வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டை (குறுக்கு வெட்டு)

கதிர்வீச்சுப்பட்டை என்பது பூமி போன்ற ஒரு காந்த கோளத்தை சுற்றியுள்ள சக்திவாய்ந்த அயனிகள் படலம். இப்படலம் அக்கோளின் காந்த சக்தியினால் நிலைநிறுத்தப்படுகிறது.

பூமியில் இது போல் இரு படலங்கள் பொதுவாக காணப்படுகின்றன. இப்படலத்தை முதலில் அமெரிக்க இயற்பியலார் சேமுசு வான் ஆலன் (James Van Allen) என்பவர் கண்டுபிடித்ததால், பூமியில் காணப்படும் கதிர்வீச்சு பட்டைவான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டை (Van Allen radiation belt) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த படலங்கள் பூமியின் காந்தப்புலத்தில் இயங்கும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் சிறிதளவு கதிர்வீச்சு ஆகியன இப்பகுதியில் அடங்கும். பூமியைச் சுற்றி சுமார் 400 கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள பகுதியே வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் எனப்படுகிறது. இப்படலங்களில் உள்ள அயனிகள் சூரியக் காற்று மற்றம் அண்டக் கதிர்கள் மூலம் வந்ததாகக் கருதப்படுகிறது.[1]

1958 ஆம் விண்ணில் செலுத்தப்பட்ட நான்காவது எக்சுபுளோரர் செயற்கைகோள் மூலம் பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏராளமான ஆற்றல் மிக்க துகள்கள் நிறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை சூரியனிலிருந்து வந்தவை. அவை பூமியின் காந்தப்புலத்தில் சிக்கி வளிமண்டலத்துக்கு வெளியே பூமியைச் சுற்றி ஒரு தடியான போர்வையைப் போல் மூடிக் கொண்டிருக்கின்றன. இப்படலங்கள் பூமியிலிருந்து 1000 முதல் 6000 கிலோ மீட்டர் வரை காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Van Allen Radiation Belts". HowStuffWorks. Silver Springs, MD: Discovery Communications, Inc.]] பார்க்கப்பட்ட நாள் 2011-06-05.