மெலோனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெலோனிக் அமிலம்
Skeletal formula of malonic acid
Ball-and-stick model of the malonic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெலோனிக் அமிலம்
மீத்தேன்டைகார்பாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
141-82-2 Yes check.svgY
ChEBI CHEBI:30794 Yes check.svgY
ChEMBL ChEMBL7942 Yes check.svgY
ChemSpider 844 Yes check.svgY
DrugBank DB02175 Yes check.svgY
InChI
 • InChI=1S/C3H4O4/c4-2(5)1-3(6)7/h1H2,(H,4,5)(H,6,7) Yes check.svgY
  Key: OFOBLEOULBTSOW-UHFFFAOYSA-N Yes check.svgY
 • InChI=1/C3H4O4/c4-2(5)1-3(6)7/h1H2,(H,4,5)(H,6,7)
  Key: OFOBLEOULBTSOW-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 867
SMILES
 • O=C(O)CC(O)=O
 • C(C(=O)O)C(=O)O
பண்புகள்
C3H4O4
வாய்ப்பாட்டு எடை 104.06 g·mol−1
அடர்த்தி 1.619 கி/செமீ3
உருகுநிலை 135 முதல் 137 °C (275 முதல் 279 °F; 408 முதல் 410 K) (சிதைகிறது)
கொதிநிலை சிதைவுறுகிறது
763 கி/லி
காடித்தன்மை எண் (pKa) pKa1 = 2.83[1]
pKa2 = 5.69[1]
-46.3·10−6 செமீ3/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மெலோனேட்டு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS RESOURCE NO LONGER MAINTAINED
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மெலோனிக் அமிலம் (Malonic acid) (ஐயுபிஏசி முறைப்படியான பெயர்: புரோப்பேன்டையோயிக் அமிலம்) ஒரு இரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகும். இதன் அமைப்பானது CH2(COOH)2 என்றவாறு உள்ளது. மெலோனிக் அமிலத்தின் அயனியாக்கப்பட்ட வடிவம், எஸ்தர்கள், உப்புகள் மெலோனேட்டுகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, டைஎதில் மெலோனேட்டு என்பது மெலோனிக் அமிலத்தின் டைஎதில் எஸ்தர் ஆகும்.

உயிரிய வேதியியல்[தொகு]

மெலோனிக் அமிலம் பெரும்பாலும் பீட்ரூட்டின் செறிவு மிக்க கரைசலில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆனால், பீட்ரூட்டின் இயைபைப் பற்றிய ஆய்வில் பீட்ரூட்டில் மெலோனிக் அமிலம் இல்லை என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது. [2]

தயாரிப்பு[தொகு]

மெலோனிக் அமிலம் தயாரிப்பதற்கான பழைய முறையானது குளோரோஅசிட்டிக் அமிலத்திலிருந்த தொடங்குகிறது: [3]

குளோரோஅசிட்டிக் அமிலத்திலிருந்து மெலோனிக் அமிலம் தயாரிப்பு

சோடியம் கார்பனேட்டு சோடியம் உப்பை உருவாக்குகிறது. அது பின்னர் சோடியம் சயனைடுடன் வினைபுரிந்து கருக்கவர் பதிலீட்டு வினை வழியாக சயனோஅசிட்டிக் அமிலத்தைத் தருகிறது. நைட்ரைல் தொகுதியானது சோடியம் ஐதராக்சைடுடன் நீராற்பகுக்கப்பட்டு சோடியம் மெலோனேட்டைத் தருகிறது பின்னர் அமிலமாக்குதல் வினையானது மெலோனிக் அமிலத்தைத் தருகிறது. இருப்பினும், தொழில்முறையில், மெலோனிக் அமிலமானது டைமெதில் மெலோனேட்டு அல்லது டைஎதில்மெலோனேட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. [4]

முதன் முதலில் 1858 ஆம் ஆணடு பிரெஞ்சு வேதியியலாளர் விக்டர் டெசைக்னெஸ் என்பவர் மெலோனிக் அமிலத்தை மேலிக் அமிலத்தை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் தயாரித்தார். [5]

மெலோனிக் அமிலமானது குளுக்கோசை நொதிக்கச் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டது.[6]

நோய்க்கூற்றியல்[தொகு]

உயர்த்தப்பட்ட மலோனிக் அமில அளவுகள் உயர்ந்த மெத்தில்மலோனிக் அமில அளவுகளுடன் இருக்கும்போது, இது மலோனிக் மற்றும் மெத்தில்மலோனிக் அமிலூரியா (CMAMMA) உடன் இணைந்து அடிக்கடி கண்டறியப்படாத[7] வளர்சிதை மாற்ற நோயைக் குறிக்கலாம்.[8] இரத்த பிளாஸ்மாவில் மலோனிக் அமிலம் மற்றும் மீதில்மலோனிக் அமிலம் ஆகியவற்றின் விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலம், CMAMMA வை அடிப்படை மெத்தில்மலோனிக் அமிலத்தன்மையிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 pKa Data Compiled by R. Williams (pdf; 77 kB) பரணிடப்பட்டது 2010-06-02 at the வந்தவழி இயந்திரம்
 2. Stark, J.B. (1950). "Composition of Sugar Beet Liquors". Industrial and Engineering Chemistry 43 (3): 603–605. doi:10.1021/ie50495a018. 
 3. Nathan Weiner. "Malonic acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0376. ; Collective Volume, 2, p. 376
 4. Production of malonic acid, 2015-12-11 அன்று பார்க்கப்பட்டது
 5. See:
 6. Recombinant host cells for the production of malonate. PCT/US2013/029441 2012.
 7. NIH Intramural Sequencing Center Group; Sloan, Jennifer L; Johnston, Jennifer J; Manoli, Irini; Chandler, Randy J; Krause, Caitlin; Carrillo-Carrasco, Nuria; Chandrasekaran, Suma D et al. (2011-09). "Exome sequencing identifies ACSF3 as a cause of combined malonic and methylmalonic aciduria" (in en). Nature Genetics 43 (9): 883–886. doi:10.1038/ng.908. பன்னாட்டுத் தர தொடர் எண்:1061-4036. பப்மெட்:21841779. பப்மெட் சென்ட்ரல்:PMC3163731. http://www.nature.com/articles/ng.908. 
 8. 8.0 8.1 de Sain-van der Velden, Monique G. M.; van der Ham, Maria; Jans, Judith J.; Visser, Gepke; Prinsen, Hubertus C. M. T.; Verhoeven-Duif, Nanda M.; van Gassen, Koen L. I.; van Hasselt, Peter M. (2016), Morava, Eva; Baumgartner, Matthias (eds.), "A New Approach for Fast Metabolic Diagnostics in CMAMMA", JIMD Reports, Volume 30, Springer Berlin Heidelberg, 30: 15–22, doi:10.1007/8904_2016_531, ISBN 978-3-662-53680-3, PMC 5110436, PMID 26915364CS1 maint: PMC format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலோனிக்_அமிலம்&oldid=3620010" இருந்து மீள்விக்கப்பட்டது