உள்ளடக்கத்துக்குச் செல்

சபா ஐக்கிய மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபா ஐக்கிய மக்கள் கட்சி
United Sabah People's Party
Parti Bersatu Rakyat Sabah
ڤرتي برساتو رعيت سابه
沙巴人民團結黨
சுருக்கக்குறிPBRS
தலைவர்ஆர்தர் ஜோசப் குருப்
(Arthur Joseph Kurup)
செயலாளர் நாயகம்ரிச்சர்ட் கசுதும்
நிறுவனர்ஜோசப் குருப்
(Joseph Kurup)
தொடக்கம்3 மார்ச் 1994
சட்ட அனுமதி11 மார்ச் 1994
பிரிவுஐக்கிய சபா கட்சி (PBS)
தலைமையகம்Blok B, Lot 19, Tingkat Dua, Lorong Singgah Mata 2, Asia City, 88000
கோத்தா கினபாலு, சபா
கொள்கைதேசியவாதம்
அரசியல் நிலைப்பாடுவலது சாரி
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
(1994–2018), (2020)
சபா ஐக்கிய கூட்டணி (2018–2020)
கூட்டணிகள்:
பெரிக்காத்தான் நேசனல் (2020–2022)
சபா மக்கள் கூட்டணி (செப்டம்பர் 2020)
ஒற்றுமை அரசாங்கம் (நவம்பர் 2022)
நிறங்கள்     மஞ்சள், பச்சை, வெளிர் நீலம்
மலேசிய மேலவை:
0 / 70
மலேசிய மக்களவை:
1 / 26
சபா மாநில சட்டமன்றம்:
0 / 79
இணையதளம்
Facebook PBRS

சபா ஐக்கிய மக்கள் கட்சி (ஆங்கிலம்: United Sabah People's Party; மலாய்: Parti Bersatu Rakyat Sabah) (PBRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியாகும். தற்போது சபா ஐக்கிய மக்கள் கட்சி அதன் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப் (Arthur Joseph Kurup) தலைமையில் உள்ளது.

இதற்கு முன்னர் 1994 முதல் 2023 வரை, இந்தக் கட்சி அதன் நிறுவனர் மற்றும் அதன் முதல் தலைவரான ஜோசப் குருப் (Joseph Kurup) என்பவரால் வழிநடத்தப்பட்டது. இந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக 1994 முதல் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது. 2018 முதல் 2020 வரையிலான ஒரு குறுகிய காலத்திற்கு பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.

பொது

[தொகு]

11 மார்ச் 1994 அன்று, ஐக்கிய சபா கட்சியின் (United Sabah Party (PBS) உறுப்பினர்கள் சிலரைக் கொண்டு ஜோசப் குருப் என்பவரால் சபா ஐக்கிய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. 10 சூன் 1994 அன்று, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றாக இந்தக் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1]

2018 மலேசிய பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியில் இருந்து சபா ஐக்கிய மக்கள் கட்சி வெளியேற முடிவு செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஜோசப் குருப் கூறினார். பின்னர், புதிய ஆளும் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியில் சேர விண்ணப்பித்தது.[2][3] இருப்பினும் அந்த விண்ணப்பம் பின்னர் புறக்கணிக்கப்பட்டது.[4]

மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022

[தொகு]

மார்ச் 2020-இல் ஏற்பட்ட, மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022யின் காரணமாக மலேசியாவின் ஆளும் கட்சியாக இருந்த பாக்காத்தான் அரப்பான் கூட்டணி வீழ்ச்சி அடைந்தது. அதைத் தொடர்ந்து, பாரிசான் நேசனல் கூட்டணியில் இந்த சபா ஐக்கிய மக்கள் கட்சி மீண்டும் இணைந்து கொண்டது.[5][6] அப்போது இருந்து இந்தக் கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இயங்கி வருகிறது.[7][8]

மலேசிய மக்களவை

[தொகு]

மலேசிய மக்களவையில் இந்தக் கட்சிக்கு ஓர் இடம் மட்டுமே உள்ளது.

மாநிலம் #. தொகுதி உறுப்பினர் கட்சி
சபா P182 பென்சியாங்கான் ஆர்தர் ஜோசப் குருப் PBRS
மொத்தம் சபா (1)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. James Chin. "The Sabah State Election of 1994: End of Kadazan Unity - Vol. 34, No. 10 (Oct., 1994), pp. 904-915". University of California Press. 
  2. Durie Rainer Fong (12 May 2018). "Now, PBRS leaves Sabah BN". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
  3. "PBRS is third party to leave Sabah BN". Malaysiakini. 12 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
  4. "PBRS wants to work with Warisan". The Borneo Post. 12 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
  5. Stephanie Leeh (3 October 2018). "PBRS goes back to Sabah Barisan after being rejected by Pakatan". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2018/10/03/pbrs-decides-to-realign-with-sabah-barisan-after-being-slighted-by-pakatan/. 
  6. Kristy Inus (May 12, 2018). "Sabah BN coalition to be disbanded to pave way for Gabungan Bersatu". New Straits Times. https://www.nst.com.my/news/politics/2018/05/368753/sabah-bn-coalition-be-disbanded-pave-way-gabungan-bersatu. 
  7. "Malaysian PM Muhyiddin forms Gabungan Rakyat Sabah alliance to take on Sabah polls". The Straits Times. 12 September 2020 இம் மூலத்தில் இருந்து 30 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201030075917/https://www.straitstimes.com/asia/se-asia/malaysian-pm-muhyiddin-forms-gabungan-rakyat-sabah-alliance-to-take-on-sabah-polls. 
  8. "GRS Signs MOU To Continue Cooperation Reject Outside Interference". The Borneo Post. 6 January 2017. பார்க்கப்பட்ட நாள் 30 April 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_ஐக்கிய_மக்கள்_கட்சி&oldid=4067344" இலிருந்து மீள்விக்கப்பட்டது