செமாங்காட் 46
செமாங்காட் 46 Parti Melayu Semangat 46 Spirit of 46 Malay Party | |
---|---|
சுருக்கக்குறி | S46 |
தலைவர் | தெங்கு ரசாலி அம்சா (Tengku Razaleigh Hamzah) |
துணைத் தலைவர் | ராயிஸ் யாத்தீம் (Rais Yatim) |
தொடக்கம் | 3 சூன் 1989 |
கலைப்பு | 8 அக்டோபர் 1996 |
பிரிவு | அம்னோ (UMNO) |
பின்னர் | அம்னோ (UMNO) |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா[1] |
இளைஞர் அமைப்பு | பெமுடா S46 (Pemuda S46) |
உறுப்பினர் (1996) | 200,000 |
கொள்கை | மலாய் தேசியவாதம் இசுலாமியம் பழமைவாதம் |
அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி |
தேசியக் கூட்டணி | அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா 1990–1996) காகாசான் ராக்யாட் (1990–1996) |
நிறங்கள் | மஞ்சள் மற்றும் பச்சை |
கட்சிக்கொடி | |
செமாங்காட் 46 அல்லது மலாய் செமாங்காட் கட்சி 46 (ஆங்கிலம்: Spirit of 46 Malay Party; மலாய்: Parti Melayu Semangat 46) என்பது மலேசியாவின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மலாய் தேசியவாதம் மற்றும் பழமைவாதம் கொண்ட இந்தக் கட்சியை, கிளாந்தான் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான தெங்கு ரசாலி அம்சா என்பவரால் 1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பான் அம்னோவில் ஏற்பட்ட உட்பூசல்களினால் அந்தக் கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. டீம் ஏ (Team A); டீம் பி (Team B) எனும் அந்த இரு பிரிவுகளில் பி பிரிவைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டு உடன்படிக்கையால் செமாங்காட் 46 நிறுவப்பட்டது.
பொது
[தொகு]1985 - 1986-ஆம் ஆண்டுகளில் பொருளாதார மந்தநிலையை மலேசியா அனுபவித்தபோது செமாங்காட் 46 பற்றிய திட்டம் முதலில் தோன்றியது. 1987-இல், மகாதீர் பின் முகமதுவின் கட்டுப்பாட்டில் அம்னோவின் "டீம் ஏ" பிரிவு; தெங்கு ரசாலி அம்சாவின் "டீம் பி" பிரிவிற்குச் சவாலாக அமைந்தது.
1987-ஆம் ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய அம்னோ தலைவர் தேர்தலில், 41 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் மகாதீர் பின் முகமது வெற்றி பெற்றார்.[2] அதன் பின்னர் தன் அமைச்சரவையில் இருந்த அனைத்து "டீம் பி" அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கினார்.
அம்னோ 46
[தொகு]அம்னோ கட்சியின் பிரதிநிதிகள் பலர் முறையற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி, அம்னோ தேர்தலைத் தள்ளுபடி செய்யுமாறு "டீம் பி" தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதன் காரணமாக, சில தொழில்நுட்பக் காரணங்களினால் அம்னோ சட்டவிரோதமானது என 1988-இல் அறிவிக்கப்பட்டது. மகாதீர் பின் முகமது உடனடியாக அம்னோவை மறுசீரமைத்தார். அந்தச் சீரமைப்பில் "டீம் ஏ" உறுப்பினர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.[3]
இதைத் தொடர்ந்து தெங்கு ரசாலி அம்சா மற்றும் "டீம் பி" தலைவர்கள் தங்களின் சொந்தக் கட்சியை உருவாக்கினர்.[5] அந்தக் கட்சிக்கு அவர்கள் அம்னோ 46 என்று பதிவு செய்ய முயன்றனர். இது பழைய அம்னோவின் அனுதாப உணர்வுகளைத் தூண்டுவதாகவும்; அம்னோ 46 எனும் பெயருக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்தரப்பினர் தம் எதிர்ப்புகளை முன்வைத்தனர்..[2]
துங்கு அப்துல் ரகுமான்
[தொகு]இதன் தொடர்ச்சியாக, அம்னோ 46 எனும் கட்சிப் பெயரில் அம்னோ எனும் பழைய சொல் இருப்பதால், அந்தச் சொல்லைப் புதிய கட்சியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அம்னோ எனும் சொல் தவிர்க்கப்பட்டு செமாங்காட் என்று மாற்றம் செய்யப்பட்டது.[4]
3 சூன் 1989 அன்று, செமாங்காட் 46 கட்சி, மலேசிய சங்கப் பதிவுத் துறையில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.[5] மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் செமாங்காட் 46 கட்சியைத் தொடக்கி வைத்தார்.[6]
கலைப்பு
[தொகு]தொடக்கத்தில் இந்தக் கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு இருந்தது. இருப்பினும் 1990 பொதுத் தேர்தல்; மற்றும் 1995 பொதுத் தேர்தல்களில் செமங்காட் 46 மோசமான நிலையை அடைந்தது. அதன் செல்வாக்கும் வெகுவாகச் சரிந்தது. செமாங்காட் 46 கட்சியை தேசிய நிலையிலான கட்சியாக அமைப்பதற்கு செங்கு ரசாலி அம்சா மில்லியன் கணக்கில் ரிங்கிட் செலவு செய்ததாகவும் அறியப்படுகிறது.[2] இறுதியாக 1996-இல் கட்சியைக் கலைக்கப் போவதாக தெங்கு ரசாலி அம்சா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செமங்காட் 46 கட்சி கலைக்கப்பட்டதும், பெரும்பாலான செமாங்காட் 46 கட்சி உறுப்பினர்களுடன், தெங்கு ரசாலி அம்சா மீண்டும் அம்னோவில் இணைந்தார்.[7] இருப்பினும் அம்னோவில் மீண்டும் இணைவதற்கு சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது; அதன் காரணமாக அவர்களில் சிலர் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகினர்; மேலும் சிலர் மலேசிய இசுலாமிய கட்சியில் சேர்ந்தனர்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ British Broadcasting Corporation Monitoring Service (1996). Summary of World Broadcasts. British Broadcasting Corporation. p. The vote was taken during an extra ordinary general meeting of the party in Kuala Lumpur. Earlier in his speech, Semangat 46 president Tengku Razaleigh.
- ↑ 2.0 2.1 2.2 Yahaya(2003), p. 135
- ↑ Rodan (1996), p. 138
- ↑ Tan (1989), p. 38-40
- ↑ Hwang (2003), p. 182
- ↑ "The Indie Story: 'PARTI MELAYU SEMANGAT 46' (Penghormatan buat UMNO LAMA) Ditulis Oleh Moderator". 2008.
- ↑ "The Indie Story: 'PARTI MELAYU SEMANGAT 46' (Penghormatan buat UMNO LAMA) Moderator". 1 May 2008.
- ↑ Stewart (2003), p. 28
- ↑ "S46-Dissolve: Parti Melayu Semangat '46 To Be Dissolved On Oct 6" (PDF). Bernama. 18 August 1996.
நூல்கள்
[தொகு]- Francis Kok-Wah Loh; Francis Loh Kok Wah; Boo Teik Khoo; Khoo Boo Teik (2002). Democracy in Malaysia: Discourses and Practices. Routledge. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1161-9.
- Hwang, In-Won (2003). Personalized Politics: The Malaysian State Under Mahathir. Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-230-185-2.
- Stewart, Ian (2003). The Mahathir Legacy: A Nation Divided, A Region at Risk. Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86508-977-X.
- Garry Rodan, Asia Research Centre (1996). Political Oppositions in Industrialising Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-14865-0.
- Tan Seng Giaw (1989). First 60 Days: The 27th October ISA Arrests. Democratic Action Party. pp. 38–40.
- Yahaya Ismail (2003). UMNO POLITICS - Abdullah Badawi's DILEMA. Usaha Teguh Sdn Bhd]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2236-03-7.