பேச்சு:விடுதலைப் புலிகளின் வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையின் தற்போதைய சேர்ப்புகள் புலிகள் செய்த கொலைகளை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. புலிகள் ஏன் தோன்றினார்கள், அவர்களின் கொள்கைகள் என்ன, ஏன் அவர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை தகுந்த முறையில் ஆயவில்லை. இந்தியாவுடனான 2 வருட யுத்ததை ஆய்ந்த அளவு அதன் பின்னரான 10 வருட கால யுத்த நிலைமைகள் விளக்கப்படவில்லை. சுய நிர்ணய கோரிக்கை பற்றி எந்த தகவலும் சேர்க்கப்படாமல் உள் நாட்டு போர் என்று மட்டும் தருவது நடுநிலைமை அல்ல. புலிகள் கொலை செய்தார்கள் என்று சுட்டினாலும், ஏன் செய்தார்கள் என்பது விளக்கப்படவில்லை. இப்படி இக்கட்டுரை புலிகளின் குறைகளையே கோடிட்டு காட்டும் முகமாக பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கின்றது. தமிழில் பல முக்கிய மூலங்கள் உள்ள இத்தலைப்புக்கு தரப்பட்ட அனேக மூல ஆதாரங்கள் வெளிப் பார்வைக்கே முக்கியத்துவம் தந்தும், மேற்கோள் காட்டியும் அமைந்துள்ளமையும் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளன. --Natkeeran 02:17, 9 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]