இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்
இந்தியாவில் முஸ்லிம் சமூகம் மிகப்பெரிய மத-சிறுபான்மையினராக இருந்தபோதிலும் இவர்கள் மீது அடிக்கடி வலதுசாரி இந்து தேசியவாதிகளால் வன்முறைகளும், தாக்குதல்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. கடந்த காலங்களில், இந்த தாக்குதல்கள் வெறுப்பின் வெளிபாட்டின் வழியே அமைந்தன. மேலும் இந்த வன்முறைகள் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான இனவாத மோதலாக வகைப்படுத்தப்பட்டன. இருப்பினும், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிறகு உருவாகிய இந்து-தேசியவாதத்தின் எழுச்சிக்கு பின்னர் இந்த தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்டதாகவும்,[1] அரசு அனுமதித்த படுகொலைகளின் வடிவத்தை எடுத்துக் கொண்டது.[2][3] 1954 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 6,933 மத மோதல்கள நடந்தன. 1950 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மத மோதல்களில் சுமார் 10,000 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[4]
காரணங்கள்
[தொகு]முஸ்லிம்-விரோத வன்முறையின் வேர்களை இந்தியாவின் கடந்த காலங்களில் காணலாம்.இடைக்காலத்தில் இந்தியாவின் வரலாற்றில் இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு உருவாக்கிய கோபம், பிரித்தானிய காலனித்துவவாதிகள் 1857 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற சிப்பாய்க் கிளர்ச்சிக்கு பிறகு தங்கள் அரசியல் பிடியை மீண்டும் வலுப்பெற பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு விதையிட்டனர்.[5] மற்றும் இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் என்ற இசுலாமிய நாடு பிறந்தப்போது உருவான வெறுப்பு ஆகியவை தான் முஸ்லிம் விரோத வன்முறைக்கு வேர்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதற்கு ஒரு முக்கிய காரணி இந்து-தேசியவாத கட்சிகளின் பெருக்கம் ஆகும். அவை ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் அரசியல் குடையுடன் இணைந்து அல்லது கீழ் செயல்படுகின்றன. தற்போதைய பாரதீய ஜனதா அரசு- ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை நிறுவனமாகும். அதில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் எம்.எஸ் கோல்வல்கர் ஆகியோரின் இந்துத்துவ- சித்தாந்தம் கடைப்பிடிக்கபடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து-தேசிய அமைப்புகளின் கருத்தியலாளர்களாகக் கருதப்படும் சாவர்க்கர் மற்றும் கோல்வல்கர் ஹிட்லர் மற்றும் முசோலினியின் மிகப்பெரிய அபிமானிகள். இவர்கள் நாசிசம் மற்றும் பாசிசத்தின் விதிகள் அடிப்படையாக கொண்ட இந்துத்துவ சித்தாந்தத்தை உருவாக்கினர்.[6] கோல்வால்கரின் எழுத்துக்களில் இது தெளிவாகத் தெரிகிறது.
ஹிட்லரின் நாஜி-ஜெர்மனியைப் பற்றி எழுதுகையில், கோல்வால்கர் இவ்வாறு குறிப்பிட்டார்: "இனம் பெருமை மிக உயர்ந்ததாக இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி இந்துத்துவ-சித்தாந்தத்தை ராம் ராத் ஊர்வலம் மூலம் இந்திய அரசியலின் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு சென்றதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
முஸ்லிம் விரோத கோட்பாடு, அரசியல் மற்றும் கொள்கைகள் இந்துத்துவா தலைவர்களுக்கு குறிப்பாக பாஜகவுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிஞர்கள் வாதிடுகின்றனர். எனவே முஸ்லிம்-விரோதம் அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறலாம்.[7]
வெளிப்பாடு
[தொகு]முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பெரும்பாலும் இந்துக்களால் முஸ்லிம்கள் மீது கும்பல் தாக்குதல்களின் வடிவத்தில் உள்ளது.[8] [9] இந்த தாக்குதல்களை இந்தியாவில் இனவாத தாக்குதல் என குறிப்பிடப்படுகிறது. மேலும் இது பெருமான்மை இந்துக்களுக்கு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடையேயான குழு மோதலாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இது அதிகரிப்பதற்கு 20ஆம் நூற்றாண்டின் முழுவதும் பரப்படும் இஸ்லமிய வெறுப்பு பிரச்சாரமும் ஒரு காரணம்.[10] இது மாதிரியான சம்பவங்கள் பெரும்பாலானவை இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அதேசமயம் தெற்கில் வகுப்புவாத உணர்வு குறைவாகவே காணப்படுகிறது.[11]
பெரிய சம்பவங்கள் பலவற்றுள் 1946 ஆம் ஆண்டில் கிரேட் கல்கத்தா கொலைகள், பீகார் மற்றும் கர்முக்தேஷ்வர், நவகாளி படுகொலைகள், 1947 ஆம் ஆண்டில் ஜம்முவில் படுகொலை செய்யபட்ட முஸ்லிம்கள், பின் முஸ்லிம்கள் பெரிய அளவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் போலோ நடவடிக்கை, பின்னர் கொல்கத்தாவில் முஸ்லிம் எதிரான கலவரம், 1950 ஆம் ஆண்டின் பாரிசல் கலவரங்கள், 1964 ஆம் ஆண்டின் கிழக்கு-பாக்கிஸ்தான் கலவரம், 1969 ஆம் ஆண்டின் குஜராத் கலவரம், 1984 பேவண்டி கலவரம, 1985 குஜராத் கலவரம், 1989 பாகல்பூர் கலவரம், பம்பாய் கலவரம், 1983 ஆம் ஆண்டில் நெல்லி கலவரம்[12] மற்றும் 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் மற்றும் 2013 ஆம் ஆண்டில் முசாபர்நகர் கலவரம் .
பிரிவினைக்கு பின்பன இந்த வன்முறைகளின் முறைகள் நன்கு நிறுவப்பட்டவையாகும். இதை பல ஆய்வுகள் விளக்குகின்றன.[13] 1950 ஆம் ஆண்டு முதல் இந்து-முஸ்லிம் வகுப்புவாத வன்முறையில் 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.[14] அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1954 ஆம் ஆண்டு மற்றும் 1982 ஆம் ஆண்டுக்கு இடையில் 6,933 இனவாத வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. 1968 ஆம் ஆண்டு மற்றும் 1980 ஆம் ஆண்டுக்கு இடையில் மொத்தம் 3,949 சம்பவங்களில் 530 இந்துக்கள் மற்றும் 1,598 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[8]
1989 ஆம் ஆண்டில், இந்தியாவின் வடக்கு மாநிலங்கள் முழுவதும் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்தன.[15] பத்திரிக்கையாளர் பிரவீண் சுவாமி குறிப்பிடுகையில் இந்த காலகட்டத்தில் நடைப்பெற்ற வன்முறைகள் சுதந்திர இந்தயாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான காஷ்மீர் மோதல் குறித்து இந்தியாவின் அணுகுமுறையையும் இது பாதிக்கிறது.[16]
2017 ஆம் ஆண்டில் வெளியான இந்தியாஸ்பென்ட் அறிக்கையின்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற காரணத்தால் நடைப்பெற்ற தாக்குதல்களில் பாதிக்கபட்டவர்களில் 84% நபர்கள் முஸ்லிம்கள். இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 97% 2014 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தான் அதிகம் பதிவாகியுள்ளது.[17][18]
காரணங்கள் மற்றும் விளைவுகள்
[தொகு]அரசியல் கட்சிகளின் பங்கு
[தொகு]பல சமூக விஞ்ஞானிகள் இந்த வன்முறைகளில் பல அரசியல் கட்சிகள் நிறுவன ரீதியாக ஆதரவு அளித்துள்ளதாக கருதுகின்றனர். குறிப்பாக இந்து தேசியவாத தன்னார்வ அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) இணைக்கப்பட்ட அமைப்புகளால் வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு உடந்தையாக பாரதீய ஜனதா மற்றும் சிவசேனாவை பல அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.[19] [20] [21] [22] மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகள் மூலம் இந்த அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயம பெறுவதற்கு பயன்படுத்துகின்றனர். [20] [20] எடுத்துக்காட்டாக, ரஹீல் தத்திவாலா மற்றும் மைக்கேல் பிக்ஸ் ஆகியோரின் ஆய்வில், பாஜக ஏற்கனவே வலுவான கட்டமைப்பில் இருக்கும் பகுதிகளை விட மிகவும் சவாலான, கடுமையான தேர்தல் எதிர்ப்பை எதிர்கொள்ளும் பகுதிகளில் தான் வன்முறைகள் மிக அதிகமாக நடந்துள்ளது என்று கூறியுள்ளது. [14]
1989 ஆம் ஆண்டில், இந்தியாவின் வடக்கில் முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்தன. இதன் மூலம் உள்ளாட்சி மற்றும் மாநிலத் தேர்தல்களில் பாஜக மேலும் வெற்றி பெற்றது. [15] சமூக மானுடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜா தம்பியா 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகல்பூரிலும், 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹாஷிம்பூராவிலும், 1980 அம ஆண்டில் நடைபெற்ற மொரதாபாத் கலவரத்திலும் நடைபெற்ற படுகொலைகள் ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைகள் என்று கூறுகிறார்.[23] மேலும் ராம் புனியானியின் கூற்றுப்படி, 1990 களில் நடந்த வன்முறை காரணமாக சிவசேனா தேர்தல்களிலும், 2002 வன்முறைக்குப் பின்னர் குஜராத்தில் பாஜகவும் வெற்றி பெற்றது. [24] எவ்வாறாயினும், குஜராத்தில் பாஜகவின் நடவடிக்கைகள் முழு இந்தியாவிற்கும் சமமாக இல்லை என்று கியான் பிரகாஷ் எச்சரிக்கிறார், மேலும் இந்த மூலோபாயத்தை நாடு தழுவிய அளவில் பயன்படுத்துவதில் இந்துத்துவா இயக்கம் வெற்றிகரமாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். [25]
பெரிய சம்பவங்கள்
[தொகு]பெரிய சம்பவங்கள் காரணமாக மொத்த பாதிக்கப்பட்டவர்கள்
[தொகு]ஆண்டு | நிலை | இறந்தவர் | காயம் | சிறையில் அடைக்கப்பட்டார் | இடம்பெயர்ந்தவர்கள் | குற்றவாளிகளின் தண்டனை | சம்பவம் |
---|---|---|---|---|---|---|---|
1964 | மேற்கு வங்கம் | 100+ | 438 | 7000+ | ? | ? | 1964 கல்கத்தா கலவரம் |
1983 | அசாம் | 1800 | ? | ? | ? | ? | 1983 நெல்லி பேரினப்படுகொலை |
1969-1989 | குஜராத் | 3130 | ? | ? | ? | ? | 1969 முதல் 1989 வரை குஜராத் கலவரம் |
1987 | உத்தரபிரதேசம் | 42 | ? | ? | ? | ? | 1987 ஹாஷிம்புரா படுகொலை |
1989 | பிஹார் | 1000 | ? | ? | 50000 | ? | 1989 பாகல்பூர் கலவரங்கள் |
1992 | மகாராஷ்டிரா | 900 | 2036 | ? | 1000 | ? | 1992 பம்பாய் கலவரம் |
2002 | குஜராத் | 2000 | ? | ? | 200000 | ? | 2002 குஜராத் கலவரங்கள் |
2013 | உத்தரபிரதேசம் | 42 | 93 | 150 | 50000 | ? | 2013 முசாபர்நகர் வன்முறை |
2020 | டெல்லி | 53 | 200 | ? | ? | ? | 2020 டெல்லி கலவரம் |
பொருந்தாது | தோராயமான மொத்தம் | 9067 | 2767 | 7150 | 301000 | பொருந்தாது | பொருந்தாது |
1964 கொல்கத்தா கலவரங்கள்
[தொகு]இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நடந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 438 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 7000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலவரத்தால் 70,000 முஸ்லிம்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 55,000 முஸ்லிம்களுக்கு இந்திய இராணுவத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்கு பின்னர் கொல்கத்தாவில் உள்ள முஸ்லிம்கள் முன்பு எப்போதும் இல்லாததை விட மிகவும் நெருக்கடிக்கு ஆளாகினர். இன்னமும்மேற்கு வங்கத்தில் உள்ள சில கிராமப் புறங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது.[26]
1983 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் நெல்லி படுகொலை நிகழ்ந்தது. வங்காள வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,800 முஸ்லிம்கள் நெல்லி என்ற கிராமத்தில் லாலுங் பழங்குடியினரால் ( திவா என்றும் அழைக்கப்படுகிறார்கள்) படுகொலை செய்யப்பட்டனர். [27] [28] அசாம் இயக்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக் கடுமையான படுகொலைகளில் ஒன்றாக இது விவரிக்கப்பட்டுள்ளது. [29] [30]
இந்த சம்பவத்திற்கு மேற்கோள் காட்டப்பட்ட ஒரு காரணத்தில் அசாமில் வங்காள முஸ்லிம்கள் குடியேற்றம் மீதான மனக்கசப்பை வளர்த்ததன் விளைவாக இந்த படுகொலை நடத்தபட்டதாக கூறப்பட்டுள்ளது. [31] சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பெயர்களை தேர்தல் பதிவேட்டில் இருந்து நீக்கி அவர்களை மாநிலத்திலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும் என்று அசாம் இயக்கம் வலியுறுத்தியது. இந்த இயக்கத்திற்கு பரவலான ஆதரவு இருந்தது. இது 1981 மற்றும் 1982 க்கு இடையில் துண்டிக்கப்பட்டது. [32]
1951 முதல் சட்டவிரோதமாக மாநிலத்திற்குள் நுழைந்த எவரையும் நாடு கடத்த வேண்டும் என்று அசாம் இயக்கம் கோரியது. ஆனால் மத்திய அரசு 1971 ஆம் ஆண்டினை வரையேறாக முடிவு செய்தது. 1982 ஆம் ஆண்டின் இறுதியில், மத்திய அரசு தேர்தல்களை அறிவித்தது. அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அசாம் இயக்கம் அழைப்பு விடுத்தது. பிறகு இது பரவலான வன்முறைக்கு வழிவகுத்தது. [32]
நெல்லி படுகொலை தொடர்பான அதிகாரபூர்வ திவாரி கமிஷன் அறிக்கை இன்னும் பாதுகாக்கப்பட்ட இரகசியமாக உள்ளது (மூன்று பிரதிகள் மட்டுமே உள்ளன).[33] 600 பக்க அறிக்கை 1984 ஆம் ஆண்டில் அசாம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசு ( ஹிடேஸ்வர் சைக்கியா தலைமையில்) இதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்த முடிவை அசாமில் அடுத்தடுத்த அரசாங்கங்களும் பின்பற்றின.[34] அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மற்ற கட்சியினரும் திவாரி கமிஷன் அறிக்கையை பகிரங்கப்படுத்த வெளிபடுத்த சட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி வழங்கப்படும் என்று அவர் கூறுகின்றனர்.[35]
அப்போதிருந்து, அப்பர் அசாமில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் எதுவும் இல்லை. [36]
1969 முதல் 1989 வரை குஜராத் கலவரங்கள்
[தொகு]1969 குஜராத் கலவரத்தின்போது, 630 நபர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [37] 1970 பிவாண்டி கலவரம் முஸ்லிம் விரோத வன்முறையின் ஒரு நிகழ்வு ஆகும். இது மே 7 முதல் 8 வரை இந்திய நகரங்களான பிவாண்டி, ஜல்கான் மற்றும் மகாத் ஆகிய இடங்களில் நிகழ்ந்தது. இதில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீது தீ வைத்து சேதமடைய செயப்பட்டது. 1980 ல் மொராதாபாத்தில் 2,500 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீடு 400 மற்றும் பிற அமைப்புகள் 1,500 முதல் 2,000 வரை மதிப்பிடுகின்றனர். இந்த வன்முறையைத் திட்டமிடுவதில் உள்ளூர் காவல்துறையினர் நேரடியாக சம்பந்தப்பட்டனர். [38] அயோத்தி சர்ச்சை மற்றும் தங்களின் வலிமையை காட்டி சிறுபான்மையினரை எச்சரிக்கும் வகையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தால் 1989 ஆம் வருடம் பகல்பூரில் கிட்டத்தட்ட 1,000 மக்கள் வன்முறை தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது [37] [39]
1987 ஹாஷிம்புரா பேரினப்படுகொலை
[தொகு]ஹாஷிம்புரா படுகொலை 1987 ஆம் ஆண்டு மே 22 அன்று நடந்தது. இது உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடந்ததாகும். இந்திய மாகாண ஆயுத ஊர் காவல் படையினர் ஹாஷிம்புராவில் 42 முஸ்லிம் இளைஞர்களை சுற்றி வளைத்து லாரியில் ஏற்றி காசியாபாத் மாவட்டத்தில் முராத் நகருக்கு அருகிலுள்ள புறநகர்ப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பிறகு அங்கு முஸ்லிம்கள் ஆயுத ஊர் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிறகு முஸ்லிம்களின் உடல்கள் நீர் கால்வாய்களில் வீசப்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு இறந்த உடல்கள் கால்வாய்களில் மிதந்து கிடந்தன. 2000 மே மாதத்தில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் 16 பேர் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தால் 2002 ஆம் ஆண்டில் காஜியாபாத்தில் இருந்து டெல்லியில் உள்ள டிஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.[40][41] இது நிலுவையில் உள்ள மிகப் பழமையான வழக்கு. 2015 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று, 1987 ஆம் ஆண்டு ஹாஷிம்புரா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் டிஸ் ஹசாரி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.[42] குற்றம் சாட்டப்பட்ட ஆயுத ஊர் காவல் படையினர் எவரையும் படுகொலையில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் சரியாக சுட்டிக்காட்டவில்லை என்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுத ஊர்காவல் படையின் 16 குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து.பிறகு நடந்த மேல் விசாரணையில் நீதிமன்றங்களின் தீர்ப்பை ரத்து செய்தது.[43][44][45]
அக்டோபர் 24, 1989 அன்று பீகார் பாகல்பூர் மாவட்டத்தில், இந்த வன்முறை சம்பவங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்தன. இந்த வன்முறை பாகல்பூர் நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள 250 கிராமங்களையும் பாதித்தது. வன்முறையின் விளைவாக 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும் 50,000 பேர் இடம்பெயர்ந்தனர். விடுதலை இந்தியாவில் நடந்த மிக மோசமான இந்து-முஸ்லீம் வன்முறை இதுவாக வரலாறில் கருதப்படுகிறது[46][47][48].
1992 பம்பாய் கலவரம்
[தொகு]இந்து தேசியவாதிகளால் பாபர் மசூதியை இடித்தது 1992 மும்பை கலவரத்திற்கு வழிவகுத்தது. [49] பிரண்ட்லைன் பத்திரிகையில் கோரி விண்டர் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், "அதிகாரப்பூர்வமாக 900 நபர்கள் இந்த கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூட்டினால் இறந்தனர். 2,036 நபர்கள் காயம் அடைந்தனர். மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்." [50] பிபிசி நிருபர் டோரல் வரியா, கலவரத்தை "ஒரு முன் திட்டமிடப்பட்ட படுகொலை" என்று அழைத்தார். இந்த கலவரம் 1990 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது. மேலும் பாபர் மசூதியை அழிப்பது மூலம் இந்த கலவரத்தின் "இறுதி ஆத்திரமூட்டல்" என்றும் கூறினார். [51]
பல அறிஞர்கள் இந்த கலவரத்தை நடத்த முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்து தேசியவாத கலவரக்காரர்கள் முஸ்லிம் வீடுகள் மற்றும் வணிகங்கள் பற்றிய தகவல்களை பொது சாரா மூலங்களிலிருந்து பெற்றுள்ளனர் என்றும் முடிவு செய்துள்ளனர்.[52] இந்த வன்முறை பால் தாக்கரே தலைமையிலான இந்து தேசியவாத குழுவான சிவசேனாவால் திட்டமிடப்பட்டதாக பரவலாக தெரிவிக்கப்படுகிறது. [53] சிறப்பு உயர்மட்ட விசாரணை குழு உறுப்பினர் வி. தேஷ்முக், இந்த கலவரத்தை விசாரிக்கும் ஆணையத்திற்கு ஆதாரங்களை வழங்கினார். அயோத்தியில் உள்ள மசூதி பாதுகாக்கப்படும் என்ற அரசியல் உத்தரவாதத்தின் காரணமாக உளவுத்துறை மற்றும் தடுப்பு தோல்விகள் ஏற்பட்டன என்றும், வன்முறைச் செயல்களில் சிவசேனாவின் திறன்களை காவல்துறை முழுமையாக அறிந்திருப்பதாகவும், அவர்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டியதாகவும் அவர் கூறினார் . [54]
பிரிவினைக்குப் பின்னர், முஸ்லிம் சமூகம் சந்தித்த வன்முறைகளில் மிக கொடுமையான வன்முறை குஜராத்தில் நடந்தவை தான்.[55] 2002 ஆம் ஆண்டில் நடந்த கலவரம், "பாசிச அரச பயங்கரவாதத்தின்" செயல் என்று விவரிக்கப்பட்டது. [56] இதில் இந்து தீவிரவாதிகள் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைச் செயல்கள்.[57]
இந்த சம்பவத்தின் தொடக்கப் புள்ளியாக சொல்லப்படுவது முஸ்லிம்களால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தான். [58] இந்த சம்பவத்தின் போது, இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டனர் அல்லது வெட்டப்பட்டனர். [59] இந்த கற்பழிப்புகள் ஆளும் பாஜகவால் நடத்தபட்டன. [60] [61] இதனால் 200,000 பேர் இடம்பெயர்ந்தனர். [62] இறப்பு எண்ணிக்கை 254 இந்துக்கள் மற்றும் 790 முதல் 2,000 முஸ்லிம்கள் வரை அதிகாரபூர்வ மதிப்பீட்டிலிருந்து கூறப்படுகிறது. [63] பின்னர் முதல்வர் நரேந்திர மோடி மீதும் வன்முறை கண்டுகொள்ளாதிருத்தலை குற்றம் சாட்டப்பட்டது. இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் சொத்துக்கள் பற்றிய தகவலை காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் கொடுத்து கலவரத்திற்கு உதவினர்.[64]
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இரண்டு முக்கிய மத சமூகங்களான இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மோதல்கள் தான் முசாபர்நகர் வன்முறையாகும். இந்த கலவரத்தின் விளைவாக 42 முஸ்லிம்கள் மற்றும் 20 இந்துக்கள் உட்பட 62 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர் மற்றும் 50,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
2020 டெல்லி கலவரங்கள்
[தொகு]2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைப்பெற்ற கலவரத்தில் 53 பேர் இறந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முஸ்லிம் விரோதமாக சட்டமாக பார்க்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தால் இந்த கலவரம் நடைப்பெற்றது. இந்த கலவரத்தை ஒரு படுகொலை என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.[65]
சித்தரிப்புகள்
[தொகு]2002 ஆம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் கலவரத்தின் போது நிகழ்ந்த குல்பர்க் சொசைட்டி படுகொலையை அடிப்படையாகக் கொண்ட "பர்சானியா' திரைப்படம் குஜராத்தில் உள்ள திரையரங்குகளால் புறக்கணிக்கப்பட்டது. இந்த திரைப்படம் மற்றொரு கலவரத்தைத் தூண்டும் என்ற அச்சத்தால் புறக்கநிக்கபட்டது என்று சொல்லப்பட்டது. இந்த திரைப்படத்தில் இந்து தீவிரவாதிகளால் முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் வைத்து உயிருடன் எரிக்கப்படுவது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் எரிக்கபடுவது, குழந்தைகள் துண்டுகளாக வெட்டப்படுவது போன்ற அட்டூழியங்களை ஆவணப்படுத்துகிறது. [66]
ராகேஷ் ஷர்மாவின் ஃபைனல் சொலுசன் (இறுதி தீர்வு) என்ற திரைப்படம் 2002 ல் குஜராத்தில் நடந்த வன்முறைகளை உள்ளடக்கிய சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. [67] இந்த திரைப்படத்தை இந்திய திரைப்படத் தணிக்கை குழு தடை செய்ய முயன்றது. ஆனால் 2004 ஆம் ஆண்டில் குழுவின் தலைவர் அனுபம் கெர் இதற்கு சான்றிதழை வழங்கினார். இந்த திரைப்படத்தின் வெட்டப்படாத காட்சிகள் திரையிடப்பட அனுமதி அளித்தார்.[68]
மேலும் காண்க
[தொகு]- இந்து பயங்கரவாதம்
- இந்தியாவில் பசு விழிப்புணர்வு வன்முறை
- இந்தியாவில் மத வன்முறை
- இந்து எதிர்ப்பு உணர்வு
- இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை
- முஸ்லிம்களை துன்புறுத்துதல்
- இந்தியாவில் பயங்கரவாதம்
- இந்தியாவில் இஸ்லாம்
- வட கிழக்கு டெல்லி கலவரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jaffrelot, Christophe. Hindu Nationalist Movement and Indian Politics.
- ↑ Filkins, Dexter. "Blood and Soil in Narendra Modi's India". The New Yorker (in ஆங்கிலம்). Archived from the original on 22 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
- ↑ Fachandi, P. Pogrom in Gujarat: Hindu Nationalism and Anti-Muslim Violence in India.
- ↑ ʻAbd Allāh Aḥmad Naʻīm. Islam and the Secular State: Negotiating the Future of Shari'a.
- ↑ Gupta, Narayani (1981). Delhi between Two Empires. New Delhi: Oxford University Press.
- ↑ "RSS, Nazism and Fascism". Countercurrents. Archived from the original on 22 June 2020.
- ↑ Brass, P. R. (2003). "The Production of Hindu-Muslim Violence in Contemporary India". Sociology of Religion (University of Chicago Press) 65 (3): 304. doi:10.2307/3712256.
- ↑ 8.0 8.1 Brass 2003.
- ↑ Riaz 2008.
- ↑ Herman 2006.
- ↑ Cohen 2013.
- ↑ Ganguly 2007.
- ↑ Pennington 2012.
- ↑ 14.0 14.1 Dhattiwala 2012.
- ↑ 15.0 15.1 Chandavarkar 2009.
- ↑ Swami 2006.
- ↑ Rao, Ojaswi; Abraham, Delna (28 June 2017). "86% Dead In Cow-Related Violence Since 2010 Are Muslim; 97% Attacks After 2014". IndiaSpend.com. Archived from the original on 28 September 2017. பார்க்கப்பட்ட நாள் 23 September 2017.
- ↑ Wilkes, Tommy; Srivastava, Roli (28 June 2017). "Protests held across India after attacks against Muslims". Reuters. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ Brass b.
- ↑ 20.0 20.1 20.2 Jaffrelot 2011.
- ↑ Sarkur 2007.
- ↑ Brekke 2012.
- ↑ Tambiah 1997.
- ↑ Puniyan 2003.
- ↑ Prakash 2007.
- ↑ "1964: Riots in Calcutta leave more than 100 dead". BBC News. Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
- ↑ Hazarika 1984.
- ↑ Kokrajhar & Dhubri 2012.
- ↑ Ghosh 2004.
- ↑ Hussain 2009.
- ↑ Datta 2012.
- ↑ 32.0 32.1 Chatterji 2013.
- ↑ "83 polls were a mistake: KPS Gill". Assam Tribune. 18 February 2008. Archived from the original on 7 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
- ↑ Rehman, Teresa. "An Untold Shame". Tehelka Magazine. Archived from the original on 11 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2011-12-08.
- ↑ "Flashback to Nellie Horror:AUDF to move court for probe report" இம் மூலத்தில் இருந்து 8 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180908092722/https://www.telegraphindia.com/1080219/jsp/guwahati/story_8920369.jsp. பார்த்த நாள்: 10 October 2012.
- ↑ Saikia 2005, ப. 65.
- ↑ 37.0 37.1 Khalidi 2009.
- ↑ Engineer 1991.
- ↑ Berglund 2011.
- ↑ "Justice out of sight" இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080810064151/http://www.hinduonnet.com/fline/fl2210/stories/20050520001504300.htm. பார்த்த நாள்: 26 February 2015.
- ↑ "Hashimpura massacre: Rifles given to PAC" இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104213630/http://articles.timesofindia.indiatimes.com/2006-07-27/india/27806339_1_rifles-case-property-hashimpura-massacre. பார்த்த நாள்: 12 February 2016.
- ↑ "16 acquitted in 1987 Hashimpura massacre case". http://www.thehindu.com/news/national/other-states/16-acquitted-in-1987-hashimpura-massacre/article7018797.ece?homepage=true. பார்த்த நாள்: 21 March 2015.
- ↑ "1987 Hashimpura massacre case: Delhi HC sentences 16 ex-policemen to life imprisonment". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1987-hashimpura-massacre-case-delhi-hc-sentences-16-cops-to-life-imprisonment/articleshow/66442007.cms?from=mdr. பார்த்த நாள்: 17 March 2020.
- ↑ Hashimpura Massacre: A brutal and bone – chilling action of custodial killings (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Delhi High Court sentences 16 ex-cops to life imprisonment in Hashimpura massacre case". https://theprint.in/india/governance/delhi-high-court-sentences-16-ex-cops-to-life-imprisonment-in-hashimpura-massacre-case/143166/. பார்த்த நாள்: 17 March 2020.
- ↑ "1989 Bhagalpur violence", Wikipedia (in ஆங்கிலம்), 2020-08-21, பார்க்கப்பட்ட நாள் 2020-10-17
- ↑ https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bihar-polls-will-bhagalpur-forgive-congress-for-1989-riots/articleshow/49304685.cms
- ↑ "Chronology of communal violence in India - Hindustan Times". web.archive.org. 2013-02-10. Archived from the original on 2013-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
- ↑ Metcalf 2009.
- ↑ Setalvad, Teesta. "Gory winter". Frontline (in ஆங்கிலம்). Archived from the original on 30 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
- ↑ Varia 2007.
- ↑ Chris Ogden. A Lasting Legacy: The BJP-led National Democratic Alliance and India's Politics. Journal of Contemporary Asia. Vol. 42, Iss. 1, 2012
- ↑ Tambiah 1997, ப. 254.
- ↑ Blom Hansen 2001, ப. 137.
- ↑ Ghassem-Fachandi 2012.
- ↑ Singh 2010.
- ↑ Burke, Jason (2014-11-25). "Terror threat to India rising again six years after Mumbai attacks" (in en-GB). The Guardian. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/cities/2014/nov/26/india-terror-threat-mumbai-attacks.
- ↑ Tilly 2006, ப. 119.
- ↑ Holst 2004, ப. 149.
- ↑ Raman 2009, ப. 210.
- ↑ Gangoli 2007, ப. 42.
- ↑ Shani 2007, ப. 70.
- ↑ Campbell 2012, ப. 233.
- ↑ Murphy 2011, ப. 86.
- ↑ Kamdar, Mira (2020-02-28). "What Happened in Delhi Was a Pogrom". The Atlantic (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 May 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
- ↑ Chu 2007.
- ↑ Gupta 2013.
- ↑ Mazzarella 2013.