க இணைப்புகளற்ற அல்கேன்களின் முக்கியச் சட்டகத்தில் திரும்பத் திரும்ப வரும் அலகாக (Repeating unit) உள்ளது.

மெதிலீன் பாலமானது ஒரு அணைவுச்சேர்மத்தில் இரண்டு உலோகங்களை இணைக்கும் (டெப்பேயின் வினைக்காரணியில் டைட்டேனியம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை இணைப்பது போன்ற) இரு இணைப்புள்ள ஈந்தணைவியாகவும் செயல்படுகிறது.[1]

"மெதிலீன் குளோரைடு" (டைகுளோரோமீத்தேன் CH
2
Cl
2
) இல் உள்ளது போன்ற மெதிலீன் பாலமானது ”மெதிலீன் தொகுதி” அல்லது மெதிலீன்' எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இருந்த போதிலும், மெதிலீன் தொகுதி (அல்லது "மெதிலிடீன்") என்பதே CH
2
தொகுதியானது மீதமுள்ள மூலக்கூறுடன் ஒரு இரட்டைப் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும் போது பொருத்தமானதாக இருக்கும். இத்தகைய CH
2
தொகுதியின் வேதிப்பண்புகள் மெதிலீன் பாலம் எனப்படும் மெதிலீன் CH
2
தொகுதியிலிருந்து தனித்த முறையில் வேறுபட்டதாக காணப்படுகின்றன.

வேதி வினைகள்

[தொகு]

நைட்ரோ சேர்மங்கள், கார்போனைல் சேர்மங்கள், நைட்ரைல் தொகுதிகளைக் கொண்டுள்ள சேர்மங்கள் போன்ற இரண்டு வலிமையான எதிர்மின்னியைக் கவரக்கூடிய தொகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள மெதிலீன் பாலத்தைக் கொண்ட சேர்மங்கள் செயல்மிகு மெதிலீன் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.[2] இவை வலிமையான காரங்களுடன் வினைபடும் போது கரிமத் தொகுப்பு முறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஈனோலேட்டுகள் அல்லது கார்பேனயனிகளை உருவாக்குகின்றன. நோவனீகல் குறுக்கம் (Knoevenagel condensation) மற்றும் மெலோனிக் எஸ்தர் தொகுப்பு ஆகியவை உதாரணங்களில் சிலவாகும்.[3]

உதாரணங்கள்

[தொகு]

மெதிலீன் சேர்மங்களுக்கான சில உதாரணங்கள் :

மேற்கோள்கள்

[தொகு]
  1. W. A. Herrmann (1982), "The methylene bridge".
  2. "Active methylene compound". Archived from the original on 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
  3. House, Herbert O. (1972). Modern Synthetic Reactions. Menlo Park, CA.: W. A. Benjamin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-4501-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதிலீன்_பாலம்&oldid=3583593" இலிருந்து மீள்விக்கப்பட்டது