விக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கத்தை விரைந்து பூட்டவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 16:28, 2 மார்ச் 2011 (UTC) +1 --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:47, 19 மே 2012 (UTC)

பூட்டுவதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லையே? இப்பக்கத்தைப் பூட்டியிருந்தால் நிருவாகி ஆவதற்கு முன் மதனால் பங்களித்திருக்க முடியுமா? இது போல் இன்னும் பல பக்கங்களில் பல நல்ல பங்களிப்புகளைப் பெற முடியுமே? ஒவ்வொரு நாளும் மிகுதியான மக்கள் பார்க்கும் முக்கியமான பக்கங்களில் மட்டும், அதுவும் தொடர் விசமத் தொகுப்புகள் வந்தால் பூட்டலாம். --இரவி (பேச்சு) 16:48, 16 சனவரி 2013 (UTC)

நிருவாகிகளைப் பற்றிய விவரம் இருப்பதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதியே பூட்டினேன். இப்போது புகுபதிகை செய்த பயனர்கள் மட்டுந் தொகுக்கக்கூடியவாறு மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 03:08, 18 சனவரி 2013 (UTC)

வரையறை[தொகு]

நீண்டகாலம் பங்களிக்காத தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் எனும் தலைப்பில் மூன்று நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு நீண்டகாலம் என்பதற்கான வரையறை ஏதும் உள்ளதா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:25, 20 மே 2012 (UTC)

தேனி.எம்.சுப்பிரமணி, வரையறை என்பது உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை, ஆனால் ஓராண்டு பங்களிப்பு செய்யாவிட்டால், நீண்டகாலம் என்பதை குறிக்க வாய்ப்புள்ளது, ஏற்கனவே இது பற்றி எங்கோ(அநேகமாக நிர்வாகி தேர்தல் குறித்த தொகுப்புகளில் இருக்கலாம்) படித்ததாக ஞாபகம்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:54, 20 மே 2012 (UTC)
இப்பக்கத்தின் தலைப்பை நிருவாகிகள் பட்டியல் என்று மாற்ற விழைகிறேன். மாற்றுக்கருத்திருந்தால் தெரிவியுங்கள். நிர்மூலம், நிர்தாட்சண்யம் போன்ற சொற்களில் வரும் நிர் என்பது இல்லாமையைக் குறிக்கும். நிர்வாணம் என்பது அப்படியே. நிருவாகம், நிருவாகி என்பது சீரான எழுத்துக்கூட்டல். --செல்வா (பேச்சு) 17:53, 28 மே 2012 (UTC)
எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. மாற்றலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:00, 28 மே 2012 (UTC)