நசுருல் தீர்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசுருல் தீர்த்தா
பொதுவான தகவல்கள்
வகைஅருங்காட்சியகம் மற்றும் கல்வி ஆராய்ச்சி மையம்
கட்டிடக்கலை பாணிநவீன / பெங்காலி
இடம்புது நகரம், கொல்கத்தா பெருநகரப் பகுதி,[1] மேற்கு வங்காளம், இந்தியா
நிறைவுற்றது2013-14
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)அபின் சௌத்ரி

நசுருல் தீர்த்தா (Nazrul Tirtha) என்பது புரட்சிக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்பாட்டு மற்றும் கல்வி மையமாகும்.[2] இந்த மையம் கொல்கத்தாவின் புது நகரம் Iஇல் ஆசான் பகுதியில் அமைந்துள்ளது. இது ரவீந்திர தீர்த்தத்திலிருந்து 2.50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கவிஞரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மே 2014 அன்று இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.[3][4][5]

ஆகத்து 2015 முதல், இந்த மையம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.[6] நவம்பர் 2015-இல் கொல்கத்தா பன்னாட்டுத் திரைப்பட விழாவிற்கான இடமாக மாறியது.[7] நஸ்ருல் தீர்த்தா கலைக் கண்காட்சிகளையும் இங்கு நடைபெறுகிறது.[8]

கட்டிடக்கலையும் வடிவமைப்பும்[தொகு]

இந்த மையத்தின் வடிவமைப்பும் கட்டிடக்கலையும் கொல்கத்தாவில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.[9] மேலும் சுவீடன் நாட்டில் பிறந்த பிரான்சு கட்டிடக்கலைஞர் லெ கார்பூசியேரின் சிறப்பு வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. கட்டிடக்கலை காசி நஸ்ருல் இஸ்லாமின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைஞர் அபின் சௌதுரி கட்டிடத்தினை வடிவமைத்தார். மத்தியப் பச்சை முற்றத்தைச் சுற்றி ஓர் உள்முகமான நிறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உட்புறம் பரவலான இயற்கை ஒளியைப் பெறுகின்றது. உள்ளே உள்ள செயல்பாடுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, நேரடிச் சூரிய ஒளியின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது முக்கியம். மெல்லிய வெளிப்புறக் காறைச் சுவர்களின் பயன்பாடு ஆற்றல், செலவு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தியது. பைஞ்சுதை பயன்பாடு கட்டிடத்தின் செயல்பாட்டில் புதுமையான வழிகளை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கியது. கவிஞரின் பிரபலமான வார்த்தைகள் பொறிக்கப்பட்ட ஒரு சிற்ப சுவர் வடிவமைக்கப்பட்டது. நஸ்ருலின் பித்ரோஹி என்ற கவிதையிலிருந்து உன்னத மாமா ஷிர் என்ற வார்த்தைகள் பிரதான வாயில் அருகில் உள்ள தூண்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஏழு தொகுதிகளில், மூன்றில் அருங்காட்சியகமும், ஒன்றில் நூலகமும், மற்றொன்றில் கலையரங்கமும் உள்ளது.[5]

தற்சமயம், கலாச்சார மையம் ஒரு திரையரங்கு மற்றும் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான திறந்தவெளி திரையரங்கத்துடன் செயல்படுகிறது.[10]

படங்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "North 24 Parganas district". https://www.wbtourismgov.in/destination/district/north_24_parganas#lb7. 
  2. "Nazrul Islam an icon of all Bengalis". தி இந்து. 27 May 2014. http://www.thehindu.com/news/national/other-states/nazrul-islam-an-icon-of-all-bengalis/article6050756.ece. பார்த்த நாள்: 2 June 2014. 
  3. "Green twist to centre dedicated to rebel poet Nazrul". 2014-05-27. http://bdnews24.com/arts/2014/05/27/green-twist-to-centre-dedicated-to-rebel-poet-nazrul. பார்த்த நாள்: 2 June 2014. 
  4. "'Nazrul Tirtha', a hub of cultural exchange with Bangladesh". 26 May 2014. http://www.business-standard.com/article/pti-stories/nazrul-tirtha-a-hub-of-cultural-exchange-with-bangladesh-114052601163_1.html. பார்த்த நாள்: 2 June 2014. 
  5. 5.0 5.1 "Man with the Nazrul Tirtha plan". The Telegraph (Calcutta). 6 September 2013. http://www.telegraphindia.com/1130906/jsp/saltlake/story_17314578.jsp#.U4y4vfmSxZs. பார்த்த நாள்: 2 June 2014. 
  6. "Film show premiere at Nazrul Tirtha today". The Telegraph. 7 August 2015 இம் மூலத்தில் இருந்து 22 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150922143659/http://www.telegraphindia.com/1150807/jsp/saltlake/story_35733.jsp. பார்த்த நாள்: 17 March 2018. 
  7. "Film fest starts in New Town". The Telegraph. 20 November 2015 இம் மூலத்தில் இருந்து 18 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180318054358/https://www.telegraphindia.com/1151120/jsp/saltlake/story_53944.jsp. பார்த்த நாள்: 17 March 2018. 
  8. "Jamini Roy show under way". The Telegraph. 25 August 2017 இம் மூலத்தில் இருந்து 18 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180318183010/https://www.telegraphindia.com/1170825/jsp/saltlake/story_168901.jsp. பார்த்த நாள்: 18 March 2018. 
  9. "Nazrul Tirtha – Legacy of the Rebel Poet". Maa Mati Manush. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  10. "Nazrul Tirtha | A Cultural Centre at Rajarhat (Kolkata) by HIDCO". nazrultirtha.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசுருல்_தீர்த்தா&oldid=3920311" இலிருந்து மீள்விக்கப்பட்டது