வி. என். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி Bot: Migrating 2 interwiki links, now provided by Wikidata on d:q3535989 (translate me)
வரிசை 33: வரிசை 33:


{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}
{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}


[[en:Janaki Ramachandran]]
[[sv:Janaki Ramachandran]]

20:31, 7 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஜானகி இராமச்சந்திரன்
படிமம்:VNJ.jpg
வி. என். ஜானகி
பிறப்புநவம்பர் 30, 1923[சான்று தேவை]
வைக்கம், கேரளா
இறப்பு(1996-05-19)மே 19, 1996 (age 73)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகை, அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
கணபதிபட்
எம். ஜி. ராமச்சந்திரன்
பிள்ளைகள்அப்பு என்கிற இரவீந்திரன்
வி. என். ஜானகி
தமிழக முதல்வர்
தொகுதிஆண்டிபட்டி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅ.இ.அ.தி.மு.க

ஜானகி இராமச்சந்திரன் (Janaki Ramachandran) அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுடைய மூன்றாவது மனைவி ஆவார். இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. இவரின் முதல் கணவர் நடிகரும் ஒப்பனையாளருமான கணபதிபட் ஆவார். இவர்கள் இருவருக்கும் அப்பு என்கிற இரவீந்திரன் என்னும் மகன் இருந்தார். இராஜகுமாரி படத்தில் கதைத்தலைவியாக நடித்த இவர் கதைத்தலைவனாக நடித்த எம். ஜி. இராமச்சந்திரனைக் காதலித்தார். இதனால் ஏற்பட்ட பிணக்கில் தன் கணவர் கணபதிபட்டை விட்டுவிலகி தன் மகனோடு வந்து எம். ஜி. இராமச்சந்திரனோடு 18ஆண்டுகள் உடனுறைந்தார். எம். ஜி. இராமச்சந்திரன் இரண்டாவது மனைவி சதானந்தவதி 1962ஆம் ஆண்டில் இயற்கை எய்திய பின்னர் இவர் எம். ஜி. இராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.


எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. எம். ஜி. ஆர் காலத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் ஆதரவாளவர்களுடைய எதிர்ப்பினால் கட்சி உடைந்தது. 1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._ஜானகி&oldid=1341245" இலிருந்து மீள்விக்கப்பட்டது