மிகத் தாழ் புவி வட்டணை
Appearance
மிகத் தாழ் புவி வட்டணை (Very low Earth orbit)(VLEO) என்பது 400 கிமீ (250 மைல்) உயரத்துக்கும் குறைவான வட்டணை உயரங்களின் வரம்பாகும் , மேலும் இது பல்வேறு சூழ்நிலைகளிலும் , தனியார், அரசு செயற்கைக்கோள் நடவடிக்கைகளிலும் பல வணிகப்பயன்பாடுகளுக்கும் முதன்மை வகிக்கிறது. வணிகப் பயன்பாடுகளில் புவிக் கண்காணிப்பு வீவாணி அகச்சிவப்பு, வானிலை, தொலைத்தொடர்பு, ஊரக இணைய அணுகல் ஆகியவை அடங்கும்.