சரவாக் ஐக்கிய கட்சி
சரவாக் ஐக்கிய கட்சி United Sarawak Party Parti Sarawak Bersatu 砂拉越全民團結黨 ڤرتي سراوق برساتو | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | PSB |
தலைவர் | வோங் சூன் கோ (Wong Soon Koh) |
குறிக்கோளுரை | இப்போது மாறுவோம், சரவாக் முன்னேறுகிறது Ubah Sekarang, Sarawak Maju |
தொடக்கம் | 2014 |
கலைப்பு | 19 மார்ச் 2024 |
பிரிவு | சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (SUPP) |
இணைந்தது | சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி (PDP) |
தலைமையகம் | கூச்சிங், சரவாக் |
உறுப்பினர் | 80,000 |
கொள்கை | பிராந்தியவாதம் பல்லினவாதம் பிராந்தியவாதம் சபா & சரவாக் ஐக்கியம் MA63 உரிமைகள்[1] |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் (BN) (2014–2019) பாக்காத்தான் அரப்பான் (PH) (2019–2021) சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணி (PERKASA) (2021–2023) சரவாக் கூட்டணி (GPS) (2019 & 2023–2024) |
நிறங்கள் | சிகப்பு, மஞ்சள், தங்கம் |
பண் | Parti Sarawak Bersatu |
இணையதளம் | |
www |
சரவாக் ஐக்கிய கட்சி (ஆங்கிலம்: United Sarawak Party; மலாய்: Parti Sarawak Bersatu) (PSB) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள பல்லின அரசியல் கட்சியாகும். 2014-இல் வோங் சூன் கோ (Wong Soon Koh) என்பவரால் நிறுவப்பட்டது. சரவாக் மாநிலத்தின் சீன சமூகத்தினரின் மாற்றம் மற்றும் ஒற்றுமைக்கான புதிய அடையாளமாக இந்தக் கட்சி தொடங்கப்பட்டது.[2]
இந்தக் கட்சி தொடக்கத்தில் ஐக்கிய மக்கள் கட்சி (United People's Party) எனும் பெயரில் நிறுவப்பட்டது; 17 ஆகஸ்டு 2014 அன்று கூச்சிங் நகரில் அதன் தலைமையகத்தைக் கொண்டு இருந்தது. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஏப்ரல் 6-ஆம் தேதி கலைக்கப்பட்டது.[3]
பொது
[தொகு]சரவாக் ஐக்கிய கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர், சரவாக்கில் உள்ள மூன்று முக்கிய சமூகங்களைச் சார்ந்தவர்களாகும். அதாவது சரவாக் சீனர் சமூகம், சரவாக் தயாக் சமூகம் மற்றும் சரவாக் மலாய் சமூகம்; ஆகிய சமூகங்களைச் சார்ந்தவர்கள்.
சரவாக் ஐக்கிய கட்சி என்பது சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியில் (SUPP) இருந்து பிரிந்த கட்சியாகும். சரவாக்கின் மலேசியாவின் இரண்டாவது நிதியமைச்சர் வோங் சூன் கோவால் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சரவாக் சீனர்களின் ஆதரவைப் பெரிய அளவில் பெற்றது.[4][5]
அரசியல்
[தொகு]சரவாக் மாநிலத்தின் சீனர்களின் சமூக, அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைமைத்துவத்தில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன. பாரிசான் நேசனல் கூட்டணியில் இணைவதில் இருந்து பிரச்சினைகள் தொடர்ந்தன.[6]
சரவாக் ஐக்கிய கட்சி அதிகாரப்பூர்வமாக 6 ஏப்ரல் 2024 அன்று கலைக்கப்பட்டது. மேலும் அதன் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியில் இணைக்கப்பட்டனர்.[7]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Retired Anglican bishop Bolly Lapok joins PSB (Video)". Borneo Post Online. https://www.theborneopost.com/2021/11/11/retired-anglican-bishop-bolly-lapok-joins-psb-video/.
- ↑ "Its now PSB". The Borneo Post. 26 February 2019. https://www.theborneopost.com/2019/02/26/its-now-psb.
- ↑ Jessica Jawing (21 October 2014). "Parti Rakyat Bersatu lancar ibu pejabat di Kuching". Utusan Borneo. Retrieved 22 October 2014.
- ↑ "Lo UPP Will Not Be Dissolved to Remain BN Friendly". Bernama. The Borneo Post. 8 July 2016. Retrieved 7 March 2019.
- ↑ "Tycoon Politics in Sarawak". Bernama (in ஆங்கிலம்). Malaysia Today. 1 May 2016. Retrieved 7 March 2019.
- ↑ "Harapan UPP dan Teras untuk sertai gabungan BN Sarawak berkecai". Bernama. Berita Harian. 6 December 2014. Retrieved 22 October 2014.
- ↑ "Parti Sarawak Bersatu to stay independent, won't join Pakatan". The Star (Malaysia). 25 August 2021. https://www.thestar.com.my/news/nation/2021/08/25/parti-sarawak-bersatu-to-stay-independent-won039t-join-pakatan.