தேவதர்சினி
தேவதர்சினி | |
---|---|
பிறப்பு | தேவதர்சினி நீலகண்டன் சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | தாக்சாயினி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1997 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சேத்தன் |
புகழ்ப்பட்டம் | கலைமாமணி விருது (in 2020) |
தேவதர்சினி (Devadarshini) என்பவர் ஒரு தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன், தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், மர்மதேசம், அத்திப்பூக்கள் (2007-2012) போன்ற பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் திரைப்படங்களில் முக்கியமாக துணை வேடங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலும் தோன்றுகிறார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]தேவதர்ஷினி சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் கல்லூரியில் வணிகவியல் படித்தார். பின்னர், பயன்பாட்டு உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும்போதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு, கனவுகள் இலவசம் என்னும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது இயக்குநர் நாகாவின் மர்மதேசம் என்ற மர்மத் தொடரில் நடிக்க வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து நாகா இயக்கிய ரமணி Vs ரமணி பாகம் 2ல் அறிமுகமானார். பின்னர், விடாது கருப்பு என்ற தொடரிலும் நடித்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு "பெரிய திருப்புமுனை" என்று கருதுகிறார்.
இவர் 2003 இல் வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தில் நடித்தார். இதில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை வென்றார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை (2002-2005), சித்தமபுர ரகசியம் (2004-2006), கோலங்கள் (2004-2005), அத்திப்பூக்கள் (2007-2012) போன்ற பல தொடர்களில் நடித்தார்.
காஞ்சனா (2011) படத்திற்குப் பிறகு, இவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]2002 இல், தேவதர்ஷினி ஒரு தொலைக்காட்சி நடிகரான சேத்தனைத் திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்கள் முதன் முதலில் மர்மதேசம் - விடாது கருப்பு படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இவர்களது மகள், நியாதி கடம்பி, 96 இல் தனது தாயின் கதாபாத்திரத்தின் இளைய வடிவத்தை நடித்து அறிமுகமானார்.[4]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | காக்க காக்க | சுவாதி சிறீக்காந்து | தமிழ் | |
எனக்கு 20 உனக்கு 18 | சிறீதரின் அக்கா | தமிழ் | ||
காதல் கிறுக்கன் | மருத்துவர் | தமிழ் | ||
பார்த்திபன் கனவு | அமுதா | தமிழ் | தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது | |
2004 | அழகிய தீயே | தமிழ் | ||
2005 | குருதேவா | தமிழ் | ||
6'2 | மீனாட்சி | தமிழ் | ||
பொன்னியின் செல்வன் | தமிழ் | |||
கண்ட நாள் முதல் | கிருஷ்ணாவின் அக்கா | தமிழ் | ||
2006 | சரவணா | சரவணணின் அண்ணி | தமிழ் | |
ரெண்டு | மாதவனின் அக்கா | தமிழ் | ||
2007 | தீபாவளி | சுமதி | தமிழ் | |
கிரீடம் | தமிழ் | |||
எவனோ ஒருவன் | தமிழ் | |||
2008 | 'பிரிவோம் சந்திப்போம் | சேரனின் அண்ணி | தமிழ் | |
சரோஜா | தேவதர்சினி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2009 | படிக்காதவன் | கவுசல்யா | தமிழ் | |
புதிய பயணம் | தமிழ் | |||
சொல்ல சொல்ல இனிக்கும் | தமிழ் | |||
2010 | கொல கொலயா முந்திரிக்கா | தமிழ் | ||
எந்திரன் | லதா | தமிழ் | ||
2011 | காஞ்சனா | ராகவனின் அண்ணி | தமிழ் | |
மகான் கணக்கு | சானகி | தமிழ் | ||
2012 | சகுனி | தமிழ் | ||
ஈகா | தெலுங்கு | |||
நான் ஈ | தமிழ் | |||
2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | மாமி | தமிழ் | |
கருப்பம்பட்டி | சிவகாமி | தமிழ் | ||
தீயா வேலை செய்யனும் குமாரு | குமாரின் சகோதரியாக | தமிழ் | ||
சம்திங் சம்திங் | தெலுங்கு | |||
தில்லு முல்லு | வங்கி அலுவலர் | தமிழ் | ||
யா யா | ஐஸ்வர்யா | தமிழ் | ||
கோலாகலம் | தமிழ் | |||
நவீன சரஸ்வதி சபதம் | பார்வதி | தமிழ் | ||
2014 | வீரம் | தமிழ் | ||
தெனாலிராமன் | தமிழ் | |||
அம்மா அம்மம்மா | தமிழ் | |||
வாலிப ராஜா | தமிழ் | |||
நம்பியார் | தமிழ் | |||
காதல் 2 கல்யாணம் | தமிழ் | |||
2016 | சாகசம் | தமிழ் |
தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]- மர்மதேசம்
- சிதம்பர ரகசியம்
- ரமணியும் ரமணி 2 ம்
- அண்ணாமலை
- கோலங்கள்
- பெண்
- சின்னப் பாப்பா பெரியப் பாப்பா
- எத்தனை மனிதர்கள்
- கனவுகள் இலவசம்
- பெண்மனம்
- உறவுகள் ஒரு தொடர்கதை
- கண்ணாடிக் கதவுகள்
- அது மட்டும் ரகசியம்
- லட்சுமி
- அஞ்சலி
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- இதயம்
- அத்திப் பூக்கள்
- பூவிலங்கு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chowdhary, Y. Sunita (14 July 2012). "The big journey" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/the-big-journey/article3639501.ece.
- ↑ "Devadarshini: It's easier to make viewers cry than make them laugh- Cinema express". Cinema Express.
- ↑ "நாங்க ரெடி... நீங்க ரெடியா?". Kalki. 24 July 2005. pp. 72–75. பார்க்கப்பட்ட நாள் 29 January 2023.
- ↑ "Actress Devadarshini reveals that her daughter Niyathi was supposed to act in Vijay's Bigil ft. 96". Behindwoods. 19 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.