உள்ளடக்கத்துக்குச் செல்

பாகல்பூர் கலவரம், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகல்பூர் கலவரம், 1989
வரைபடத்தில் பாகல்பூர்
தேதிஅக்டோபர்- நவம்பர்1989
அமைவிடம்
இந்தியா, பீகார், பாகல்பூர்
முறைகள்கொலை, கொள்ளை
தரப்புகள்
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்

(000 மக்கள் கொல்லப்பட்டனர்)[1]

பாகல்பூர் கலவரம் (Bhagalpur riots) 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தியதி இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பாகல்பூர் நகரில் நடைபெற்றது. இக்கலவரம் இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே 2 மாதங்கள் வரை நடைபெற்றது. இக்கலவரத்தினால் பாகல்பூர் மற்றும் அதைச் சார்ந்த 250 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இக்கலவரத்தினால் சுமார் 1000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 900 பேர் இஸ்லாமியர்கள். மேலும் 50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.[2] அந்த காலகட்டத்தில் சுதந்திர இந்தியாவின் ஆக மோசமான இந்து முஸ்லீம் கலவரம் இது என கருதப்பட்டது.[1]

கலவரத்தின் பின்னணி[தொகு]

இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிஷேரி பூஜை மற்றும் மொஹ்ரம் பண்டிகை தொடர்பாக சிறு பதட்டம் இருந்து வந்தது..[3] 1989 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பூஜிக்கப்பட்ட செங்கல்களை நாடு முழுவதும் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஃப்தேபூர் கிராமத்தில் நடைபெற்ற போது அங்கு கலவரம் நடைபெற்றது. கலவரத்திற்கு காரணம் 200 இந்து மாணவர்கள் முஸ்லீம் மாணவர்களால் கொல்லப்பட்டனர் என்ற வதந்தி ஆகும். மேலும் மற்றுமொரு வதந்தி 31 இந்து மாணவர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் சமஸ்கிரதக் கல்லூரி கிணற்றினுள் வீசப்பட்டது என்பதாகும்.[3] இந்நிகழ்வின் பின்னணியில் அரசியல் நடவடிக்கைகள் இருந்தன என சந்தேகிக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 SNM Abdi (1989-11-26). "When Darkness Fell". Illustrated Weekly of India. http://www.indiarightsonline.com/Sabrang/relipolcom81-90.nsf/5e7647d942f529c9e5256c3100376e2e/3e62c30494d43edee5256d500034a94f/$FILE/ced04638.pdf. பார்த்த நாள்: 2013-02-08. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Chronology of communal violence in India". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2011-11-09 இம் மூலத்தில் இருந்து 2013-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130210152649/http://www.hindustantimes.com/News-Feed/NM1/Chronology-of-communal-violence-in-India/Article1-8038.aspx. பார்த்த நாள்: 2013-02-08. 
  3. 3.0 3.1 Warisha Farasat (2013-01-19). "The Forgotten Carnage of Bhagalpur". Economic and Political Weekly XLVIII (03). http://www.epw.in/insight/forgotten-carnage-bhagalpur.html. பார்த்த நாள்: 2013-04-16. 
  4. Devesh Vijay (1 January 2004). Writing Politics: Left Discourses in Contemporary India. Popular Prakashan. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-813-2. பார்க்கப்பட்ட நாள் 2013-02-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்பூர்_கலவரம்,_1989&oldid=3614330" இலிருந்து மீள்விக்கப்பட்டது