ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 77 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 48: வரிசை 48:
[[பகுப்பு:1946 அமைப்புகள்]]
[[பகுப்பு:1946 அமைப்புகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]

[[tl:Kapulungang Pangkatiwasayan ng Mga Nagkakaisang Bansa]]

19:21, 20 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
United Nations Security Council مجلس أمن الأمم المتحدة (அரபு மொழி)
联合国安全理事会 (சீனம்)
Conseil de sécurité des Nations unies (பிரெஞ்சு)
Совет Безопасности Организации Объединённых Наций (உருசிய மொழியில்)
Consejo de Seguridad de
las Naciones Unidas (எசுப்பானியம்)
நிறுவப்பட்டது1946
வகைமுதன்மை அமைப்பு
சட்டப்படி நிலைசெயலில்
இணையதளம்http://un.org/sc/

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை (United Nations Security Council, UNSC) ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது.

ஐ.நா பாதுகாப்பு அவையில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்; வெட்டுரிமை உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் (சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா) நிரந்தரமில்லாது இரண்டாண்டுகள் செயலாற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்படும் பத்து உறுப்பினர்களையும் கொண்டது. இந்த அமைப்பு ஐ.நா பட்டயத்தின் ஐந்தாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள், எந்நேரமும் கூடுவதற்கு வசதியாக, நியூ யார்க் நகரிலேயே தங்கியிருக்க வேண்டும் இதற்கு முந்தைய உலக நாடுகள் சங்கத்தின் முதன்மைக் குறைபாடே அதனால் ஓர் நெருக்கடியின்போது உடனடியாக செயல்படவில்லை என்பதால் இந்தத் தேவையை ஐ.யா. பட்டயம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு அவையின் முதல் அமர்வு சனவரி 17, 1946ஆம் ஆண்டில் இலண்டனின் திருச்சபை மாளிகையில் கூடியது. அது முதல் தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் இந்த அவை பல இடங்களுக்கு பயணித்து பாரிசு, அடிஸ் அபாபா போன்ற பல நகரங்களிலும் தனது நிரந்தர இடமான நியூயார்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும் தனது சந்திப்புகளை நடத்துகிறது.

வெளியிணைப்புகள்