மொரதாபாத் கலவரம், 1980
மொரதாபாத் கலவரம், 1980 | |||
---|---|---|---|
வரைபடத்தில் மொரதாபாத் | |||
தேதி | ஆகஸ்டு 1980 | ||
அமைவிடம் | மொரதாபாத், உத்திரப் பிரதேசம் இந்தியா | ||
முறைகள் | கொலை மற்றும் கொள்ளை | ||
தரப்புகள் | |||
|
மொரதாபாத் கலவரம் (Moradabad riots) 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மொரதாபாத் நகரில் நடந்தது. இஸ்லாமியர்கள் காவல்துறையினரை தாக்கியதன் பதிலாக ஏற்பட்ட காவல்துறைத் தாக்குதலில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்னணி
[தொகு]1980 ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈகைநாள் வழிபாட்டின் போது தலித்துகள் பகுதியிலிருந்து பன்றி ஒன்று 50,000 இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த பகுதிக்குள் சென்றது.[1] இதனால் ஆத்திரமுற்ற இஸ்லாமியர்கள் காவல்துறையினரின் மீது தாக்குதல் நடத்தினர்.[2] இதில் உயர் காவல்துறை ஆய்வாளர் (Senior Superintendent of Police-SSP) கற்களால் தாக்கப்பட்டார். மேலும் இஸ்லாமியர்களால் கூடுதல் மாவட்ட நீதிபதி (Additional District Magistrate-ADM) அடித்துக் கொல்லப்பட்டார்.[3] இக்கலவரத்தைக் கையாளும் பொருட்டு காவல்துறையினரின் பதில் நடவடிக்கையில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.[4] அரசு சுமார் 400 உயிரிழந்த இஸ்லாமியர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steven I. Wilkinson (23 November 2006). Votes and Violence: Electoral Competition and Ethnic Riots in India. Cambridge University Press. pp. 37–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-53605-9. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.
- ↑ Shashi B Sahai (1 January 1997). India: Twilight at Midday : Untold Story of a Sick Society. Gyan Books. pp. 123–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-212-0532-0. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.
- ↑ Krishna Gandhi (6 September 1980). "Anatomy of the Moradabad Riots". Economic and Political Weekly 15 (36): 1505–1507. http://www.jstor.org/stable/4369047.
- ↑ 4.0 4.1 Satish Saberwal, Mushirul Hasan (1991). "14. Moradabad Riots, 1980: Causes and Meanings". In Asgharali Engineer (ed.). Communal riots in post-independence India. Universities Press. pp. 209–227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7370-102-3. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.