விவேக் தீர்த்தா

ஆள்கூறுகள்: 22°35′36″N 88°28′21″E / 22.5933°N 88.4726°E / 22.5933; 88.4726
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் தீர்த்தா
Map
மாற்றுப் பெயர்கள்இராமகிருஷ்ணா இயக்கத்தின் விவேகானந்தா மனித சிறப்பு மற்றும் சமூக அறிவியல் மையம்
பொதுவான தகவல்கள்
முகவரிசெயல் பகுது II, கொல்கத்தா புது நகரம், மேற்கு வங்காளம், 700 156
நாடுஇந்தியா
ஆள்கூற்று22°35′36″N 88°28′21″E / 22.5933°N 88.4726°E / 22.5933; 88.4726
அடிக்கல் நாட்டுதல்11 நவம்பர் 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-11-11)
கட்டுமான ஆரம்பம்3 மார்ச்சு 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-03-03)
செலவு160 கோடி (US$20 மில்லியன்)
தரைகள்5 ஏக்கர்கள் (220,000 sq ft)
பிற தகவல்கள்
பொது போக்குவரத்து அணுகல்Add→{{rail-interchange}} சூழல் பூங்கா மெற்றோ நிலையம்
வலைதளம்
202.61.117.24/home

விவேக் தீர்த்தா (Vivek Pilgrimage) அல்லது இராமகிருஷ்ணா இயக்கத்தின் விவேகானந்தா மனிதச் சிறப்பு மற்றும் சமூக அறிவியலுக்கான மையம் என்பது இந்தியாவின் மேற்கு வங்கம், கொல்கத்தாவின் புது நகரில் சுவாமி விவேகானந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கலாச்சார மற்றும் கல்வி மையமாகும். முதல்வர் மம்தா பானர்ஜி 11 நவம்பர் 2014 அன்று விவேக் தீர்த்தத்திற்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ உதவும் நோக்கத்துடன் இது கட்டப்படுகிறது.[1]

அமைவிடம்[தொகு]

விவேக் தீர்த்தா கொல்கத்தாவில் ஆசான் ஏரியா II, புது நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. பிசுவா பங்களா சரணியில், சுற்றுச்சூழல் பூங்கா நுழைவாயில் 1 அருகில் அமைந்துள்ளது. இங்கு கொல்கத்தா பெருநகர் தடம் 6-இல் சூழல் பூங்கா மெற்றோ நிலையம் வழியாக எளிதில் அடையலாம்.[2][3][4]

விவரங்கள்[தொகு]

விவேக் தீர்த்தா அல்லது இராமகிருஷ்ணா இயக்கம் விவேகானந்தா மனித மேன்மை மற்றும் சமூக அறிவியலுக்கான மையம், இராமகிருசுண இயக்கத்திற்குச் சொந்தமான கலாச்சார மற்றும் கல்வி மையமாகும். 2013-இல், மேற்கு வங்க அரசு இந்த மையத்தை முன்மொழிந்தது மற்றும் 11 நவம்பர் 2014 அன்று முதல்வர் மம்தா பானர்ஜி, இராமகிருசுண மடத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இயக்கத்தின் சுவாமி சுகிதானந்தாஜியுடன் அடிக்கல் நாட்டினார்.[5][6] இது 10-தளங்களுடன் பிரதானக் கட்டிடம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் நான்கு பிரபல வெளிநாட்டுச் சீடர்களான சகோதரி நிவேதிதை, ஜே. ஜே. குட்வின், ஓலே சாரா புல் மற்றும் ஜோசபின் மேக்லியோட் ஆகியோரின் பெயரிடப்பட்ட நான்கு கட்டிடங்களைக் கொண்டுள்ளது. 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற உரையை ஆற்றிய சிகாகோவின் கலைக் கழகம் போன்று.[3] இதில் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் 1,400 இருக்கைகள் கொண்ட அரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மற்ற கட்டிடங்களில் எண்ணிம நூலகம், கண்காட்சிக் கூடம் மற்றும் தியான அறை ஆகியவை இருக்கும். இந்த வளாகம் 5 ஏக்கர்கள் (220,000 sq ft) பரப்பளவில் அமைந்துள்ளது. அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 2016-இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இது 160 கோடி (US$20 மில்லியன்) செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.[6] மேற்கு வங்க மாநில உயர்கல்வி குழு 2 கோடி (2020 இல் நிகர மதிப்பு 2.0 crore or US$2,50,000) உருபாயும் நபாடிகந்தா தொழில் நகர ஆணையம் 7 கோடி (2020 இல் நிகர மதிப்பு 7.0 crore or US$8,80,000)யும் நன்கொடை அளித்தன.[4] பெருநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் மையத்தின் கட்டுமானத்திற்காக நன்கொடை அளித்தன.[5] ஆளுமை மேம்பாடு, தகவல் தொடர்புத் திறன், பெற்றோருக்கான ஊக்கம், மன அழுத்த மேலாண்மை, மன மேலாண்மை போன்ற படிப்புகள் இந்த மையத்தில் கற்பிக்கப்படுகிறது.[1][2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bureau, M. Post (2016-03-04). "Construction work of Vivek Tirtha begins". millenniumpost.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  2. 2.0 2.1 donationsbm. "Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence and Social Sciences (Viveka Tirtha), New Town, Kolkata". Belur Math – Ramakrishna Math and Ramakrishna Mission (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  3. 3.0 3.1 "Vivek Tirtha – A tribute to the great saint". aitcofficial.org. 11 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
  4. 4.0 4.1 "Viveka Tirtha, one-of-a-kind institute dedicated to Swami Vivekananda, to come up soon – ABPEducation". abpeducation.com (in ஆங்கிலம்). 2021-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  5. 5.0 5.1 "VIVEKA TIRTHA Ramakrishna Mission Vivekanda Centre for Human Excellence and Social Sciences". thecommontimes.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
  6. 6.0 6.1 Goswami, Tarun (2020-12-26). "Work on RKM Centre for Human Excellence in full swing". millenniumpost.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_தீர்த்தா&oldid=3903470" இலிருந்து மீள்விக்கப்பட்டது