உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் புலிகளின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலைப்புலிகள் வெளியிட்ட அடையாளச் சின்னம் (கடன் மீட்பு)[1]

விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தேச் செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.[2]

1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது.[3] அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.[4] சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.[5][2]

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்புள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.[6]

விடுதலைப் புலிகள் ஏனைய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றது. எல்லா ஈழ இயக்கங்களுக்கும் இந்தியா ஆதரவளித்து வந்தது.[7] எவ்வாரெனினும், தமிழீழ விடுதலை இயக்கம் போன்றவை இந்தியாவை முழுமையாக ஏற்றுக் கொண்டப் போதிலும் புலிகள் அமைப்பு இந்தியா மீது எச்சரிக்கையாகவே இருந்து வந்தது. முக்கியமாக ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வந்து புலிகளை தனது ஆளுமைக்குள் வைத்திருக்க முற்பட்டதன் பின்னர் இந்நிலைமை மேலும் கூடியது.[2] புலிகள் அமைப்பானது இந்தியா தனது தேவைகளுக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிடுவதாக புலிகள் கருதிவந்தனர். .[8] இதனால் புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத அல்லது தீர்வில் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருந்த இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாக கருதப்படுகிறது.[9] இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள் ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.

1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இழக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி[10] இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.

இந்திய அமைதி காக்கும் படைக் காலம்

[தொகு]

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்திய ஊடகங்கள் இந்நடவடிக்கையை கொடுரமான பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நடவடிக்கையாக காட்டி வந்தன. தமிழ்நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும்[2] இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும் ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளை களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா அமைதி காக்கும் படைய அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது.[11]

ஈழ இயக்கங்கள் அனைத்தும் இவ்வொப்பந்ததை ஏற்றுக் கொண்டாலும்,[12] புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.[13] மேலும் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் 167 பேரை கொலையும் செய்தனர்.[14] விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் தொடருந்தை மறைந்திருந்து தாக்கி 42 பொதுமக்களையும், நகரில் 40க்கு மேற்பட்ட சிங்களப் பொதுமக்களையும் லாவுகலைக்கு அண்மையில் பேருந்தை தாக்கி 29 பேரையும், ஏராவூரில் 35 மீனவர்களையும் கொலைச் செய்தனர். வார முடிவில் 5000க்கு மேற்பட்ட சிங்களவர்கள் விகாரைகளிலும் இராணுவத் தளங்களிலும் அகதிகாளாக் சென்றனர்.[15]

இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கிடையான போர் வெடித்தது. 1987 அக்டோபர் 8 புலிகள் இந்திய இராணுவத்தின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.[16] இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களைய திட்டமிட்டு[17] பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோகில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படையின் செல்வாக்கு குறைந்தது.[18][19]

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும் புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இனங்க இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் இருக்கும் வேளையில் உச்சமாக 50,000 துருப்புக்களைக் கொண்டிருந்தது.

ஈழப் போர் II

[தொகு]

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டது. இந்தப் சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 சூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.[20]

1990களில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிக்கா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 1995ல் ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தன் மூலம் பேச்சுவாத்தைகளை முறித்துக் கொண்டனர்.[21] இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முக்கியத்துவம் வாய்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.[22] மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முக்கிய நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிறவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.[23] யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வங்கிச் முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.

2001 போர் நிறுத்தம்

[தொகு]
கிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கில் அணியொன்று 2004

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தனி நாடு கோரிக்கையை கைவிட்டது.[24][25] தமிழ் மக்களது அபிலாசைகளை நிறைவுச் செய்யக்கூடிய பிரதேச சுயாட்சி அமைப்பை வரவேற்பதாக கூறினர்.[26] இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.

திசம்பர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இராணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையின் போது புலிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஈழ இயக்கங்களின் பல உறுப்பினர்களைக் கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. [27]

வெளிநாடுகளில் நடைபெற்ற ஆறுச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டு புலிகள் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்டனர்.[28][29][30] இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன அதிபர் சந்திரிக்கா புலிகள் மீது மென்மையான் அனுகுமுறையைக் கையாள்கிறார் எனக் குற்றம் சாட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் களைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மக்களை வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது. புலிகள் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தமையை ஐக்கிய அமெரிக்கா கண்டித்திருந்தது.[31]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LTTE Gold Token". Lakdiva. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "Tamil Militant Groups". Sri Lanka: A Country Study. 1988. http://countrystudies.us/sri-lanka/72.htm. பார்த்த நாள்: 2007-05-02. 
  3. O'Ballance, Edgar (1989). The Cyanide War: Tamil Insurrection in Sri Lanka 1973–88. London: Brassey's. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-036695-3.
  4. O'Ballance, p.62
  5. O'Ballance, p.62
  6. O'Ballance, p.62
  7. SUBRAMANIAN, T.S. (November 29 – Dec 12, 1997). "Full of holes". Frontline Magazine இம் மூலத்தில் இருந்து 2007-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070915213701/http://www.hinduonnet.com/fline/fl1424/14240260.htm. பார்த்த நாள்: 2007-09-02. 
  8. A. Jeyaratnam Wilson, Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries, University of British Columbia Press, 1999
  9. M.R. Narayan Swamy, Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers, 2002[page # needed]
  10. Harrison, Frances (2002-11-26). "'Black Tigers' appear in public". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2516263.stm. பார்த்த நாள்: 2007-09-02. 
  11. The Peace Accord and the Tamils in Sri Lanka. Hennayake S.K. Asian Survey, Vol. 29, No. 4. (April 1989), pp. 401-415.
  12. O'Ballance, 91
  13. O'Ballance, p.94
  14. O'Ballance, p.99
  15. O'Ballance, p.99
  16. O'Ballance, p.100
  17. O'Ballance, p.100
  18. "Statistics on civilians affected by war from 1974–2004" (PDF). NESOHR. Archived from the original (PDF) on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
  19. "History of the Organisation". University Teachers for Human Rights.
  20. Sri Lanka; Back to the jungle, The Economist, June 23, 1990
  21. "A LOOK AT THE PEACE NEGOTIATIONS". Inter Press Service. 2003. http://ipsnews.net/srilanka/timeline.shtml. பார்த்த நாள்: 2007-05-02. 
  22. Jaffna falls to Sri Lankan army, BBC News, December 5, 1995
  23. V. S. Sambandan (April, 2000). "The fall of Elephant Pass". Hindu Net. Archived from the original on 2007-10-17. பார்க்கப்பட்ட நாள் 2007-11-10. {{cite web}}: Check date values in: |date= (help)
  24. THE LTTE: The Metamorphosis பரணிடப்பட்டது 2007-10-29 at the வந்தவழி இயந்திரம், B. Raman, South Asia Analysis Group
  25. Dugger, Celia (22 December 2001). "Sri Lanka: Cease-Fire, On Both Sides". The New York Times. 
  26. Samuel M. Katz (2004). At Any Cost: National Liberation Terrorism. Twenty-First Century Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0822509490.
  27. Sri Lanka: New Killings Threaten Ceasefire, Human Rights Watch, July 28, 2004
  28. http://www.satp.org/satporgtp/southasia/index.html
  29. http://timesofindia.indiatimes.com/articleshow/2216.cms
  30. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-11-10.
  31. Saroj Pathirana (நவம்பர் 23, 2005). "LTTE supported Rajapakse presidency?". BBC News. {{cite web}}: Check date values in: |date= (help)