சரவாக் தயாக் மக்கள் கட்சி
சரவாக் தயாக் மக்கள் கட்சி Sarawak Dayak People's Party Parti Bansa Dayak Sarawak 砂拉越達雅黨 ڤرتي بنسا دايق سراوق | |
---|---|
சுருக்கக்குறி | PBDS |
தலைவர் | டேனியல் தாஜம் மிரி (Daniel Tajem Miri) |
நிறுவனர் | லியோ மோகி (Leo Moggie Irok) |
தொடக்கம் | 17 சூலை1983 |
கலைப்பு | 21 அக்டோபர் 2004 |
பிரிவு | சரவாக் தேசிய கட்சி |
பின்னர் | சரவாக் மக்கள் கட்சி (PRS) மலேசிய தயாக் காங்கிரசு புதிய சரவாக் தயாக் கட்சி |
தலைமையகம் | கூச்சிங், சரவாக் |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் (1983–2004) கும்புலான் மாஜு (1987) |
நிறங்கள் | கருப்பு, வெள்ளை |
சரவாக் தயாக் மக்கள் கட்சி (ஆங்கிலம்: Sarawak Dayak People's Party; மலாய்: Parti Bansa Dayak Sarawak) (PBDS) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி சரவாக் தயாக்கு பூர்வீக மக்களைச் சார்ந்த ஓர் அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது.
1983-இல், டான்ஸ்ரீ டத்தோ அமர் லியோ மோகி அனாக் ஐரோக் (Datuk Amar Leo Moggie Irok) என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி, சரவாக் தேசிய கட்சியில் இருந்து (SNAP) பிரிந்து சென்ற கட்சியாகும்.[1] இந்தக் கட்சி1987 சரவாக் மாநிலத் தேர்தலில் 15 இடங்களை வென்றது. அதன் பங்காளிக் கட்சியான சரவாக் மலேசிய மக்கள் சங்கம் (PERMAS) 5 இடங்களை மட்டுமே வென்றது.
பொது
[தொகு]தலைமைத்துவ நெருக்கடியின் காரணமாக, முதலில் 2003-ஆம் ஆண்டிலும் இரண்டாவதாக 2004-ஆம் ஆண்டிலும் சரவாக் தயாக் மக்கள் கட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது.
சரவாக் தயாக் மக்கள் கட்சியின் கலைப்பு, மேலும் இரண்டு புதிய கட்சிகளை உருவாக்க வழிவகுத்தது; ஒன்று சரவாக் மக்கள் கட்சி (PRS). சரவாக் மக்கள் கட்சி 2004-இல் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்றொரு கட்சியான மலேசிய தயாக் காங்கிரசு கட்சி (Malaysian Dayak Congress) (MDC) சங்கங்களின் பதிவாளரிடம்(RoS) பதிவு செய்யத் தவறிவிட்டது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chin, James (1995). "Sarawak's 1987 and 1991 State Elections: An Analysis of the Ethnic Vote". Borneo Research Bulletin 26: 3–24. http://www.borneoresearchcouncil.org/BRB%20PDF%20scans/BRB_1995_26.pdf.
- ↑ Tawie, Joseph (2012). "We won't beg, says protem PBDS chief". FMT News. http://www.freemalaysiatoday.com/category/nation/2012/11/05/we-wont-beg-says-protem-pbds-chief/.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Dayak dilemma (Part 1) பரணிடப்பட்டது 2009-07-07 at the வந்தவழி இயந்திரம்
- The Dayak dilemma (Part 2)[தொடர்பிழந்த இணைப்பு]
- The Dayak dilemma (Part 3) பரணிடப்பட்டது 2009-06-07 at the வந்தவழி இயந்திரம்
- The Dayak dilemma (Part 4) பரணிடப்பட்டது 2013-06-09 at the வந்தவழி இயந்திரம்