வட்டணைகளின் பட்டியல்
இது பல்வேறு பான்மைகளை வைத்து வகைபடுத்தப்படும் ஈர்ப்பு வட்டணைகளின் பட்டியலாகும்.
பொதுவான வட்டணைச் சுருக்கங்கள்
[தொகு]பொதுவான புவி வட்டணைச் சுருக்கங்களின் பட்டியல்
[தொகு]வட்டணை | பெயர் |
---|---|
GEO | புவிநிலை வட்டணை |
LEO | தாழ் புவி வட்டணை |
MEO | இடைநிலைப் புவி வட்டணை |
SSO | சூரிய ஒத்தியங்கும் வட்டணை |
VLEO | மிகத் தாழ் புவி வட்டணை |
பிற வட்டணைகளின் சுருக்கங்களின் பட்டியல்
[தொகு]வட்டணை | பெயர் |
---|---|
GSO | புவி ஒத்தியங்கும் வட்டணை |
GTO | புவிநிலைப்புப் பெயரும் வட்டணை |
HCO | சூரிய மைய வட்டணை |
HEO | மிகு நீள்வட்ட வட்டணை |
NRHO | அண்மை-செவ்வகப் புறவலய வட்டணை |
வகைப்பாடுகள்
[தொகு]பின்வருபவை வட்டணை:வகைகளின் பட்டியல்
மைய வட்டணை வகைகள்
[தொகு]- பால்வெளி மைய வட்டணை: ஒரு பால்வெளியின் மையத்தைச் சுற்றியுள்ள ஒரு வட்டணை.[2] பால்வழி எனும் நம் பால்வெளி மையத்தைச் சுற்றிச் சூரியன் இந்த வகையான வட்டணையில் சுற்றுகிறது.
- சூரிய மைய வட்டணை:சூரியனை மையமாகக் கொண்டு ஒரு வட்டணை. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் , வால் வெள்ளிகளும் , சிறுகோள்களும் , பல செயற்கைக்கோள்களும் , விண்வெளி குப்பைகளின் துண்டுகளும் போன்றவை இவ்வகை வட்டணைகளில் சுற்றுகின்றன. இதற்கு மாறாக , நிலாக்கள் சூரிய மைய வட்டணையில் சுற்றுவதில்லை , மாறாக அவற்றின் தாய்ப் பொருள் மைய வட்டணையில் சுற்றி வருகின்றன.
- புவி மைய வட்டணை: புவியைச் சுற்றி வரும் நிலா அல்லது செயற்கைக்கோள்கள் ஆகியவற்றின் வட்டணை புவி மைய வட்டணை ஆகும்.
- நிலா மைய வட்டணை புவியின் நிலாவைச் சுற்றியுள்ள ஒரு வட்டணை நிலா மைய வட்டணை ஆகும்.
- செவ்வாய் மைய வட்டணை: செவ்வாய்க் கோளைச் சுற்றியுள்ள நிலாக்கள் அல்லது செயற்கைக்கோள்கள் போன்றவை சுற்றிவரும் ஒரு வட்டணை செவ்வாய் மைய வட்டணை ஆகும்.
புவி, செவ்வாய் தவிர மற்ற கோள்களை மையமாகக் கொண்ட வட்டணைகளுக்கும் குறுங்கோள்களான புளூட்டோவிற்கும் கிரேக்க/இலத்தினச் சொற்களஞ்சியத்தை உள்ளடக்கிய வட்டணைப் பெயர்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.
- அறிவன் மைய வட்டணை:( இது எர்மெசின் பெயரால் அழைக்கப்படுகிறது.) புதன் கோளை அதன் நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை புதன் மைய வட்டணைஆகும்.
- வெள்ளி மைய வட்டணை: (இது சைத்திராவின் பெயரால் அழைக்கப்படுகிறது.) வெள்ளி (கோள்) கோளை அதன் நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை வெள்ளி மைய வட்டணை ஆகும்.
- வியாழன் மைய வட்டணை:(Zeus அல்லது இலத்தீன் சமமான ஜோவிமைய என்ற பெயரால் பெயரிடப்பட்டது): வியாழன் கோளை அதன்நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை வியாழன் மைய வட்டணை ஆகும்.[3]
- காரிக்கோள் மையவட்டணை: (இது குரோனசு பெயரால் அழைக்கப்படுகிறது.) காரிக் கோளை அதன் நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை காரிக்கோள் மைய வட்டணை ஆகும்.[3]
- யுரேனசு மைய வட்டணை: யுரேனசு கோளை அதன் நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை யுரேனசு மைய வட்டணை ஆகும்.
- நெப்டியூன் மைய வட்டணை: (இது போசிடான் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.) நெப்டியூனை அதன் நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை நெப்டியூன் மைய வட்டணை ஆகும்.
- புளூட்டோ மைய வட்டணை: (இது ஏடிசு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.) குறுங்கோளான புளூட்டோவை அதன் நிலாக்கள் சுற்றிவரும் ஒரு வட்டணை புளூட்டோ மைய வட்டணை ஆகும்.
உயரஞ்சார் வட்டணை வகைகள்
[தொகு]- வளிமண்டலங் கடப்பு வட்டணை (TAO) என்பது புவிச் சேய்மைநிலை உயரம் புவியில் இருந்து 100 கிமீ உயரத்திலும் புவியண்மைநிலை வளிமண்டகக் கார்மன் கோட்டை இடைவெட்டும் புவிசார் வட்டணை ஆகும்.[4]
- மிகத் தாழ் புவி வட்டணை (VLEO) புவி மேற்பரப்பில் இருந்து தோராயமாக 100 - 450 கிமீ உயரத்தில் அமையும் வட்டணை ஆகும்.[5][6]
- தாழ் புவி வட்டணை(LEO) என்பது புவி மேற்பரப்பில் இருந்து 2000 கிமீ உயரத்துக்கும் கீழே அமையும் வட்டணை ஆகும்.[7]
- இடைநிலைப் புவி வட்டணை (MEO) என்பது புவி மேர்பரப்பில் இருந்து 2000 கிமீ முதல் 35,786 கிமீ வரைக்கும் கீழே உள்ள புவி ஒத்தியங்கு வட்டணைகளைக் குறிக்கிறது.. இவ்வட்டணைகளில் உலகளாவிய ஊர்திசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு விண்கலம், போன்ற புவியிடஞ்சுட்டி, குளொனாசு(GLONASS), கலிலியோ, பெய்தவு புவியிடஞ்சுட்டி செயற்கைக்கோள்கள் ஆகியவை சுற்றிவ்ருகின்றன புவியிடஞ்சுட்டி செயற்கைக் கோள்கள் வழக்கமாக 20, 200 கிமீ உயரத்தில் 12மணி நேர வட்டணைக் காலத்தில் சுற்றிவருகின்றன.[8][8]
- புவி ஒத்தியங்கு வட்டணை (GSO), புவிநிலைப்பு வட்டணை என்பவை விண்மீன் சார்ந்த புவியின் வட்டணைக் காலத்தோடு பொருந்தி அமைகின்ற வட்டணைகளாகும்.[1][9]இச்சொற்கள் தம்மிடையே மாற்றிப்பயன்பட்டாலும், தொழில்நுட்பவியலாக புவி ஒத்தியங்கு வட்டணை புவியின் சுழற்சிக் காலத்தைப் பின்பற்றுகிறது; ஆனால், இது புவிநடுவரைக்கு நேராக சுழிச் சாய்வில் அமையவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. எனவே இது புவிநடுவரையின் ஒரு புள்ளியில் நிலைக்குத்தாக நேராக இருக்க வேண்டியதில்லை. இது ஒருநாளில் வடக்கும் தெற்குமாக ஊசலாட்டம் கொள்ளும். புவிநடுவரைக்குச் சுழிச் சாய்வில் உள்ள வட்டணை. புவிநிலைப்பு வட்டணை எனப்படுகிறது. புவி ஒத்தியங்கு, புவிநிலைப்பு வட்டணைகள் இரண்டின் அரைப்பேரச்சும் 42,164 கிமீ ஆக அமைகிறது..[10] எனவே இந்த வட்டணைகளின் புவி மேற்பரப்பில் இருந்தான உயரம் 35,786 கிமீ ஆகும் இரண்டு வட்டணைகளுமே விண்மீனைச் சார்ந்த புவியின் நாளுக்கு ஒரு முறையை சுற்றிவரும்.
- உயர் புவி வட்டணை என்பது புவி ஒத்தியங்கு வட்டணையை விட (35,786 கிமீ உயரத்தை விட) கூடுதலான உயர வட்டணையாகும்.[8]
புவியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு சுமார் 800 கிமீ உயரத்திற்குக் கீழே வளிமண்டல இழுவை விசை அனைத்து ஈர்ப்பு சாராத விசைகளிலும் முதன்மையான வட்டணைக்கு இடையூறுதரும் விசையாகும்.[11] 800 கிமீ உயரத்துக்கு மேல் சூரியக் கதிர்வீச்சு அழுத்தம் பாரிய வட்டணை இடையூறுகளை ஏற்படுத்துகிறது.[12] இருப்பினும் வளிமண்டல இழுவை சூரியச் செயல்பாட்டுடன் தொடர்புடைய மேல் வளிமண்டலத்தின் அடர்த்தியைப் பொறுத்தது.ஆனால், வளிமண்டல இழுப்பின் தாக்கமும் சூரியக் கதிர்வீச்சு அழுத்தத்தை உருவாக்கும் சூரியச் சுழற்சியின் கட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.
சாய்வு வட்டணை வகைகள்
[தொகு]- சாய்ந்த வட்டணை: புவிநடுவரைத் தளத்துக்கு, சுழிதவிர்த்த பிற கோணங்களில் சாய்வாக அமையும் வட்டணைகள் சாய்ந்த வட்டணைகள் எனப்படும்.
- முனைய வட்டணை: ஒவ்வோரு சுற்றுக்கும் புவியின் இரு முனைகளுக்கும் மேலாக கடந்து செல்லும் வட்டணை முனைய வட்டணை ஆகும். எனவே, இது 90 அல்லது -90 பாகைச் சாய்வில் அல்லது அதற்கு மிக அணுக்கமான சாய்வில் அமைந்திருக்கும்.
- முனையச்சூரிய ஒத்தியங்கும் வட்டணை: ஒவ்வொரு நிலநடுவரை கடப்பின்போதும் ஒத்த களச் சூரிய நேரத்தி கடந்துசெல்லும் முனைய வட்டண சூரிய ஒத்தியங்கு வட்டணை ஆகும். ஒவ்வொரு கடப்பின்போதும் ஒத்த நிழல்கள் ஏற்படுவதால் இது படமெடுக்கும் செயற்கைக்கோள்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- சாயாத வட்டண: புவிநடுவரைத் தளத்துக்கு அல்லது குறிப்பிட்ட மேற்கோள் தளத்துக்கு சுழிச் சாய்வைக் கொண்ட வட்டணை சாயாத வட்டணை ஆகும்.
- புவி நடுவரை வட்டணை: நடுவரைத் தளத்தைப் பொறுத்து சாயாத வட்டணை நடுவரை வட்டணை ஆகும் .
- வான்கோள நடுவரை வட்டணை: நிலநடுக் கோட்டுடன் ஒத்தியங்கும் சாயாத வட்டணை நிலநடுவரை வட்டணை ஆகும்.
- புவி நடுவரை அண்மிய வட்டணை: நிலநடுக் கோட்டுடன் சாய்வு கிட்டத்தட்ட சுழியாக இருக்கும் வட்டணை நிலநடுவரை அண்மிய வட்டண ஆகும். இந்த வட்டணை அதில் சுற்றிவரும் செயற்கைக்கோள் புவி நடுவரைக்கு அணமையில் இடங்களைப் படமெடுக்க வழிவகுக்கிறது.
. .
திசைசார் வட்டணை வகைகள்
[தொகு]- முன்னேறும் வட்டணை: முதன்மை வான்பொருளின் சுழற்சி திசையில் சுற்றிவரும் வட்டணை முன்னேறும் வட்டணையாகும் ( அதாவது, புவியில் கிழக்கு நோக்கி). மரபாக, இந்த வட்டணையின் சாய்வுக் கோணம் 90 பாகைக்கும் குறைவாக இருக்கும்.
- பின்னேகும் வட்டணை: முதன்மை வான்பொருளின் சுழற்சி திசைக்கு எதிராகச் சுற்றிவரும் வட்டணை பின்னேகும் வட்டணையாகும். மரபாக, இந்த வட்டணையின் சாய்வுக் கோணம் 90 பாகைக்கும் கூடுதலாக இருக்கும். பின்னேகும் வட்டணைகளில் ஏவ முன்னேறும் வட்டணைகளைவிட கூடுதலான எரிபொருள் தேவைப்படுவதால், குறை ஒத்தியங்கு வட்டணைகளைத் தவிர, சில செயற்கைக்கோள்கள் மட்டுமே புவியில் இருந்து பின்னேகும் வட்டணைகளிலும் ஏவப்படுகின்றன. ஏனெனில், புவியில் இருந்து ஏவூர்தியால் ஏவப்படும்போது முன்னேறும் வட்டணையில் இயங்கும் விண்கலம் ஏற்கெனவே கிழக்குநோக்கிய கோளின் சுழற்சி வேகத்துக்கு சமமான விரைவு(திசைவேக) உறுப்பைப் பெற்றிருக்கும்..
மையப் பிறழ்மை வட்டணைகள்
[தொகு]மையப் பிறழ்மை வட்டணைகளில் இருவகை வட்டணைகள் உண்டு. இவை மூடுறு(அலைவுநேர) வட்டணைகள்,திறந்தநிலை (விடுபாட்டு) வட்டணைகள் என்பனவாகும். வட்ட, நீள்வட்ட வடணைகள் மூடுறு வட்டணைகள் ஆகும். பரவளைய, மீப்பரவளைய வட்டணைகள் திறந்தநிலை வட்டணைகள் ஆகும். ஆர வட்டணைகள் திறந்தவையாகவோ மூடியவையாகவோ அமையலாம்.
- வட்ட வட்டணை: சுழி வட்டணை மையப்பிறழ்மையுடன் வட்டவடிவத் தடத்தை ஒட்டியமையும் வட்டணை வட்ட வட்டணை ஆகும்.
- நீள்வட்ட வட்டணை: சுழி அல்லது 1 பாகைக்கும் குறைவான வட்டணை மையப்பிறழ்மையுடன் நீள்வட்டத் தடத்தை ஒட்டியமையும் வட்டணை நீள்வட்ட வட்டணை ஆகும்.
- புவிநிலைப்பு அல்லது புவிஒத்தியக்கம் பெயரும் வட்டணை (GTO): தாழ் புவி வட்டணை(LEO) உயரத்தில் புவியண்மையும் புவிநிலைப்பு வட்டணை உயரத்தில் புவிச்சேய்மையும் அமையும் நீள்வட்ட வட்டணையே புவிநிலைப்பு அல்லது புவி ஒத்தியக்கம் பெயரும் வட்டணையாகும்.
- ஓகுமான் பெயர்வு வட்டணை: இருபொறி உந்துதல்களைப் பயன்படுத்தி, ஒரு வட்ட வட்டணையில் இருந்து மற்றொரு வட்டணைக்கு நகர்த்தும் நடவடிக்கை ஓகுமன் பெயர்வு வட்டணையில் நிகழ்கிறது. வால்டேர் ஓகுமன் நினைவாக இது பெயரிடப்பட்டது.
- தாவல் கவர்வு வட்டணை: இது ஓகுமான் வட்டணைtயை விட குறைந்த ஆற்றல் வட்டணை ஆகும். இலக்கு வான்பொருளை விட குறைந்த வட்டணை விரைவுடன் இயங்கும் விண்கலம் அது சுற்றிவரும் கோளோ நிலாவோ கவர்ந்து ஈர்க்கு வகையில் நுழையும் ஒத்த வட்டணை தாவல் கவர்வு வட்டணை எனப்படும்.[13]
- இணைநீள்வட்ட வட்டணை: ஒரே தளத்தில் அமைந்த இருவிண்கலங்கள் அல்லது பொதுவான துணைக்கோள்களின் சார்பு வட்டணைகள் இணைநீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. " இணைநீள்வட்ட வட்டணைகள் என்பவை ஒரே தளத்திலும் ஒருங்கிய குவிமையமும் கொண்ட வட்டணைகள் ஆகும். இணைநீள்வட்ட வட்டணைகளின் ஓர் இயல்பு, அவற்றின் ஆர நெறியங்களின் பருமை வேறுபாடும் திசைவைப்பும், அவற்றின் வட்டணை இருப்புகளின் இடத்தைச் சாராமல், ஒத்தமைவதாகும் இதனால், விண்கலங்கள் விண்வெளியில் இணைய இவை வழிவகுக்கின்றன.".[14]
- பரவளைய வட்டணை: இது வட்டப்பிறழ்மை 1 ஆக அமையும் வட்டணையாகும். இத்தகைய வட்டணையின் விரைவு(திசைவேகம்) விடுபடு விரைவுக்குச் சமமாக இருக்கும். எனவே இது கோளின் ஈர்ப்புஇழுப்பில் இருந்து வெளியேறும். பரவளைய வட்டணையின் விரைவு கூடும்போது அது மீப்பரவளைய வட்டணையாக மாறும்.
- விடுபடு வட்டணை: விடுபடு விரைவுடன் கோளில் இருந்து வெளியேறும் பரவளைய வட்டணை விடுபடு வட்டணை ஆகும்..
- கவர்வு வட்டணை: விடுபடு விரைவுடன் கோளை நோக்கி இயங்கும் பரவளைய வட்டணை கவர்வு வட்டணை ஆகும்..
- அதிபரவளைய வட்டணை அல்லது மீப்பரவளைவு: வட்டணை மையப்பிறழ்மை 1 ஐ விட கூடுதலாகவுள்ள மீப்பரவளைவு வட்டணை ஆகும். இத்தகைய வட்டணையின் விறைவும்(திசைவேகமும்) விடுபடு விரைவைவிட கூடுதலாக அமையும். எனவே உரிய கோளின் ஈர்ப்பு கவர்வில் இருது வெளியேறி, முடிவற்ற பயணத்தை, மற்றொரு வான்பொருளின் போதுமான அளவு ஈர்ப்பு விசையால் கவரப்படும் வரை, தொடரும்..
- ஆரவட்டணை: சுழி கோண உந்தத்துடன் வட்டணை மையப்பிறழ்வு 1 ஆக உள்ள வட்டணை ஆர வட்டணை எனப்படும். ஆர வட்டணையில் இரு வான்பொருட்களும் தம்முள் ஒருநேர்க்கோட்டில் நெருங்கியபடியோ விட்டு விலகிய்யபடியோ அமைகின்றன.
- ஆர நீள்வட்ட வட்டணை: வான்பொருளின் விடுபடு விரைவுக்கும் குறைந்த விரைவுள்ள நீள்வட்ட வட்டணை ஆர நீள்வட்ட வட்டணை ஆகும். இதன் அரைச் சிற்றச்சு சுழியாகவும் வட்டணை மையப்பிறழ்வு 1 ஆகவும் அமையும். இதன் வட்டணை மையப்பிறழ்வு 1 ஆனாலும், இது பர வளைவு வட்டணையன்று..
- ஆரப் பரவளைவு வட்டணை: வான்பொருள் விடுபடு விரைவில் இயங்கும் திறந்தநிலைப் பரவளைவு வட்டணை ஆரப் பரவளைவு வட்டணை ஆகும்.
- ஆர அதிபரவளைவு வட்டணை அல்லது ஆர மீப்பரவளைவு வட்டணை: வான்பொருளின் விடுபடு விரைவுக்கும் கூடுத்லான விரைவுள்ள திறந்தநிலை அதிபரவளைவு வட்டணை [[ ஆர அதிபரவளைவு வட்டணை ஆகும்.மிதன் அரைச் சிற்றச்சு சுழியாகவும் வட்டணை மையப்பிறழ்வு 1 ஆகவும் அமையும். இதன் வட்டணை மையப்பிறழ்வு 1 ஆனாலும், இது பர வளைவு வட்டணையன்று..
ஒத்தியங்கும் வட்டணை வகைகள்
[தொகு]- ஒத்தியங்கும் வட்டணை: ஒரு வட்டணையின் அலைவுநேரம் என்பது சுற்றிவரும் பொருளின் சராசரி சுழற்சி காலத்தின் பெருக்கலாகவும் அந்தப் பொருளின் சுழற்சி திசையிலும் இருந்தால். அது ஒத்தியங்கும் வட்டணையாகும் இதன் பொருள், மையப்பொருளில் இருந்து பார்க்கும் செயற்கைக்கோளின் தடம் , குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுதல்களுக்குப் பிறகு சரியாக மீண்டும் வரும். நடைமுறையில் 1:1 விகிதம்(ஒத்தியங்கும் வகை) மற்றும் 1:2 விகிதங்கள் (குறை ஒத்தியங்கும்வகை) மட்டுமே பொதுவாக அமையும்.
- புவி ஒத்தியங்கும் வட்டணை (Geosynchronous Orbit): இது ஒரு விண்மீன் நாளுக்குச் சமமான காலத்தைக் கொண்டுள்ளது , இது புவியின் சராசரி சுழற்சி காலமான 23 மணி நேரம் 56 மணித்துளிகள் 4,091 நொடிகள் ஆகும். கிட்டத்தட்ட ஒரு வட்டணைக்கு இது 35,786 கிலோமீட்டர் (22,236 மைல்) உயரத்தைக் குறிக்கிறது. வட்டணையின் சாய்வு, மையப்பிறழ்வு சுழியாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. சாய்வும் மையப்பிறழ்வும் இரண்டும் சுழியாக இருந்தால் , செயற்கைக்கோள் தரையில் இருந்து பார்ப்பதற்கு நிலையாகத் தோன்றும். இல்லையெனில் , ஒவ்வொரு நாளும் செயற்கைக்கோள் ஒரு அனலெம்மாவை (அதாவது தரையில் இருந்து பார்க்கும்போது வானத்தில் ஒரு " உருவம்- எட்டை " ) வரையும்.. வட்டணை வட்டமாகவும் , சுழற்சி காலம் சுழிச் சாய்வையும் கொண்டிருக்கும்போது , புவி நிலை வட்டணையாகக் கருதப்படுகிறது. இது எழுத்தாளர் ஆர்த்தர் சி. கிளார்க்கின் நினைவாக கிளார்க் வட்டணை என்றும் அழைக்கப்படுகிறது.[8]
- புவிநிலை வட்டணை: இது சுழிச் சாய்வுடன் உள்ள ஒரு வட்டமான வட்டணை. தரையில் உள்ள ஒரு பார்வையாளருக்கு இந்தவட்டணையில் இயங்கும் செயற்கைக்கோள் வானத்தில் ஒரு நிலையான புள்ளியாகத் தோன்றுகிறது. " அனைத்து புவிநிலை வட்டணைகளும் புவி ஒத்தியங்கும் வட்டணைகளாகும், ஆனால் அனைத்து புவி ஒத்தியங்கும் வட்டணைகளும் புவிநிலை வட்டணைகளாக அமைவதில்லை.[8]
- துந்திரா வட்டணை குறிப்பிடத்தக்க சாய்வுடன் கூடிய ஒத்திசைவான ஆனால் அதிக நீள்வட்ட வட்டணை (பொதுவாக 63.4 பாகைக்கு அருகில்) மற்றும் ஒரு பக்கவாட்டு நாளின் சுற்றுப்பாதை காலம் (புவிக்கு 23 மணி 56 நிமிடங்கள்). இத்தகைய செயற்கைக்கோள் அதன் பெரும்பாலான நேரத்தை கோளின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செலவிடுகிறது. குறிப்பிட்ட சாய்வு பெரிஜீ மாற்றத்தை சிறியதாக வைத்திருக்கிறது.[15]
- (ASO): செவ்வாய் ஒத்தியங்கும் வட்டணை: இது செவ்வாய்க் கோளின் விண்மீன் நாள் 24,6229 மணி நேரத்திற்கு சமமான வட்டணைக் காலத்துடன் அமையும் வட்டணையாகும்..
- செவ்வாய்நிலை வட்டணை(AAEO): னைது நிலநடுவரையில் உள்ள ஒரு வட்டவடிவமான செவ்வாய் ஒத்தியங்கு வட்டணையாகும். செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் இருந்து சுமார் 17,000 கிமீ (10,557 மைல்) உயரத்தில். செவ்வாய்க் கோளில் ஒரு பார்வையாளருக்கு இந்தச் செயற்கைக்கோள் வானத்தில் ஒரு நிலையான புள்ளியாகத் தோன்றும்.
- குறை ஒத்தியங்கும் வட்டணை: GSO / GEO அளவுக்கும் குறைந்த வட்டணைக் காலம் அமையும் ஒரு இழுவை வட்டணையாகும்.
- பகுதி ஒத்தியங்கும் வட்டணை: இது ஈர்ப்புமையப் பொருளின் சராசரி சுழற்சி காலத்தில் பாதிக்குச் சமமான காலத்தில் ஒரு வட்டணையை அந்தப் பொருளின் சுழற்சியின் திசையில் சுற்றும் வட்டணையாகும். புவியைப் பொறுத்தவரை , வட்டணை வட்டமாக இருந்தால் , சுமார் 20,200 கிமீ (12,544.2 மைல்) உயரத்தில் 12 மணி நேரத்திற்குள் அமையும்.[16]
- மோல்னியா வட்டணை: ஒரு முனையூடான வட்டணையின் அரை ஒத்தியங்குநிலை மாறுபாடு. புவியைப் பொறுத்தவரை இது 12 மணி நேரத்திற்குள்அமையும் ஒரு வட்டணைக் காலத்தைக் குறிக்கிறது. இத்தகைய செயற்கைக்கோள் அதன் பெரும்பாலான நேரத்தைக் கோளின் இரண்டு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் செலவிடுகிறது. பொதுவாக சேய்மைப்புள்ளி விலக்கத்தைச் சிறியதாக வைத்திருக்க 63.4 பாகைச் சாய்வு பயன்படுத்தப்படுகிறது.[15]
- பகுதி ஒத்தியங்கும் வட்டணை: இது ஈர்ப்புமையப் பொருளின் சராசரி சுழற்சி காலத்தில் பாதிக்குச் சமமான காலத்தில் ஒரு வட்டணையை அந்தப் பொருளின் சுழற்சியின் திசையில் சுற்றும் வட்டணையாகும். புவியைப் பொறுத்தவரை , வட்டணை வட்டமாக இருந்தால் , சுமார் 20,200 கிமீ (12,544.2 மைல்) உயரத்தில் 12 மணி நேரத்திற்குள் அமையும்.[16]
- மீ ஒத்தியங்கும் வட்டணை: இது ஒரு செயற்கைக்கோள் அல்லது வான்பொருளின் வட்டணைக் காலம் வட்டணையின் ஈர்ப்பு மையத்தைக் கொண்ட பொருளின் சுழற்சி காலத்தை விட அதிகமாக இருக்கும் வட்டணை ஆகும்.
பால்வெளி வட்டணைகள்
[தொகு]- பெட்டி வட்டணை: ஒரு மூவச்சு நீள்வட்டப் பால்வெளி வட்டணை, தோராயமாக பெட்டி வடிவப் பகுதியை நிரப்புகிறது.
- கூம்புப் பட்டக வட்டணை: இது மூவச்சுப் பால்வெளியின் ஒரு பெரிய கருந்துளைஅருகே உள்ள ஒரு வட்டணை ஆகும்.[17] இந்த வட்டணையை மூவச்சுப் பால்வெளியில் இருந்துவரும் திருக்கங்களால் , இரண்டு செங்கோணத் திசைகளில் சுற்றிவரும் கருந்துளையின் நீள்வட்டமாகக் கருதமுடியும் . இந்த நீள்வட்டத்தின் மையப்பிறழ்ச்சி கூம்புப் பட்டகத்தின் நான்கு மூலைகளில் ஒன்றி விடுகிறது. இதனால், இந்த வட்டணையில் உள்ள விண்மீன் பால்வெளியின் கருந்துளைக்கு மிக அருகில் வர வழி ஏற்படுகிறது.
- குழாய் வட்டணை: அச்சுவழிச் சமச்சீர்மையுள்ள பால்வெளி மையத்தில் அமைந்த பெரிய கருந்துளை அருகே உள்ள வட்டணை. கூம்புப்பட்டக வட்டணையைப் போன்றதே. வட்டணைக் கோண உந்தத்தின் ஒரு உறுப்பு பேணப்படுவதைத் தவிர; இதன் விளைவாக, மையப்பிறழ்ச்சி ஒருபோதும் ஒன்றாகாது.[18]
சிறப்பு வட்டணை வகைகள்
[தொகு]- சூரிய ஒத்தியங்கும் வட்டணை: இது கோளின் மேற்பரப்பின் ஒரு புள்ளியை ஒரே களச் சூரிய நேரத்தில் கடந்து செல்லும்படி விண்கல அல்லது செயற்கைக் கோளின் உயரத்தையும் சாய்வையும் உகந்தபடி அமைக்கும் வட்டணையாகும். இத்தகைய வட்டணை ஒரு செயற்கைக்கோளை நிலையான சூரிய ஒளியில் வைக்கும். இது படிமவாக்கம், உளவு, வானிலை சார்ந்த விண்கலங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
- உறைந்த வட்டணை: வட்டணை அளவுருக்களை கவனமாக தேர்ந்தெடுப்பதன் மூலம் நடு பொருளின் வடிவம் காரணமாக இயற்கையான இழுப்பு குறைக்கப்பட்டிருக்கும் ஒரு வட்டணை.
- நிலா வட்டணை: இவட்டணையில் நிலாவின் சராசரி உயரம் 384,403 கிலோமீட்டர். இது சாய்ந்த நீள்வட்ட வட்டணையாகும்.
- அப்பால் தாழ் புவி வட்டணை (BLEO), அப்பால் புவி வட்டணை(BEO), தாழ் புவி வட்டணை ஆகியவை சில புவிவகை வகை வட்டணைகள் ஆகும். *சூரிய மைய வட்டணை ஒரு பயணத்தின் ஒரு பகுதியாக வட்டணை பெயர்வுக்கும் நுழைவுக்கும் பலவாறு தேவைப்படக்கூடிய முறைகலில் பயன்படுகின்றது.
- அண்மை- செவ்வகப் புறவலய வட்டணை(NRHO): தற்போது திட்டமிடப்பட்ட நிலாநுழைவாயில் வட்டணை ஒரு நிலாமைய வட்டணையாகும். இது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான அரங்கப் பகுதியாக செயல்படும். [19][20]நாசாவிற்கான திட்டமிடப்பட்ட வட்டணையான நிலா நுழைவாயில் சிர்கா, 2024 இல், அதிக நீள்வட்டத்துடன் ஏழு நாள் அண்மை- செவ்வகப் புறவலய வட்டணையில் நிலாவைச் சுற்றி, ஒரு சிறிய விண்வெளி நிலையத்தை அமைக்கும். இதன் அண்மைப்புள்ளி 3,000 கிலோமீட்டர்கள் (1,900 mi) தொலைவில் நிலா வடமுனையை நெருங்கியும் சேய்மைப்புள்ளி 70,000 கிலோமீட்டர்கள் (43,000 mi) தொலைவில் நிலா தென்முனை மேலும் அமையும்.[21][22]
- தொலைதூர பிற்போக்கு சுற்றுப்பாதை (DRO): ஒரு நிலையான சுற்றறிக்கை பிற்போக்கு சுற்றுப்பாதை (பொதுவாக சந்திர தொலைதூர பிற்போக்கு சுற்றுப்பாதையை குறிப்பிடுகிறது). ஸ்திரத்தன்மை என்பது டி.ஆர். ஓவில் உள்ள செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருக்க ஸ்டேஷன் கீப்பிங் ப்ரொப்பல்லண்டைப் பயன்படுத்தத் தேவையில்லை. சந்திர டி. ஆர். ஓ என்பது சுமார் 61,500 ஆரம் கொண்ட உயர் சந்திர சுற்றுப்பாதையாகும் கி.மீ.[23] இது முன்மொழியப்பட்டது 2017 இல் சாத்தியமான சுற்றுப்பாதையாக சந்திர நுழைவாயில் விண்வெளி நிலையம், பூமிக்கு வெளியே-சந்திரன் எல் 1 மற்றும் எல் 2.[20]
- அழுகும் சுற்றுப்பாதை: அழுகும் சுற்றுப்பாதை என்பது குறைந்த உயரத்தில் ஒரு சுற்றுப்பாதையாகும், இது வளிமண்டல எதிர்ப்பின் காரணமாக காலப்போக்கில் குறைகிறது. இறக்கும் செயற்கை செயற்கைக்கோள்களை அப்புறப்படுத்த பயன்படுகிறது அல்லது ஏரோபிரேக் ஒரு கிரக விண்கலம்.
- பூமி-முன்னிலை சுற்றுப்பாதை, ஒரு சூரிய மைய சுற்றுப்பாதை, செயற்கைக்கோள் ஆரம்பத்தில் பூமியைப் பின்தொடரும், ஆனால் சற்றே மெதுவான சுற்றுப்பாதை கோண வேகத்தில் வைக்கப்படும், இது ஆண்டுதோறும் மேலும் பின்னால் நகரும். இந்த சுற்றுப்பாதை பயன்படுத்தப்பட்டது ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான புவி மைய சுற்றுப்பாதையில் இருந்து சூடான பூமியிலிருந்து வெப்ப சுமையை வெகுவாகக் குறைப்பதற்காக.[24]
- கல்லறை வட்டணை (அல்லது அகற்றல், குப்பை வட்டணை) : செயற்கைக்கோள்கள் அவற்றின் செயல்பாட்டின் முடிவில் நகர்த்தப்படும் ஒரு வட்டணை. புவிசார் செயற்கைக்கோள்களுக்கு புவி ஒத்தியங்கும் வட்டணைகளுக்கு மேலே சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டணை ஆகும்.[25][26]
- தங்கல் வட்டணை, ஒரு தற்காலிகத் தங்கல் இட வட்டணை.
- பெயரும் வட்டணை ஒருபோது இடம்பெயர பயன்படுத்தப்படும் ஒரு வட்டணை. ஒரு வட்டணையில் இருந்து மற்றொரு வட்டணைக்குப் பெயரும் தடவழி வட்டணை.
- நிலா பெயரும் வட்டணை (LTO) உடன் நிறைவேற்றப்பட்டது டிரான்ஸ்-சந்திர ஊசி (TLI)
- செவ்வாய் பெயரும் வட்டணை (MTO) டிரான்ஸ்-செவ்வாய் ஊசி (TMI) சுற்றுப்பாதை என்றும் அழைக்கப்படுகிறது
- தரை ஓடுதளம்: செயற்கைக்கோளின் ஓடுதளம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் சரிசெய்யலாம்.
- கங்கலே வட்டணை: செவ்வாய் கோளுக்கு அருகிலுள்ள ஒரு சூரிய வட்டணை. அதன் காலம் ஒரு செவ்வாய் ஆண்டு, ஆனால் அதன் மையம் பிறழ்வும் சாய்வும் செவ்வாய் கோளில் இருந்து வேறுபடுகின்றன, அதாவது கங்கலே வட்டணையில் ஒரலஞ்சல் செயற்கைக்கோள் சூரிய இணைப்பின்போது கூட புவியிலிருந்து தெரியும்.[27]
போலித்தோற்ற வட்டணை வகைகள்
[தொகு]- குதிரைக்குளம்பு வட்டணை: இது ஒரு தரைப் பார்வையாளருக்கு ஒரு குறிப்பிட்ட கோளைச் சுற்றிவருவதாகத் தோன்றும் ஒரு வட்டணையாகும். ஆனால் உண்மையில் இது கோளின் இணைவட்டணையே ஆகும். சிறுகோள்களைக் காண்க 3753 குரூயித்னே, 2002 ஏஏ<sub id="mwAjY">29</sub> .
- இலாகிரேஞ்சுப் புள்ளி( விடுபடு புள்ளி அல்லது கட்டற்ற புள்ளி) வட்டணைகள் என்பன ஒளிவட்ட வட்டணைகள், இலிசாஜவுசு வட்டணைகளைப் போன்றனவாகும்: இவை ஏதாவதொரு ஒரு இலாகிரேஞ்சு புள்ளியைச் சுற்றியுள்ள வட்டணைகள் ஆகும். இவை அருகிலுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன, மேலும் இந்த புள்ளிகளுக்கு அருகிலுள்ள வட்டணைகள் ஒரு விண்கலத்தை மிகக் குறைந்த எரிபொருள் பயன்பாட்டுடன் நிலையான தொடர்பில் இருக்க வழிசெய்கின்றன. L1 புள்ளியைச் சுற்றிவரும் வட்டணைகள் சூரிய, சூரியகோள ஆய்வகம் போன்ற சூரியனின் நிலையான பார்வையை விரும்பும் விண்கலங்களால் பயன்படுத்தப்படுகிறது . L2 புள்ளி சுற்றியுள்ள வட்டணைகள், புவி, சூரியன் இரண்டையும் எப்போதும் நிலையாகப் பார்க்க விரும்பும் திட்டங்ங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இது புவி, சூரியன் இரண்டிலிருந்தும் வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் ஒற்றைக் கவசமாகச் செயல்படுகிறது, இது உணர்திறன் கருவிகளை முடக்கநிலையில் குளிர்விக்க வழிசெய்கிறது. எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்வி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி என்பனவாகும். எல் 1, எல் 2, எல் 3 ஆகிய புள்ளிகள் நிலையற்ற வட்டணைகள் ஆகும்[6], அதாவது சிறிய இடையூறுகள் கூட விண்கலத்தை, அவ்வப்போது திருத்தங்கள் இல்லாமல், வட்டணையில் இருந்து வெளியேற்றும்.
- பி/2 வட்டணை, மிகவும் நிலையான 2: 1 நிலா ஒத்தியங்கும் வட்டணை ஆகும், இது முதன்முதலில் 2018 இல் தெசு(கடந்து செல்லும் புறக்கோள் அளக்கைச் செயற்கைக்கோள்) விண்கலத்தில் பயன்படுத்தப்பட்டது .[28][29]
மேலும் காண்க
[தொகு]- புவி மைய வட்டணைகள்
- வட்டணைசார் விண்வெளிப் பறப்பு
- அலைவுறும் வட்டணை
குறிப்புகள்
[தொகு]- ↑ Orbital periods and speeds are calculated using the relations 4π2R3 = T 2GM and V2R = GM; இங்கு, R = வட்டணை ஆரம், மீ, T = வட்டணைக் காலம், மீ, V= வட்டணை வேகம் மீ/நொ, G = ஈர்ப்பு மாறிலி ≈ 6.673×10-11 Nm< sup>2/kg2, M = புவிப் பொருண்மை ≈ 5.98×1024 kg.
- ↑ Approximately 8.6 times when the Moon is nearest (363,104 km ÷ 42,164 km) to 9.6 times when the Moon is farthest (405,696 km ÷ 42,164 km).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Types of Orbits". https://www.spacefoundation.org/space_brief/types-of-orbits/.
- ↑ "Definition of GALACTOCENTRIC". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
- ↑ 3.0 3.1 Parker, Sybil P. (2002). McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms Sixth Edition. McGraw-Hill. p. 1772. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 007042313X.
- ↑ McDowell, Jonathan (24 May 1998). "Jonathan's Space Report".
Transatmospheric orbit (TAO): orbital flight with perigee less than 80 km but more than zero. Potentially used by aerobraking missions and transatmospheric vehicles, also in some temporary phases of orbital flight (e.g. STS pre OMS-2, some failures when no apogee restart)
- ↑ "Stingray VLEO Constellation".
- ↑ "Attitude control for satellites flying in VLEO using aerodynamic surfaces".
- ↑ "NASA Safety Standard 1740.14, Guidelines and Assessment Procedures for Limiting Orbital Debris" (PDF). Office of Safety and Mission Assurance. 1 August 1995. p. A-2. Archived from the original (PDF) on 15 February 2013.
Low Earth orbit (LEO) – The region of space below the altitude of 2000 km.
, pages 37–38 (6–1,6–2); figure 6-1. - ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 "Orbit: Definition". Ancillary Description Writer's Guide, 2013. National Aeronautics and Space Administration (NASA) Global Change Master Directory. Archived from the original on 11 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
- ↑ "Types of orbits".
- ↑ Vallado, David A. (2007). Fundamentals of Astrodynamics and Applications. Hawthorne, CA: Microcosm Press. p. 31.
- ↑ Krzysztof, Sośnica (1 March 2015). "Impact of the Atmospheric Drag on Starlette, Stella, Ajisai, and Lares Orbits". Artificial Satellites 50 (1): 1–18. doi:10.1515/arsa-2015-0001. Bibcode: 2015ArtSa..50....1S.
- ↑ Bury, Grzegorz; Sośnica, Krzysztof; Zajdel, Radosław; Strugarek, Dariusz (28 January 2020). "Toward the 1-cm Galileo orbits: challenges in modeling of perturbing forces". Journal of Geodesy 94 (2): 16. doi:10.1007/s00190-020-01342-2. Bibcode: 2020JGeod..94...16B.
- ↑ Hadhazy, Adam (22 December 2014). "A New Way to Reach Mars Safely, Anytime and on the Cheap". Scientific American. http://www.scientificamerican.com/article/a-new-way-to-reach-mars-safely-anytime-and-on-the-cheap/.
- ↑ Whipple, P. H . (1970-02-17). "Some Characteristics of Coelliptic Orbits – Case 610" (PDF). Bellcom Inc. Washington: NASA. Archived from the original (PDF) on 21 May 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
- ↑ 15.0 15.1 This answer explains why such inclination keeps apsidial drift small: https://space.stackexchange.com/a/24256/6834
- ↑ "Catalog of Earth Satellite Orbits". earthobservatory.nasa.gov (in ஆங்கிலம்). NASA. 4 September 2009. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
- ↑ Merritt and Vasilev, ORBITS AROUND BLACK HOLES IN TRIAXIAL NUCLEI", The Astrophysical Journal 726(2), 61 (2011).
- ↑ Merritt, David (2013). Dynamics and Evolution of Galactic Nuclei. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691121017.
- ↑ NASA Shapes Science Plan for Deep-Space Outpost Near the Moon March 2018
- ↑ 20.0 20.1 How a New Orbital Moon Station Could Take Us to Mars and Beyond Oct 2017 video with refs
- ↑ Angelic halo orbit chosen for humankind's first lunar outpost. European Space Agency, Published by PhysOrg. 19 July 2019.
- ↑ Halo orbit selected for Gateway space station. David Szondy, New Atlas. 18 July 2019.
- ↑ "Asteroid Redirect Mission Reference Concept" (PDF). www.nasa.gov. NASA. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
- ↑ "About Spitzer: Fast Facts". Caltech. 2008. Archived from the original on 2 February 2007. பார்க்கப்பட்ட நாள் 22 April 2007.
- ↑ "U.S. Government Orbital Debris Mitigation Standard Practices" (PDF). United States Federal Government. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
- ↑ Luu, Kim; Sabol, Chris (October 1998). "Effects of perturbations on space debris in supersynchronous storage orbits". Air Force Research Laboratory Technical Reports (AFRL-VS-PS-TR-1998-1093). Bibcode: 1998PhDT.......274L. http://apps.dtic.mil/dtic/tr/fulltext/u2/a361503.pdf. பார்த்த நாள்: 2013-11-28.
- ↑ Byford, Dorothy (September 2008). "Optimal Location of Relay Satellites for Continuous Communication with Mars".
- ↑ Keesey, Lori (2013-07-31). "New Explorer Mission Chooses the 'Just-Right' Orbit". NASA. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
- ↑ "Meet Tess, Seeker of Alien Worlds". https://www.nytimes.com/2018/03/26/science/tess-nasa-exoplanets.html.